8.12.20

சுஜாதா சிறுகட்டுரை - போதை லேகியம்!!!!


சுஜாதா சிறுகட்டுரை - போதை லேகியம்!!!!

1970 களில் குமுதம் இதழில் வந்தது - படியுங்கள் செமகிக் காரண்ட்டி 

ஒரு வட இந்திய நகரில் நண்பர்கள் இருவருடன் இரவில் கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு கடையில் கறிவேப்பிலைத் துவையல் போல ஏதோ பச்சிலை அரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். பலர் வந்து ஆளுக்கு ஒரு பெரிய கோலி அளவுக்கு வாங்கி வாயில் அடக்கிக் கொண்டு, ஒரு கிளாஸ் தண்ணீருடன் மளக்கென்று விழுங்கி விட்டுக் காசு கொடுத்துவிட்டுத் தம் வழியே சென்றார்கள்.

இது என்ன? ஸீனியர் நண்பரைக் கேட்டபோது, ‘‘சாப்பிட்டுப் பார்க்கிறீர்களா?’’ என்றார்.

‘‘என்ன செய்யும்?’’ என்றேன்.

‘‘வேலை செய்யும்’’ என்றார்.

அதையும் பார்த்து விடலாம் என்று ஸ்பெஷலாகப் பாதாம் பால் கலந்து ஆளுக்கு ஓர் உருண்டையை விழுங்கினோம். விழுங்கிவிட்டு நடந்தோம். அரை மணி ஆயிற்று. ஒன்றுமே ஏற்படவில்லை. சாப்பிட்ட அளவு போதாது, இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் (வேண்டாம்! சுத்தும்!) என்று பிடிவாதமாக மறுபடி அந்தக் கடைக்குச் சென்று அதே அளவு துவையலை .உட்கொண்டோம்.

நேராக ஓர் ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு ஓர் ஓட்டைத் தியேட்டரில் போய் உட்கார்ந்தோம். ம்ஹும்... ஒன்றும் நிகழவில்லை எங்களுக்கு. அமெரிக்க கட்டிடக் கலை பற்றி ஒரு டாக்குமெண்டரி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு காட்சியில் ஒரு ஃப்ரேம் சட்டென்று மாறியது. அவ்வளவுதான். என்னுள் ஸ்விட்ச் போட்டாற் போல் மருந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

முதன்முதலில் உடம்பெல்லாம் சூடாயிற்று. ஜப்பானிய நீராவிக் குளியல்போல், காது நுனியிலிருந்து ஆரம்பித்து உடம்பு பூராவும் சூடு. நாக்கு உலர்ந்து எதிரே திரைப்படம் தூர தூரச் செல்ல ஆரம்பித்தது. இந்த வேக்காட்டில் இனி உள்ளே உட்கார முடியாது என்று எழுந்து வெளிவந்தால் நடக்க முடிகிறதா? முழங்காலுக்குக் கீழ் பஞ்சு போலவும், பூட்ஸுக்குள் மேகம் போலவும் ஒரே தொள தொள. ஒரு கடைக்குச் சென்று ஆரஞ்சு ஜூஸ் உறிஞ்சிப் பார்த்தோம். நாக்கு நனையவில்லை.

மனத்திற்குள் பயம் ஏற்பட்டது. திரும்பப் போய்விடலாம் என்று டாக்ஸியைக் கூப்பிட்டேன். நண்பர்களில் ஒருவன், ‘‘என் பல்ஸைப் பார். என் பல்ஸைப் பார்’’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பது தூரத்தில் கேட்டது. என்னை விட்டு நானே ரொம்பத் தொலைவில் நடந்து கொண்டிருப்பது போன்ற .உணர்ச்சி.

எப்படியோ டாக்ஸி பிடித்தோம். டாக்ஸியில் செல்லும் போது நகரமே துப்புரவாக அலம்பி விட்டிருப்பது போலத் தெரிந்தது. நியான்கள் பளிச்சென்று ஒளிர்ந்தன. 

உடன் ஒரு பயம். ‘நீ காலி, நீ காலி’ என்று ஒரு கோரஸ் (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்). டாக்ஸியில் மூன்று மாதம் பிரயாணம் செய்து எங்கள் விடுதியை அடைந்தோம். யார் பணம் கொடுத்தார்கள்? எப்போது படுக்கையில் விழுந்தேன்..?

என்னைப் பொறுத்த வரை ஒரு தடவை
-----------------------------------------------
படித்ததில் வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே!
    என் அபிமான சிறுகதை மன்னனின்
    "போதை லேகியம்'படித்து கிக் வந்தது உண்மைதான் ஆசானே!😀

    ReplyDelete
  2. நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com