11.6.20

வலிகளையும் வேதனைகளையும் எப்படித் தாங்குவது?


வலிகளையும் வேதனைகளையும் எப்படித் தாங்குவது?

வாழ்க்கை என்றால் ஆயிரம் வலிகளும், வேதனைகளும், துன்பங்களும் இருக்கத்தான் செய்யும். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்றால் இவற்றை எல்லாம் கடந்தால்தான் சிகரங்களை அடைய முடியும்..

வலிகளை ஏற்றுக் கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காண முடியாது.

பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந்தோல்வி களும், பொறுக்க முடியாத வலிகளும் தான்..

வலி வந்தபோது தான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடுதான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப் பட்டதுதான் இந்த வாழ்க்கை.

உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் போதுதான் அழகான உடற் கட்டைப் பெற முடிகிறது.

இப்படித்தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக் கொள்ளும் போதுதான் வளமான வாழ்க்கை வாழ முடியும்.

புகழ்பெற்ற ஓவியர் ஒனாயர்,’ரூமேட்டிஸம்’ என்னும் நோயால் பாதிக்கப் பட்டு இருந்தார்.

ஆனால் அவர் தன் கடும் கை வலியையும் பொறுப் படுத்தாமல் ஓவியங்களை வரைந்து கொண்டு இருந்தார்..

அவருடைய நண்பர்கள், இந்த வயதான காலத்தில் வலியின் உச்சத்தில் நீங்கள் வரைவது அவசியாமா..? பேசாமல் ஒய்வு எடுத்துக் கொள்வது தானே.? என்றார்கள்.

அதற்கு ஓவியர் ஒனாயர் சொன்னார்,

வலி நீடிப்பது கொஞ்ச நேரம் தான்.ஆனால் வரைவதன் இன்பமோ பலநாட்கள் நீடிக்கும்.. வரைகிற ஓவியமோ காலம் கடந்தும் நீடிக்கும்.. என்றார்..

வலி பொறுக்க முடிய வில்லை என்றால் நீங்கள்  முன்னேறவில்லை என்று அர்த்தம்.

நீங்கள் உயரும் போது , உங்களின் இன்றைய நிலையை விட்டு உயர்ந்த  நிலைக்கு செல்லும் போது , புது புது பிரச்சனைகள்  வரத்தான் செய்யும்.

அவற்றை  சமாளிக்க வேண்டும். அப்போதுதான் உயர்வு அடைய முடியும்.

பெரிய நிலையை அடைந்தவர்கள், உயர்ந்தவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

எவ்வளவு வலிகளை தாங்கி வந்திருப்பார்கள் என்று தெரியும். தூக்கம் தொலைத்து, பசி, தாகம் மறந்து, பல சுகங்களை தியாகம் செய்து வந்து இருப்பார்கள்

ஆம்.,நண்பர்களே..,

நாம் இலட்சியத்தை அடைய வேண்டுமானால் சிறிய வலிகளையும், வேதனைகளையும்,துன்பங்களை பொறுத்துத்தான் ஆக வேண்டும்..

வலிகளையும், இடையுறுகளையும் தாண்டி செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள். !!!!
ஆக்கம் உடுமலை சு.தண்டபானி..!!!!
-------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
========================================
*எதை இழந்தீர்கள்*
*என்பது முக்கியமல்ல..*

*என்ன மிச்சம் இருக்கிறது*
*என்பதே முக்கியம்..!*

*இழந்ததற்கு வருந்த வேண்டும்*
*என்றால் வாழ்நாள் போதாது..!!*

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. Good morning sir very useful and nice information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    மிகவும் இரசிக்கத் தக்க பதிவு.
    ஓவிய்ச ஒனாயர் அவர்களின் வாக்குகள் புகழ் பெற்றவை.
    "வலி நீடிப்பது கொஞ்ச நேரம் தான்.ஆனால் வரைவதன் இன்பமோ பலநாட்கள் நீடிக்கும்.. வரைகிற ஓவியமோ காலம் கடந்தும் நீடிக்கும்.. என்றார்.
    மறக்க முடியாத வார்த்தைகள்!👍🙏

    ReplyDelete
  3. ////Blogger Shanmugasundaram said...
    Good morning sir very useful and nice information thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  4. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    மிகவும் இரசிக்கத் தக்க பதிவு.
    ஓவிய்ச ஒனாயர் அவர்களின் வாக்குகள் புகழ் பெற்றவை.
    "வலி நீடிப்பது கொஞ்ச நேரம் தான்.ஆனால் வரைவதன் இன்பமோ பலநாட்கள் நீடிக்கும்.. வரைகிற ஓவியமோ காலம் கடந்தும் நீடிக்கும்.. என்றார்.
    மறக்க முடியாத வார்த்தைகள்!👍🙏//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com