14.11.19



நன்மையும் தீமையும் எப்படி வரும்?

பழமையான பாடல் ஓன்று...

இன்று உலகம் முழுவதும் தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.
அது கணியன் பூங்குன்றனார் எழுதிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்...."
இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.
பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது.....
முழு பாடலும்... அதன் பொருளும்....உங்களுக்காக!!!!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

பொருள்
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.


*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*
*சாதலும் புதுவது அன்றே;...*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*
*ஆதலின் மாட்சியின்*
*பெயோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*

– கணியன் பூங்குன்றனார்


பாடலின் வரிகளும், பொருளும்:

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."

எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."
தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*

துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...

*"சாதல் புதுமை யில்லை*.."

பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......

*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......

*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....

ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."

இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*

எழுதியவர் ஊர்:
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் தாலுக்கா
மகிபாலன்பட்டி கிராமம்!!!

அவர் பிறந்த இடத்தில்
நம்மை ஒரு
பாழடைந்த பலகை மட்டுமே
நம்மை
வரவேற்கிறது.
வாழ்க
நமது தமிழ்த்தொண்டு.......!!!!!
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!!

8 comments:

  1. Respected Sir,

    Happy morning. Very very informative one...
    Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    good explanation./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  3. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning. Very very informative one...
    Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn./////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!!

    ReplyDelete
  4. ஐயா படத்தில் உள்ளது உவ சாமிநாதையர்

    ReplyDelete
  5. u ve cha photo pottu keezhae kanıysan poonkundranaar ender ezhuthi yirukkael...

    ReplyDelete
  6. ////Blogger நான் ஒரு சர்வாதிகாரி said...
    ஐயா படத்தில் உள்ளது உவ சாமிநாதையர்/////

    சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி! படத்தை நீக்கி விட்டேன்!!!!

    ReplyDelete
  7. /////Blogger Hari Krishna said...
    u ve cha photo pottu keezhae kanıysan poonkundranaar ender ezhuthi yirukkael...//////

    சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி! படத்தை நீக்கி விட்டேன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com