20.4.21

Astrology: ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே ஜாதகர் மேலே போனது ஏன்?


Astrology: ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே ஜாதகர் மேலே போனது ஏன்

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. கேட்டை  நட்சத்திரக்காரர். நல்ல மனிதர். ஆனால் ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே (26 வயதில்) இறைவனடி சேர்ந்து விட்டார். அல்ப ஆயுளில் அவர் போய்ச் சேர்ந்தமைக்கு என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

ஜாதகர் விருச்சிக லக்கினக்காரர். கடுமையான மாரக திசை நடந்ததுதான் காரணம். ஜாதகர்  இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார். 2ம் வீடும், 7ம் வீடும் மாரக ஸ்தானங்கள் என்பது தெரியும். அதில் 2ம் வீடுதான் 7ம் வீட்டை விட அதீதமான வலிமை உடையது. ஏழாம் வீட்டதிபதி சுக்கிரன் 2ம் வீட்டில் வந்து அமர்ந்திருப்பதைப் பாருங்கள்

சுக்கிர மகா திசையில் குரு புக்தி நடக்கும்போது ஜாதகர் ஒரு விபத்தில் சிக்கி ஸ்தலத்திலேயே மாண்டு போனார். தசா நாதனும் புக்தி நாதனும் அஷ்டம சஷ்டமத்தில் (8/6 Position) இருப்பதைப் பாருங்கள்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


=======================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. அய்யா ஆயுள்காரகன் சனி ஆட்சி பெற்றுள்ளதே அய்யா...

    ReplyDelete
  2. ஆட்சி பலம் பொருந்திய சனிபகவான் ஆயுள் கொடுக்க ஏன் மறந்தார்..?
    ஒன்பதில் உச்சத்தில் உள்ள குரு நல்வாழ்க்கை அமைத்துத் தர மறந்தது ஏன்..?
    ஆதங்கத்தில்தான் ஐயா கேட்கிறேன்...

    ReplyDelete
  3. சனி ஆட்சி, குரு உட்சம் அதோடு லக்னாதிபதி பரிவர்த்தனை யோகம் பெற்று ஆட்சி.. என்னதான் மராகதிபதி திசை நடந்தாலும் லக்னாதிபதி வலுவாக இருந்தால் மாரகம் கொடுகாதல்லவா?
    எந்த லக்னமாக இருந்தாலும் குரு லக்னத்தை பார்த்தால் அது நன்று அல்லவா? கேது 12இல் உள்ளதால் கடைசி ஜென்மத்தில் மீதம் உள்ள கர்மாவை கழிக்க அந்த ஆத்மா வந்ததோ?
    தயவு கூர்ந்து விளக்கவும் அய்யா!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com