16.2.21

Astrology: ஜோதிடம்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கடவுளே?


Astrology: ஜோதிடம்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கடவுளே

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய 55 வயதில் கஷ்டங்கள் காற்று மழையாக அடிக்கத் துவங்கின. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவருக்கு பலவிதமான அவதி. உடல் நிலை பாதிப்பு, நோய் நொடிகள், மன அழுத்தம், பணக் கஷ்டம் என்று எல்லா வழிகளிலும் துயரம்

1. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

2. அவைகள் எப்போது நிவர்த்தியாகும்

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம். 

ஜாதகருக்கு அவருடைய 55 வது வயதில் கேது மகா திசை ஆரம்பம். கேது, லக்கினாதிபதி புதனுடன் கூட்டாக 12ம் இடத்தில் உள்ளார். அது விரைய ஸ்தானம். ஆறாம் அதிபதி செவ்வாயின் பார்வை அவர்கள் மேல் விழுகிறது. அத்துடன் எட்டாம் இடத்துக்காரன் சனீஷ்வரனின் பார்வையும் அவர்கள் மேல் விழுகிறது. மேலும் மாரக அதிபதி குரு எட்டாம் இடத்தில் அமர்ந்தவாறு அவர்களைப் பார்க்கிறார். போதாதா? இத்தனையும் சேர்ந்து கேது திசை மொத்தமும் அவரைப் படாதபாடு படுத்தின!!! 

அடுத்து வந்த சுக்கிர மகாதிசை எல்லாத் துயரங்களையும் அடித்து விரட்டி அவருக்கு நன்மை செய்யத் துவங்கின. ஆமாம். சுக்கிரன் உச்சம் பெற்று முக்கியமான கேந்திரத்தில் இருப்பதோடு, இராசி நவாமசம் இரண்டிலும் ஒரே இடத்தில் இருந்து வர்கோத்தம பலத்துடன் இருக்கிறார். அதையும் கவனியுங்கள்!!!! 


அன்புடன்

வாத்தியார்

========================================---------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com