16.3.21

Astrology: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா?


Astrology: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா

ஒரு இளம் பெண்ணின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகி அனுஷ நட்சத்திரக்காரர். ஜாதகி அவரது 22 ஆவது வயதில் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றுவிட்டார். மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்று படிக்க ஆசைப்பட்டார். அவருடைய ஆசை அல்லது விருப்பம் நிறைவேறுமா

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 2ல். ஒன்பதாம் வீடுதான் வெளிநாட்டு பயணங்களுக்கு உரியது. அதன் அமைப்பைப் பொறுத்து ஜாதகன் அல்லது ஜாதகி வெளிநாடு சென்று படிக்க, வேலை பார்க்க, அங்கே குடியுரிமை பெற்று தங்கி வசிக்க என்று எல்லாம் சாத்தியப்படும். இந்த ஜாதகிக்கு வரவிருந்த கேது மகா திசையின் நாயகன் கேது ஐந்தில் - தனுசுவில். அதன் அதிபதி குரு பகவான் துலா ராசியில் அமர்ந்து கொண்டு தனது நேரடிப்பார்வையில் ஒன்பதாம் வீட்டை வைத்துக்கொண்டுள்ளார். கேது, ஜாதகப்படி செவ்வாய்க்குரிய பலாபலன்களையும் தரக்கூடியது.ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து விருச்சிக ராசியில் வலுவாக உள்ளார். அது ஜல ராசி. ஆகவே ஜாதகிக்கு வெளி நாடு சென்று படிக்கும் ஆசை கைகூடியது

கேள்விக்குரிய ஜாதகம் கீழே உள்ளது 


அன்புடன்

வாத்தியார்

=====================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com