18.8.19

Astrology: Quiz: புதிர்: 16-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 16-8-2019 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக்
கொடுத்து, ஜாதகி அனுஷ நட்சத்திரக்காரர். ஜாதகி அவரது 22 ஆவது
வயதில் பொறியியல் படிப்பை முடித்து பட்டம் பெற்றுவிட்டார். மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்று படிக்க ஆசைப்பட்டார். அவருடைய ஆசை அல்லது விருப்பம் நிறைவேறுமா?” என்று கேட்டிருந்தேன்.

பதில்:

சிம்ம லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சூரியன் 2ல். ஒன்பதாம் வீடுதான் வெளிநாட்டு பயணங்களுக்கு உரியது. அதன் அமைப்பைப் பொறுத்து
ஜாதகன் அல்லது ஜாதகி வெளிநாடு சென்று படிக்க, வேலை பார்க்க,
அங்கே குடியுரிமை பெற்று தங்கி வசிக்க என்று எல்லாம் சாத்தியப்படும்.
இந்த ஜாதகிக்கு வரவிருந்த கேது மகா திசையின் நாயகன் கேது ஐந்தில் -
தனுசுவில். அதன் அதிபதி குரு பகவான் துலா ராசியில் அமர்ந்து கொண்டு தனது நேரடிப்பார்வையில் ஒன்பதாம் வீட்டை வைத்துக்கொண்டுள்ளார்.
கேது, ஜாதகப்படி செவ்வாய்க்குரிய பலாபலன்களையும் தரக்கூடியது.ஜாதகத்தில் செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து விருச்சிக
ராசியில் வலுவாக உள்ளார். அது ஜல ராசி. ஆகவே ஜாதகிக்கு வெளி நாடு சென்று படிக்கும் ஆசை கைகூடியது.

இந்தப் புதிரில் 6 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன!!!!

அடுத்த வாரம் 23-8-2019 வெள்ளிக்கிழமைஅன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------
1
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் புதிருக்கான பதில் :
ஜாதகியின் வெளி நாடு படிப்பு ஆசை நிறைவேறியதா ?
1 . சிம்ம லக்கின ஜாதகிக்கு படிப்பு ஸ்தான அதிபதி செவ்வாய் சொந்த வீட்டில் பலமுடன் இருந்ததால் அவரின் 22

வயதிலேயே நல்ல மதிப்பெண் வுடன் தேர்ச்சி பெற்றார் . ஏனென்றால் படிப்பு ஸ்தான அதிபதி சந்திர மங்கள யோகம்

பெற்று சொந்த வீட்டில் உள்ளது.
2 மேல் படிப்பு ஸ்தானத்தை அதாவது ஐந்தாம் இடத்து அதிபதி குரு மூன்றாம் இடத்தில் அதாவது வெற்றி ஸ்தானத்தில்

அமர்ந்து அவரின் மேல் படிப்பு வெளி நாட்டில் அமைய உதவினார். ஏனென்றால் குரு சுக்கிரன் வீட்டில் அமர்ந்து

உள்ளார். சுக்கிரன் வெளி நாட்டு செல்ல உதவும் கிரகமாகும்.
3 இந்த வெளி நாடு படிப்பு புதன் தசை ஆரம்பித்து கேது தசையில் வெற்றி கரமாக நிறைவு பெற்றது . ஏனெனில் கேது

குருவின் வீட்டில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அவரின் மேல் படிப்பை வெற்றிகரமாக அமையும் படி செய்து முடித்தார்.
நன்றி
ப . சந்திரசேகர ஆசாத்
MOB : 8879885399
Friday, August 16, 2019 8:09:00 AM
--------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .வெளிநாடு செல்லும் யோகத்திற்கான இடங்கள் ஒன்பதும் பனிரெண்டாம் இடங்கள்
2 .ஒன்பதாம் அதிபதி செய்வாய் ஒன்பதிற்கு எட்டில் அமர்ந்துள்ளார்
3 .எனினும் பனிரெண்டுக்கு உரிய சந்திரன் நல்ல நிலையில் யோககாரகன் செவிவயடன் அமர்ந்துள்ளார்
4 ..மேலும் குருவின் பார்வை ஒன்பதாம் வீட்டின்மேல் உள்ளதாலும்
புதன் புதஆதித்ய யோகத்துடன் உள்ளதாலும் வெளிநாட்டு யோகத்தை ஜாதகருக்கு அளிக்கிறது
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, August 16, 2019 4:28:00 PM
-------------------------------------------------
3
Blogger Santhanam Salem said...
நாம் இருக்கும் வீட்டையும் நாட்டையும் குறிப்பது, நம்முடைய ஜாதகத்தின் 4-ம் இடம் தான். அந்த வீட்டிற்கு

