22.11.20

Astrology: Quiz: புதிர்: 20-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 20-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, சுவாதி நட்சத்திரக்காரர். அத்துடன் மிதுன லக்கினக்காரர். ஜாதகருக்கு அவருடைய 55 வயதில் இருந்து, மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவர் அவதிப்பட்டார்!!! அந்த வயதிற்குப் பிறகு அவ்வாறு அவதிப்பட அதாவது துன்பப்பட் ஜாதகப்படி என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!!”  என்று கேட்டிருந்தேன்.

பதில்: தசா நாதன் கேது 12ல் இருப்பதோடு, லக்கினாதிபதி கேதுவையும் அணைத்துக் கொண்டுள்ளார். அத்துடன் ஆறாம் அதிபதி செவ்வாயின் பார்வையையும் பெறுகின்றார். செவ்வாய் ஆறாம் வீட்டில் வலிமையாக உள்ளார். 8ஆம் வீட்டுக்காரர் சனீஷ்வரனும், 7ம் அதிபதி (மாரக அதிபதி) குருபகவானும் 12ம் வீட்டிலுள்ள கேதுவையும் லக்கினநாதனையும்  பார்க்கின்றார்கள். இதுவே உடல் நலக்குறைவிற்கும் மற்ற துன்பங்களுக்கும் முக்கிய காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 
.
இந்தப் புதிரில் 8 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 27-11-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
jaga.gm commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
குருவிற்கு வணக்கம்! மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு காரணம் 1) 54 வயது கேது தசை படுத்தி எடுத்து இருக்கும் 7 வருடம் மன அழுத்தம்.தந்து இருக்கும்.., லக்கினாதிபதி புதன் 12 இல் 3) 2 இம் அதிபதி சூரியன் அம்சத்தில் தன் வீட்டற்கு 12 இல், ராசியில் சூரியன் ஆட்சி, இரு புறம் சனி கேது , பணம் தடை பட்டு இருக்கும் 3) 6 இல் ராகு செவ்வாய் தோல் சம்பந்த நோயி வந்து இருக்கலாம் , அம்சத்தில் செவ்வாய் தன் வீட்டற்கு 12 இல், யோககாரகன் சுக்கிர தசை வந்த பிறகு நல்ல இருந்து இருக்கும் சுக்கிரன் வர்கோத்தமம் உச்சம் . நன்றி ஜெகதீசன்
----------------------------------------------------
2
RAMVIDVISHAL commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
1. ருன ரோக சத்ரு ஸ்தானாதிபதி செவ்வாய் 6ம் இடத்தில் இருந்து 7 ம் பார்வை லக்னாதிபதி மேல். மேலும் நீச ராகு பார்வை நீச கேது மற்றும் புதன் மேல். சனியின் பார்வை புதன் & கேது மேல். 2. செவ்வாயின் 8ம் பார்வை லக்னத்தின் மேல். 3. லக்னாதிபதி 12 ல் மறைவு மற்றும் கேது கூட்டணி. கேது தசையில் பாடாய் படுத்தி உள்ளது. இந்த துன்பம் புதன் தசை கேது புத்தியில் ஆரம்பம் ஆகி இருக்கலாம். 4.பின் வரும் சுக்கிரன் மற்றும் சூரிய தசையில் நிலைமை சிறிது மாறலாம். 5. ஜாதகத்தில் குரு நீசம், 6. சூரியன் மற்றும் சுக்கிரன் உச்சம் ஆறுதலான அமைப்பு பிற் காலம் ஓடி விடும் அந்தந்த தசையில்.
-----------------------------------------------------
3
kmr.krishnan commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஜாதகர் 26 எப்ரல் 1937 காலை 10 மணி 11 நிமிடம் போல் பிறந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன். 1. லக்கினத்திற்கும் லக்கினாதிபதிக்கும் லக்கினத்திற்கு நோய் ஸ்தான 6ம் அதிபதியான செவ்வாயின் பார்வை. ஆட்சி பெற்ற செவ்வாயின் பார்வை பகைவனான புதன் மீது. 2.லக்கினாதிபதி புதனும், தன ஸ்தானாதிபதி சந்திரனும் 6 க்கு 8 என்ற நிலையில். 3.54 வயதுக்கு கேதுதசா துவங்கிவிட்டது. சனி, செவ்வாய் பார்வை பெற்ற கேது 12ல்.மற்றும் லக்கினாதிபதி புதன் 12ல் மறைந்து செவ்வாய் சனி பார்வை பெற்றது. 4. எனவே 55 வயது போல கேது தசாவில் உடல், மன, தன கோளாறுகள் தோன்றி ஜாதகரை அலைக்கழித்தது.
