10.9.20

தங்கத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு!!!!


தங்கத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு!!!!

🔔BREAKING NEWS*

*🔷🔶கோவையில் நகைப்பட்டறை தொழிலாளர்கள், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் என  தங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா  தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருவதால்  தங்கம் மூலம் கொரோனா தொற்று பரவுகிறதா? என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.*

*🔷🔶கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.*

*🔷🔶ஊரடங்கு தளர்வுக்கு பின் பல்வேறு கம்பெனிகள், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுடன் பணிகளை துவங்கியது. நகைக்கடைகள், நகைப்பட்டறைகளை சேர்ந்தவர்களும் தங்களின் பணிகளை துவங்கினர்.*

*🔷🔶இந்நிலையில், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.*

*🔷🔶இதில், கோவையில் செயல்பட்டும் வரும் தங்க நகைக்கடை ஒன்றில் 58 பேர், மற்றொரு கடையில் 48 பேர், துடியலூர் அருகே செயல்பட்டு வரும் நகை தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளர் உள்பட 25க்கும் அதிகமானவர்கள், செல்வபுரத்தில் தங்க நகைப்பட்டறைகளில் பணியாற்றி வந்த 120க்கும் மேற்பட்டவர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.*

*🔷🔶தொடர்ந்து தங்க நகைப்பட்டறைகள், நகைக் கடைகள் நிறைந்துள்ள செல்வபுரம், தெலுங்குவீதி, பெரியகடை வீதி, ராஜவீதி உள்பட பகுதிகளில் தினமும் 50 முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.*

*🔷🔶கோவையில் பிரபலமான நகைக்கடை உரிமையாளர் ஒருவர்  கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். சமீப காலமாக கோவையில் நகைக்கடைகள், நகைப்பட்டறைகளில் வேலை பார்ப்பவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதிகளவில் கொரோனா  பரவி வருகிறது.*

*🔷🔶இதனால் தங்க நகைகள் மூலம் கொரோனா பரவுகிறதோ என்ற சந்தேகம் சுகாதாரத்துறைக்கு எழுந்துள்ளது.  இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-*

*🔷🔶தங்கம் உள்ளிட்ட உலோகங்களில் 10 நாட்கள் வரை கொரோனா கிருமி உயிருடன் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.*

*🔷🔶இதனால் நகைக்கடைகள், பட்டறைகளில் நகையை அனைவரும் தொடுவதன் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவ வாய்ப்புள்ளது.*

*🔷🔶தவிர பட்டறைகளில் நெருக்கமான இடங்களில் அதிகளவிலானோர் பணிபுரிவதால் நோய்த்தொற்று ஏற்படும் இடங்களாக மாறியுள்ளன.*

*🔷🔶திருமணங்கள் உள்பட விசேஷங்களுக்கு நகைகள், துணிகள் எடுப்பதற்காக அருகிலுள்ள திருப்பூர், ஈரோடு உள்பட மாவட்டங்களில் இருந்தும் கோவைக்கு அதிகளவில் வருகின்றனர். இதன் முலம் அதிகளவு பரவும் வாய்ப்புள்ளது.*

*🔷🔶இதனை தவிர்க்க நகை, துணிக்கடைகள் உள்பட எந்த ஒரு பெரிய கடைகளாக இருந்தாலும் பொதுமக்களை அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க அனுமதிக்கக்கூடாது. பொது மக்களை கட்டாயம் கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்திய பிறகே அனுமதிக்க வேண்டும்.*

*🔷🔶2 மணி நேரத்துக்கு ஒருமுறை கடை முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். முடிந்த வரையில் கடைகளில் அதிகளவில் ஆட்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.*

*🔷🔶பொதுமக்களும் அவசியமின்றி கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே செல்லலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.*
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com