3.10.19

எவ்வளவு கேட்டாலும் மறுக்காமல் தருபவர் யார்?


எவ்வளவு கேட்டாலும் மறுக்காமல் தருபவர் யார்?

தேவை என்பது வாழ்க்கை முழுவதும் மாற்று வடிவத்தில் வந்து நம்மை ஏங்க வைக்க கூடியது தான்.

*யாரும் பாத்துடாமல் அழுவது ஆண்கள். யாராச்சும் ஆறுதல் சொல்லுவாங்கனு அழுவது பெண்கள். எல்லாரும் நம்மள பாக்கனும்னே அழுவது குழந்தைகள்.*

கணவன் மனைவிக்குள்ள யார் அதிகமா நேசிக்கறாங்க அப்படிங்கறது முக்கியமில்லை, சின்ன சின்ன சண்டைகள் வரும் பொழுது அதில் யார் விட்டு குடுத்து போறாங்க அப்படிங்கறது தான் முக்கியம்.

*பணம் தான் பிரதானம் என்பதில் ஐயமில்லை. ஆனால் உறவுகளுக்குள் பாசத்தை தீர்மானிப்பதும் பணம் எனும் போது தான் யார் மீதும் பற்றில்லாமல் போகிறது.*

எவ்வளவு கேட்டாலும் மறுக்காமல் தருபவன் இறைவன். கொஞ்சம் கொடுத்தாலும் சொல்லிக் காட்டுபவன் மனிதன். இறைவனை நம்பியே உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்.

ஒரு விஷயத்தை அடைய எந்த முயற்சியும் செய்யாமல், அதற்காக திட்டமிடாமல் அதற்கான தகுதியே கூட இல்லாத நிறைய பேருக்கு அதிர்ஷ்டவசமாக அந்த விஷயங்கள் தானாகவே கிடைக்கும்.* நிறைய திட்டமிட்டு, நிறைய உழைத்து அதற்காகவே அல்லும் பகலும் கஷ்டப் பட்டுக் கொண்டு இருக்கின்ற நிறைய பேருக்கு அவர்கள் நினைத்த விஷயங்கள் நடக்காமலே போய் விடும், இந்த இரண்டுக்குமே *காரணமாக இருப்பது வினைப் பயன் மட்டுமே!* நாம் செய்த, செய்து கொண்டு இருக்கும் புண்ணியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்பாராத நேரத்தில் நமக்கு அதிர்ஷ்டங்களாக வருகின்றன, அதே போல் பாவங்களும் கூட ஒன்று சேர்ந்து எதிர்பாராத நேரத்தில் துரதிர்ஷ்டங்களாக வந்து துயரத்தில் தள்ளும்!

*நம்முடைய சந்தோஷங்களுக்கும் நமக்கு கிடைத்த செல்வங்கள் மற்றும் வசதி வாய்ப்புகளுக்கும் காரணம் நாம் மற்றும் நமது முன்னோர்கள்  செய்த புண்ணியங்கள்* என நினைத்திருந்தால், நமக்கு அகங்காரமோ நான் என்ற கர்வமோ வந்திருக்காது, அதன் மூலம் பிறருக்கு தீங்கு செய்யாமல் இருந்திருப்போம், அந்த தீங்கின் மூலம் பிறர் துன்பப் பட்டு இருக்க மாட்டார்கள், அந்த துன்பமும் அவர்களின் சாபமும் நமக்கு வந்திருக்காது, நமக்கு சாபமோ பாவமோ வராமல் இருந்திருந்தால், நமது குழந்தைகள் அந்த பாவத்தினால் கஷ்டப்பட்டு இருக்கமாட்டார்கள், நாமும் மீண்டும் மீண்டும் பிறந்து அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது! நாமும் வாழ்ந்து, பிறரும் கூட நம்மை போல் வாழ இடமளித்து அனைத்து உயிர்களோடும் இணைந்து வாழ்வதே பூரணமான வாழ்வு!!!!

பெற்றுக் கொண்ட உதவியை மறக்காதீர்கள். எதையாவது எதிர் பார்த்து உதவி செய்தால் அதற்குப் பெயர் உதவி அல்ல வியாபாரம்.

*சொல்ல தயங்கி போக போக எல்லாம் சரியாகி விடும் என்கிற சில விஷயங்கள், சில சமயம் நம்மை சின்னா பின்னமாக்கி ஒன்றும் இல்லாமல் கூட ஆக்கி விடும்.*

இன்னும் ஏன் அந்த கோபமும் பிடிவாதமும். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடுங்கள், பேச வேண்டியவர்களிடம் பேசி விடுங்கள். நிலை இல்லாத வாழ்க்கை இது. அர்த்தமுள்ள வாழ்வை அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.

*பிடித்தவர் என்பதற்காக அவருக்கு பிடித்தது போல் நாம் நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் சுய கவுரவம் அவசியம்.*

வசதியான வாழ்க்கை அமைந்தால் கூட, வசதிகளை குறைத்து வாழ்ந்து பாருங்கள், பின் சிறிது கஷ்டத்தை கூட எளிதாக ஏற்று கொண்டு விடும் நம் மனது.
-------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. Good morning sir excellent thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,
    மனதில் கொள்ள வேண்டிய படிப்பினைப் பதிவு.

    ReplyDelete
  3. ////Blogger Shanmugasundaram said...
    Good morning sir excellent thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    மனதில் கொள்ள வேண்டிய படிப்பினைப் பதிவு./////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  5. Good morning iyya,Periya vishayathay surukkamaga sollivittergal

    ReplyDelete
  6. //////Blogger subathra sivaraman said...
    Good morning iyya,Periya vishayathay surukkamaga sollivittergal//////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  7. அன்பின் ஐயா,

    தங்கள் பதிவுகள் யாவும் ஒன்றை ஒன்று விஞ்சியவை யாவும் அருமை தவறாமல் படிப்பேன் ஆனால் பின்னுட்டம் வைக்க சோம்பேறித்தனம்.
    மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா......

    யாவும் அருமை.......

    என்றும் அன்பும் நன்றியும் ஐயா..

    அன்புடன்
    விக்னசாயி.

    ====================================

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com