6.1.21

சினத்தைத் தவிர்த்து சிறப்பாக வாழ்வோம்!!!


சினத்தைத் தவிர்த்து சிறப்பாக வாழ்வோம்!!! 

'' சினத்தை தவிர்ப்போம்..''

.................................. 

நாம் ஒரு செயலை சரி என்று தீர்மானித்துக் கொண்டு வைத்து இருப்போம். அந்த செயலை மற்றொருவர் மீறும் போது நம்மை அறியாமலே நமக்கு மற்றவர் மீது சினம் வருவதற்கான முதல் படி ஆகும்

உலகத்தில் உள்ள அனைவரையும் நம்மால் சரியான நேர்கோட்டில் கொண்டு செல்ல முடியாது. இதனால், நமது வேலையும் செய்யமுடியாமல் தேவையில்லாத பிரச்சனைகளில் நாம் செல்ல நேர்ந்திடும்

ஓர் அரசன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடிய வில்லை

ஒரு நாள் அறிஞர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்து இருந்தார்.அவரை சந்தித்து தன் குறையை சொன்னான் அந்த மன்னன்.. 

அவர் மன்னனிடம்,' 

' என்னிடம் அதியமான பொன்னால் செய்த ஒரு குவலை ஒன்று இருக்கிறது..அதில் தண்ணீரை நிரப்பி குடித்து வந்தால் நாளடைவில் உன் சினம் இல்லாமல் போய்விடும் என்று சொல்லி அந்த குவளையை அவனிடம் கொடுத்தார்

"உனக்குச் சினம் எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போது இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக் குடி; பிறகு சினமே வராது" என்று கூறிவிட்டு சென்றார்

அன்றில் இருந்து அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது

பல வருடங்கள் சென்றன.அந்த குவளையை கொடுத்த அந்த அறிஞர் மீண்டும் அந்த நாட்டுக்கு வந்தார்

அரசன் அந்த அறிஞரை சந்தித்து குவலை கொடுத்ததற்காக பலமுறை நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்

"மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்ப வில்லை. அது அதிசயமான குவளை அல்ல,. சாதாரணமான. குவளைதான்... 

''சினம்'' வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம்தானே குறையும்.. 

தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன

ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறினார்

ஆம்.,நண்பர்களே.., 

மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும்அதை சகித்துக் கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

நாம் கோபப்படும் போது மற்றவர்கள் நம்மீது கோபப்படும் போதும், நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது

எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம்

எனவே, சினத்தை தணித்து அனைவரிடத்திலும்,அன்பு செலுத்தி, நற்புகழ் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வோம்.🙏🏻🌺💐

 படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்

==========================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. சிறப்பு குருநாதரே

    ReplyDelete
  3. நல்லது. நன்றி சண்முகசுந்தரம்

    ReplyDelete
  4. அன்நோன் என்பது என்ன உங்கள் பெயரா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com