3.7.19

இந்தத்தடவை மாட்டிக்கொண்டது இவரா?

நகைச்சுவை வாரம்
பதிவு எண் 2
-----------------------------------------------
இந்தத்தடவை மாட்டிக்கொண்டது இவரா?

ஒவ்வொரு நகைச்சுவைப் பதிவிலும் மென்பொருள் வல்லுனர்களே மாட்டிக்கொள்வதால்
நமது கண்மணிகளுக்கு வருத்தம். அதனால் இந்தத் தடவை வேறு ஒருவர் மாட்டிக்கொண்டதால்
இடுகையை உற்சாகமாக வலை ஏற்றியுள்ளேன்

மாட்டிக்கொண்டது யாரென்று நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------------
கணக்குப் பாடங்களை ஏன் தரையில் உட்கார்ந்து எழுதுகிறாய்?”

நீங்கள்தான் டீச்சர் டேபிள் (Tables) உபயோகிக்கக்கூடாது என்று சொன்னீர்களே!”
---------------------------------------------------------------------------------------------------
தண்ணீரின் ரசயானப் பெயர் என்ன?”

“H-I-J-K-L-M-N-O”

என்ன உளறுகிறாய்?”

தண்ணீரின் ரசயானப் பெயர் H to O என்று நீங்கள்தானே சொன்னீர்கள் டீச்சர்!”
---------------------------------------------------------------------------------------------------

ஜார்ஜ் வாஷிங்டன் தன் அப்பா வளர்த்திருந்த செர்ரி மரத்தை வெட்டியது மட்டும் அல்லாமல் அதை
ஒப்புக்கொள்ளவும் செய்தார். அனால் அவருடைய தந்தை அவரைத் தண்டிக்கவில்லை! அது ஏன்?”

வெட்டியவரின் கையில் இன்னும் கோடாலி இருந்ததே காரணம்!”
---------------------------------------------------------------------------------------------------
ஜானி, சாப்பிடும் முன்பு நீ என்ன பிரார்த்தனை செய்வாய்?”

நான் ஒன்றும் செய்ய மாட்டேன். என் அம்மா நன்றாக சமையல் செய்வார் டீச்சர்!”
--------------------------------------------------------------------------------------------------
எங்கள் வீட்டு நாய் என்ற தலைப்பில் நீ எழுதிய கட்டுரை, உன் அண்ணன் எழுதியதைப் போலவே
உள்ளது! காப்பி அடித்தாயா?”

இல்லை டீச்சர், நான் எழுதியதும் அதே நாயைப் பற்றியதுதான்!”
---------------------------------------------------------------------------------------------------
யாரும் சுவாரசியசியமாகக் கேட்கவில்லை என்று தெரிந்தும் தொடரந்து பேசிக்கொண்டிருப்பவரை எப்படி

அழைப்போம்?”

பள்ளிக்கூடத்திலா அல்லது வீட்டிலா டீச்சர்?”

ஏன், என்ன வித்தியாசம்?”

வீட்டில் என்றால் பாட்டி என்போம், பள்ளிக்கூடத்தில் என்றால் சரித்திர வாத்தியார் என்போம்!”
-----------------------------------------------------------------------------------------------------
இந்த ஆறில் எது நன்றாக உள்ளது?
--------------------------------------------------------------------
அன்புடன்
SP.VR.சுப்பையா
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17 comments:

  1. வணக்கம் குருவே,
    நான்கு!👍👌💐

    ReplyDelete
  2. மாட்டி கொண்டது "வாத்தியார்"

    ReplyDelete
  3. அறுசுவையில் எது பிடிக்கும் என்பது போல் உள்ளது தங்களின் வினா அய்யா.

    ReplyDelete
  4. கணக்கு, அறிவியல், சரித்திரம் என்று ஒவ்வொரு துறைவாரியாக ஆ சிரியர்கள் மாட்டியுள்ளார்கள் இன்று.

    மாணவன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் குட்டு விலும், ஆனால் இங்கே ஆசிரியர் மாட்டிக் கொண்டாரே...

    ReplyDelete
  5. நானும் சிரித்து விட்டேன்..

    ReplyDelete
  6. //////Blogger kmr.krishnan said...
    All are very nice ,sir.//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!!

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    நான்கு//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger Unknown said...
    All r superb sir.//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. //////Blogger SELVARAJ said...
    மாட்டி கொண்டது "வாத்தியார்"////////

    நல்லது. நன்றி செல்வராஜ்!!!!

    ReplyDelete
  10. /////Blogger Sabarinaathan said...
    அறுசுவையில் எது பிடிக்கும் என்பது போல் உள்ளது தங்களின் வினா அய்யா.////////

    நல்லது. நன்றி சபரிநாதன்!!!!!!

    ReplyDelete
  11. //////Blogger Sabarinaathan said...
    கணக்கு, அறிவியல், சரித்திரம் என்று ஒவ்வொரு துறைவாரியாக ஆ சிரியர்கள் மாட்டியுள்ளார்கள் இன்று.
    மாணவன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் குட்டு விலும், ஆனால் இங்கே ஆசிரியர் மாட்டிக் கொண்டாரே...//////

    நல்லது. நன்றி சபரிநாதன்!!!!!!

    ReplyDelete
  12. ////Blogger விசு அய்யர் said...
    நானும் சிரித்து விட்டேன்..//////

    உங்களைச் சிரிக்கவைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!!!!!

    ReplyDelete
  13. //////Blogger classroom2012 said...
    Super sir//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  14. ////Blogger classroom2012 said...
    Very nice sir////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!


    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com