--------------------------------------------------------------------------
4
தமிழ்ச்செல்வன், மாச்சம்பட்டு commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஐயா, வணக்கம், பதில்: 1. லக்னாதிபதி புதன் 12 ல் மறைவு பெற்று, 52 வயதுக்கு மெல் வந்த லக்னாதிபதியின் தசையில் ஜாதகரை படுத்தி எடுத்தி விட்டார். 2. மூன்றாம் அதிபதி சூரியன் உச்சம் பெற்று சந்திரனை ஏழாம் பார்வையாக பார்த்து மன நிம்மதியை கெடுத்தார். 3. ஆட்சி பெற்ற 6 ஆம் அதிபதி செவ்வாய் ராகுவுடன் கூட்டு சேர்ந்து ல்க்னாதிபதியுடன் சேர்ந்த கேதுவின் மீது பார்வை, ஜாதகருடைய உடல் நலனை கெடுத்தார்.
---------------------------------------------------------------------------
5
Unknown commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஐயா ஜாதகரின் லக்னாதிபதி புதன் 12ல் உடன் கேது, இந்த அமைப்பின் பலன் அவரின் கேது தசையில் நடந்தது. பணம் மற்றும் உடல் மற்றும் பண பிரச்சினைக்கு காரணம் 11-ம் அதிபதி செவ்வாய் 6-ல் அமர்ந்தது. நன்றி.
------------------------------------------------------------------------
6
ஜகதீஸ்வரன் commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்.கேது தசையில் பிரச்சினை. 6 ஆம் அதிபதி செவ்வாயின் பார்வை மற்றும் சாரம். ஏழரைச்சனி வேறு.
------------------------------------------------------------------
7
csubramoniam commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
ஐயா கேள்விக்கான பதில் 1 .லக்கினாதிபதி புதன் விரயத்தில் நீச கேதுவுடன் ஆறாம் அதிபதி செவ்வாயின் நேரடி பார்வையில் 3 .ஜாதகரின் இரண்டாம் அதிபதியும் மனகரகனும் சந்திரன் 4 .ஐம்பத்தி ஐந்தாவது வயதில் கேது திசை சந்திர புத்தியில் பண தட்டுப்பாடு மனஅழுத்தம் ஆறாம் இடத்தானின் பார்வையால் ஏற்பட்டுஉள்ளது நன்றி, தங்களின் பதிலை ஆவலுடன்
--------------------------------------------------------
8
Jeyalaxmi commented on "Astrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்!!!"
20/11/20 புதிருக்கு பதில். ஜாதகர் சுவாதி நட்சத்திரம் மிதுன லக்னம். ஜாதகரின் 55 வயதில் ஆரம்பித்த கேது தசையில் கேது ஆறுக்குடைய ஆட்சி பெற்ற செவ்வாயின் பார்வை பெற்று உள்ளார். மேலும் பாதகாதிபதி குரு பகவான் நீசம் பெற்றாலும் அவரின் பார்வை நன்மை செய்ய இயலாமல் போய்விட்டது. எட்டுக்குடைய சனிஷ்வரனார் விரயாதிபதியுடன் இணைந்து பார்க்கிறார். சந்திரன் பெளர்ணமி தினத்தில் இருப்பதும் தனக்கு எதிரான நட்சத்திர காலில் இருப்பதும் ஜாதகரின் பொருளாதார மற்றும் மனரீதியான சிரமத்திற்கு காரணம்.
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. அய்யா வணக்கம், தங்கள் தொகுப்புகள் படிக்க இனிமையாகவும்,தெளிவாகவும் உள்ளன.கருத்துகள் நிறைந்து உள்ளன.ஜோதிடம் மட்டும் இல்லாமல் மற்ற பொதுவான கருத்துகள் நிறைந்து படிக்க இனிமையாக உள்ளது.நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com