13.4.21

பேச்சுத் திறமைக்கு ஒரு உதாரணம்!


பேச்சுத் திறமைக்கு ஒரு உதாரணம்!

கலைஞர் ஒரு பொது கூட்டத்தில் பேசியது:
     
"நீதி" க்கு முன்பு 'அ' போட்டால் என்ன வரும்?

மக்கள் சொன்னார்கள் " அநீதி"

" நியாயத்திற்கு " முன்னால் ' அ' போட்டால்?

மக்கள் சொன்னார்கள்" அநியாயம்".

" சுத்தம்" முன்னாடி' அ' போட்டால்?

மக்கள்; "அசுத்தம்".

மீண்டும் கலைஞர் கேட்டார் " யோக்கியன்" முன்னாடி 'அ' போட்டால்?

மக்கள்: "அயோக்கியன்".

இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு 'அ' போட்டது வேண்டுமா?

' அ' போடாதது வேண்டுமா?

மக்கள் சொன்னார்கள் 

'அ' போடாதது தான் வேண்டும்.

அப்போது கலைஞர் சொன்னார்.

சிந்தியுங்கள் மக்களே............      " திமுக"விற்கு முன்னால் 'அ' போட்டிருக்கிறார்கள்.  திமுக வா? அதிமுக வா?

இதை கேட்ட எம்.ஜி.ஆர்  ஓடிப்போய் தன் கட்சியின் பெயரை அஇஅதிமுக என்று மாற்றியது வேறு கதை.!
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Aamam WHY Karunanidhi told this to MGR? then he changed the name?

    ReplyDelete
    Replies
    1. எம்.ஜி.ஆர் கேட்டதாகத்தான் (பிறர் மூலம்) பதிவில் உள்ளது. கருணாநிதி அவரிடம் சொன்னார் என்று எங்கே உள்ளது?

      Delete
  2. அருமை.. ஆனால் mgr இருந்த வரை கருணாநிதி என்று ஒரு நபர் இருந்ததே தெரியவில்லை என்பதும் வேறு கதை....

    ReplyDelete
    Replies
    1. எம்,ஜி,ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்குதான் அதற்குக் காரணம்!

      Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com