பன்னிரண்டாம் வீடான 3-ம் இடம் தான் இடப்பெயர்ச்சியை குறிக்கிறது. நீண்ட தூரப் பயணத்தைப் பற்றி சொல்வது

ஒன்பதாம் இடம் ஆகும். அதன் அடிப் படையில் 3, 9, 12 ஆகிய இடத்தைக் குறிக்கின்ற கிரகங்களின் திசாபுத்தியையும்,

அதன் காலத்தையும் வைத்து தான் ஒருவர் வெளிநாடு போக முடியும்.
பயணம், இடப்பெயர்ச்சி அல்லது இடமாற்றம் போன்றவற்றைப் பற்றி குறிப்பிடுவது நீர் கிரகமான சந்திரன் ஆகும்.

வெளிநாட்டவரையும், வேறு மொழி பேசுபவரையும், வேறு மதத்தவர்களையும் குறிக்கும் கிரகங்கள் ராகுவும், கேதுவும்.

அதே போல் ஜீவனகாரகன் குரு, கர்மகாரகன் சனி. இவர் அனைவரும் தான் வெளிநாட்டு பயணத்தை முடிவு செய்யும்

கிரகங்களாக பார்க்கப்படுகிறார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் 9, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகள் இணைவு பெற்றிருந்தாலோ அல்லது பரிவர்த்தனை

யோகம் பெற்றிருந்தாலோ, அந்த நபர் வெளிநாடு செல்வார். ஒருவர் வெளிநாடு செல்வதற்கு இந்த ஜாதக அமைப்பும்

வேண்டும்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு, 9 அல்லது 12-ம் இடத்திற்கான அதிபதிகள், நீர் தத்துவ ராசிகளான கடகம்,

விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் நின்றால், அந்த ஜாதகர் நிச்சயம் கடல் கடந்து வெளிநாடு செல்வார்.
9, 12 வீட்டின் அதிபதியுடன் சந்திரன் அல்லது குரு அல்லது சனி சம்பந்தம் பெற்றால் வெளிநாடு வாய்ப்பு அதிகம்.
நிலையில் காலசர்ப்ப அனைத்து கிரகங்கள் இருந்தாலும், வெளிநாட்டு யோகம் உண்டு.
ஜாதகத்தில் 9, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதிகள் இணைவு பெற்று 4ம் இடத்தில உள்ளதால் ஜாதகர் மேற்படிப்பிற்கு

வெளிநாடு சென்றார்.
Saturday, August 17, 2019 10:08:00 AM
---------------------------------------------
4
Blogger Lokes said...
பிறப்பு 23/09/1982, 4:00 AM, சென்னை.
சனியின் இணைவை பெற்றாலும், கல்விக்குரிய காரகன் புதனே தசநாதன் ஆகி உச்சம்பெற்று தன் அதிநட்பு கிரகமான

சூரியனுடன் அசத்தமனம் ஆகாமல் இணைந்து ஏழாம் பார்வையால் அயல்நாட்டை குறிக்கும் 12 ஆம் வீட்டிற்கு 9 ஆம்

வீடாகிய எட்டாம் வீட்டை பார்க்கிறார். மேலும் புதன் நீரைக் குறிக்கும் சந்திரனின் சாரம் வாங்கி, அந்த சந்திரனே கடல்

கடக்கும் யோகத்தை குறிக்கும் 12 ஆம் அதிபதியாகி, அவர் கல்விக்குரிய 4 ஆம் வீட்டில் ஆட்சி பலம் பெற்ற

செவ்வாயுடன் இணைந்து நீசபங்கம் அடைந்ததோடு திக்பலமுமாகி அதிவலுவுடன் இருக்கிறார். 4 ஆம் வீடு, அதன்

அதிபதி செவ்வாய், சந்திரன், கல்விகாரகன் புதன் இப்படி எல்லாம் வலுவாகி அதை அனுபவிக்க லக்கினாதிபதியும்

பாக்யாதிபதியும் வலுப்பெற்று, புதன் தசையும் அமைந்ததால் கல்வி கற்பதற்காக வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும்.
Saturday, August 17, 2019 1:18:00 PM
-----------------------------------------------------
5
Blogger classroom2007 said...
வணக்கம்.
23.09.1982 ஆம் தேதி காலை 4.03 மணிக்கு சிம்ம லக்கினம், விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்

இந்த ஜாதகி. (இடம்: சென்னை), லக்கினம்: சிம்மம்
யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய், - யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி, - ராஜயோகத்தை கொடுப்பவர்

- செவ்வாய்
சிம்ம லக்கினத்திற்கு சூரியன் லக்கினாதிபதி. செவ்வாய் யோககாரகன் (ஒரு கேந்திர வீட்டிற்கும், ஒரு திரிகோண

