23.12.20

ஒப்பீடு வேண்டாம்!


ஒப்பீடு வேண்டாம்!    

*மினிமலிசம் (Minimalism)..*

சான்பிரான்சிஸ்கோ பெடரல் ரிசர்வ் வங்கி தற்கொலைக்கும், வருமானத்துக்கும் என்ன தொடர்பு என ஆராய்ந்தது.

அதில் தெரிய வந்த ஒரு விவரம் மிக ஆச்சரியகரமானது...ஒருவரின் அண்டைவீட்டார், நண்பர்கள்...இவர்களின் வருமானம் உயர்ந்தால் அவர் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு 10% கூடுகிறது. ஏழை, பணகாரர் வேறுபாடே இதில் கிடையாது...

அண்டை வீட்டார், நண்பர்களின் வருமானம் உயர்ந்தால் நாம் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

ஒப்பீடல் தத்துவம் தான்...

"அவனுக்கு வருமானம் உயர்கிறது, பெரிய கார் வாங்கிட்டான், பாரின் ட்ரிப் போறான், பையன்/பொண்ணு பெரிய காலேஜ்ல படிக்கறாங்க..."

யாருடன் நீங்கள் உங்களை சமமாக கருதி ஒப்பிடுகிறீர்களோ, அவர்கள் வருமானம் எல்லாம் மேலேறி, உங்கள் வருமானம் ஏறவில்லை எனில் வருத்தபட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

சேரன் இயக்கத்தில் "திருமணம்" எனும்  திரைப்படம் கண்டேன். திருமணத்தில் மினிமலிசம் எனும் கோட்பாட்டை வலியுறுத்தி அழகாக எடுக்கபட்ட படம். அதில் சொல்லப்பட்ட பல விசயங்கள் அதிர்ச்சியை அளித்தன.

கல்யாணம் இன்விடேசன் ஒன்றுக்கு ஐநூறு ரூபாய். 

3000 பேருக்கு இன்விடேசன் கொடுக்க 12 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது.

கல்யாணம் மண்டப செலவு ஆறு லட்சம்.

சுமாரான மிடில்க்ளாஸ் கல்யாணம் செலவு 35 லட்சம் வருகிறது.

எல்லாம் ஒரு நாள் விசேசத்துக்கு...

மகள் கல்யாணத்துக்கு கடன் வாங்கி, கடனை கட்ட முடியாமல் திணறும் மேலதிகாரி.

"என் அண்ணனுக்கு பெண் கொடுத்த இடத்தில் அவனை நல்லா சப்போர்ட் பண்றாங்க. எனக்கு அப்படி சப்போர்ட் பண்ணி விடற மாதிரியான மாமனார் வேணும்" என ஆசைப்படும் அவரது மருமகன்...இதனால் லஞ்சம் வாங்கும் நிலைக்கு போய் கைது ஆகிறார் மாமனார்.

இதற்கும் மருமகன் நல்ல வேலைக்கு தான் போகிறான். ஆனால் அதைவிட நல்ல ஸ்டேடஸ் வேணும் என ஆசை.

ஆக மற்றவர்களுடன் தன்னை அனைத்திலும் ஒப்பிட்டுகொள்வது.

அவர்களை விட குறைவாக செலவு செய்தால் ஸ்டேடஸ் போய்விடும், அவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் என நினைத்துக்கொள்வது.

கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்வது.

அதை பார்த்து அனைவரும் காப்பி அடித்து அதை ஒரு மரபாக, கலாசாரமாக உருவாக்கி வைத்திருப்பது.

*அதை கேள்வி கேட்பவர்களை "கஞ்சம், பிசினாரி" என ஏளனம் செய்வது...*

"இந்திந்த செலவை இப்படித்தான் செய்யணும்" என்பதையே ஒரு மரபாக ஆக்கி வைத்திருப்பது, அதை வைத்து பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் அடித்துக்கொள்வது.

"எங்க அந்தஸ்துக்கு தக்க மாதிரி பண்ணிடுங்க" என்பது.

*"கல்யாணத்துக்கு பெரிய மனுசங்க வர்ராங்க, சிக்கனமா செஞ்சா அவங்க என்ன நினைப்பாங்க.."* என்பதையே காரணம் காட்டி செலவுகளை ஏற்றுவது.

"கடன் வாங்கி ஆடம்பரமா கல்யானம் பண்ணனும்னு எந்த வேதத்தில், சாஸ்திரத்தில் சொல்லிருக்கு" என சேரன் அழகாக கேட்பார்.

*இம்மாதிரி செலவுகளை செய்கையில் நல்லா இருக்கும்.  செய்து முடித்த பின் வாழ்நாள் முழுக்க கடன், நல்லபடி துவங்கவேண்டிய திருமண வாழ்க்கை அடிதடியில் துவங்குவது*.

இது தான் கலாசாரம், மரபு என எங்கே யார் சொன்னார்கள்?

மற்றவர்களை பார்த்து எதையும் செய்வதை நிறுத்த வேண்டும்.

கடன் வாங்குவதில், தண்ட செலவு செய்வதில் இருக்கும் போட்டியால் தான் குடும்பமானமோ, மரியாதையோ  காப்பாற்ற படுகிறது என எதுவும் கிடையாது.

இதை எல்லாம் பழைய தலைமுறைகளை சார்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்போதைய தலைமுறைதான் சிக்கனமான திருமணம், மினிமலிசம் அடிப்படையிலான வாழ்க்கை எனும் புதிய மரபை முன்னெடுக்க வேண்டும்.
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. ஐயா, இதுவும் பழைய தலைமுறை புதிய தலைமுறை என்ற ஒப்பீடில் முடிகிறதே ! இதுதான் இவ்வுளக இயல்போ!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com