19.5.20

வியக்கவைக்கும் கிணறு!!!


வியக்கவைக்கும் கிணறு!!!

சுவஸ்திக கிணறு..... கி.பி. 800 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சிக் காலத்தில் சுவஸ்திக வடிவில் இக்கிணறு வெட்டப்பட்டது என்றும், தந்தி வருமனின் பட்டப் பெயரின் ஒன்றான மார்பிடுகு பெருங்கிணறு என பெயரிடப்பட்டிருந்தது என்றும் இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது என தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கிணறு உள்ளது என்று வைத்த போர்டில் வாசித்தோம்.

மேலும் நாலு மூலை கேணி என்றும் இக்கிணற்றில் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் குளிக்கும்போது எதிரில் இருக்கும் படிக்கட்டுகளில் குளிப்பவர்கள் தெரியாத அளவிற்கு கல்தூண்களால் ஆன மறைவு கற்களை கொண்டு அமைந்துள்ளது. மாமியார் குளித்தால் மருமகளுக்கு தெரியாது, மருமகள் குளித்தால் மாமியாருக்கு தெரியாது என்பதால் இதற்கு மாமியார்-மருமகள் குளம் என்று பெயர் பெற்றதாக கிராம மக்களால் காலம் காலமாக அழைக்கபட்டு வருகிறது.

இக்கிணற்றை தாங்கள் காணவேண்டுமெனில் திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் 108 வைணவத் திருத்தலங்களின் ஒன்றான திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ளது.

இந்த கோவிலின் ஒரு தேர் திருவிழாவிற்கு பெஸ்ட் போட்டோகிராபி டுடே ஆசிரியர் பழனிக்குமார் போட்டோ வாக் சென்றிருந்தபோது, இக்கிணற்றை முழுவதுமாக படமெடுக்க முயன்றபோது, அல்ட்ரா வைடு லென்ஸ் இல்லாத காரணத்தால் முடியவில்லை. அருகிலிருந்த நாற்பதடி உயர தண்ணீர் டேங்க் மேலேறி, பலமான காற்று வீசினாலும், ரிஸ்க் எடுத்து, பதிவு செய்த காட்சிதான் நீங்கள் பார்ப்பது.


----------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com