வீட்டிற்கும் உரியவன்) புதன் 2 & பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன். ஆகவே அவர்கள் மூவரும் ஜாதகத்தில்

வலிமையுடன் இருப்பது முக்கியம்.
புதன் (7 பரல்), செவ்வாய் (3 பரல்), சுக்கிரன் (4 பரல்), உடல் வலிமை (சூரியன் - 4 பரல்) - மனவலிமை (சந்திரன்- 5

பரல்) ஜாதகத்தில் உள்ளன
சிம்ம லக்கினகாரர்கள் அஞ்சா நெஞ்சமும், வீரமும் உடையவர்
லக்கினாதிபதி சூரியன் 2ல் உச்சமான புதனுடன் (7 பரல்) சேர்ந்து 6ம் வீட்டு அதிபதி சனியுடன் கூட்டு.
இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம், அறிவாளியும் சுகவாசியும் ஆவீர்கள்
இரண்டில் புதனிருந்தால் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும், ஆற்றல் இருக்கும். பணம்

சம்பாதிக்கக்கூடியவர் . சேர்த்துவைக்கக் கூடியவர் . குடும்ப வாழ்க்கை இன்பகரமானது.
ஜாதகத்தில் சூரியன்/புதன் இணைந்து லக்னத்திற்கு 2-ம் இல்லத்தில் வீற்றிருந்தால் ஜாதகர் இறைவழிபாடு இறைபக்தி

உடையவர். சேர்ந்திருப்பது ஓரளவிற்கு செல்வத்தைக் கொடுக்கும்.
இரண்டில் சனி (4 பரல்) இருந்தால் - இரண்டு விவாகம் கையில் காசு தங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும்.. நிதி

பிரச்சனை அனுபவிக்க நேரிடும். சனி வர்க்கோத்தமம்.
10ம் வீட்டு (31 பரல்) அதிபதி சுக்கிரன் லக்கினத்தில் உள்ள படியால் கடின உழைப்பினால் முன்னுக்கு வருபவர் .சுய

தொழில் செய்பவர்.
சிம்ம லக்கினத்திற்கு ரிஷப ராசியில் இருக்கும் சுக்கிரன் தீமைகளையே செய்வான். 32 வயதில் சுக்கிர தசை (3 & 10ம்

வீட்டு அதிபதி தசை ) ஆரம்பம் (2014 -2034)
4ம் வீட்டு அதிபதி செவ்வாய் 4ல் சந்திரனுடன் சேர்ந்து சனியின் 3ம் பார்வையில் உள்ளார். மேற்கொண்டு கல்வி படிப்பிற்கு

வெளி நாடு செல்ல வாய்ப்பில்லை
9ம் வீட்டு பாக்யஸ்தான அதிபதி செவ்வாய் 4ல் அமர்ந்து 7ம் பார்வையால் 10ம் வீட்டை பார்க்கிறார். செவ்வாய் ராஜ

யோகத்தை கொடுக்க கூடியவர் . சனியின் 3ம் பார்வை 4ல் உள்ள செவ்வாயின் மீதும், சந்திரனின் மீதும் உள்ளது,
12ம் வீட்டு அதிபதி சந்திரன் 4ம் வீட்டில் விருச்சிக ராசியில் நீசம். வெகு தூரத்திற்கு சென்று தனியாக வசிக்க நேரிடும்.

கவலைகள், மன உலைச்சல்கள் வரக்கூடும்.
25 வயதில் கேது தசை ஆரம்பம் (2007-2014),
32 வயதில் சுக்கிர தசை ஆரம்பம் (2014 -2034)
அவருடைய ஆசை நிறைவேற வாய்ப்பில்லை .
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Sunday, August 18, 2019 2:09:00 AM
-----------------------------------------------------
6
Blogger kmr.krishnan said...
ஜாதகி 23 செப்டம்பர் 1982 காலை 4 மணி 3 நிமிடம் போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்

கொண்டேன்.
12ம் அதிபதி சந்திரன் 4ம் இடத்திற்கு வந்து அமர்ந்து 4ம் இடத்திற்கான செவ்வாயுடன் நின்றதாலும்,
9ம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும்,இவர் படிக்கும் காலத்தில் புத தசா நடந்து வந்ததாலும்,புதன் உச்சத்தில்

இருப்பதாலும் இவர் கட்டாயம் வெளிநாடு சென்று மேல் படிப்பு படித்திருப்பார். பெரும்பாலும் அங்கேயே வேலையும்

கிடைத்திருக்கும்.
Sunday, August 18, 2019 5:04:00 AM
===================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com