21.3.19

மரணத்திற்குப் பிறகு உங்களுக்கு என்ன நேரும்?


மரணத்திற்குப் பிறகு உங்களுக்கு என்ன நேரும்?

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!!

உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த.  முக்கியத்துவமும் கொடுக்காது....!!

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வர்.....!
1.உனது ஆடைகளை களைவர்.
2.குளிப்பாட்டுவர்.
3.புது துணி அணிவிப்பர்.
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.
5.சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
6.உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.
7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும்.

* உன்னுடைய உடமைகள்
*புத்தகங்கள்
*பைகள்
*செருப்புகள்
எல்லாம் வெளியேற்றப்படும்.

A.உறுதியாக விளங்கிக்கொள்,
* உனது பிரிவால் உலகம் கவலைப் படாது
*பொருளாதாரம் தடைப்படாது
*உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார்
* உனது சொத்து வாரிசுக்குப் போய்விடும்
* இவ்வளவு சொத்து சொகத்தோடு வாழ்ந்தும் வெறும் கையுடன் படுத்திருப்பதை இருப்பதை உணர மாட்டாய்.

நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே!!!!!
(பாடி எப்ப வரும் ????) உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்

எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி என்று வாழும் போதே *வாழாமல்* உன்னை நீயே ஏமாற்றி விட வேண்டாம்

உன்னைப்_பற்றிய_கவலை -3 பங்காக்கப்படும்

1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.
2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்.
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்.
4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.
5.உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்.

#உன்னை_விட்டு_நீங்குவது
1.உடம்பு மற்றும் அழகு
2.சொத்து
3.ஆரோக்கியம்
4.பிள்ளைகள்
5.மாளிகை
6.மனைவி/கணவன்.

உனது ஜீவனுக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்.....

 எனவே, இவ்விஷயங்களில்_ஆசை_வை.

1. தவறாது கோவிலுக்கு செல்.

2. வேதத்தை பாராயணம் செய், தியானம் செய்.

3. பிறர் அறியா தர்மம் செய்

4. கடவுளை பற்றிய நல்லதை சொல்.

5. ஆத்மாவுக்கு உரியதை பற்றி சிந்தனை செய்.

6. கடவுள் பாராட்ட நல்ல செயல்கள் செய்.

7.யாருக்கும் கெடுதல் செய்யாதே.

உலகில் ஏதோ ஒன்றை தேடுகிறாய்...
தேடிக் கொண்டிருக்கிறாய்
ஆனால்,
மேற்கூறியது மட்டுமே உண்மை!!!
-------------------------------------------
படித்ததில் உணர்ந்தது: பகிர்ந்தது!!!!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. வணக்கம் குருவே!
    துக்கம் மேலிடுகிறது ஆசானே, இன்றைய பதிவைப் படிக்கும்போது!?
    அன்றைய மாபெரும் அலெக்சாண்டர்
    முதன் இன்றைய மறைந்த ஸ்டீவ் ஜாப் வரை உள்ளோர் எழுதி வைத்தவற்றையும், நமது பட்டினத்தார் முதலானோர் பாடியுள்ளதும் இவற்றைத் தானே!?
    கூறியுள்ளது அரியுறைகளை ஏற்பது
    அனைவருக்கும் நல்லதே!

    ReplyDelete
  2. Good morning sir excellent words vazhga valamudan thanks sir

    ReplyDelete
  3. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    துக்கம் மேலிடுகிறது ஆசானே, இன்றைய பதிவைப் படிக்கும்போது!?
    அன்றைய மாபெரும் அலெக்சாண்டர்
    முதன் இன்றைய மறைந்த ஸ்டீவ் ஜாப் வரை உள்ளோர் எழுதி வைத்தவற்றையும், நமது பட்டினத்தார் முதலானோர் பாடியுள்ளதும் இவற்றைத் தானே!?
    கூறியுள்ளது அரியுரைகளை ஏற்பது
    அனைவருக்கும் நல்லதே!//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  4. //////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir excellent words vazhga valamudan thanks sir/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. //(பாடி எப்ப வரும் ????) உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்
    என்ன ஒரு இலுக்கு..

    ///உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.
    2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்.
    3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்.
    4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது /// வேஸ்ட் ப்ராபிட்.


    எத்துனை அருமையாக எழுதினீர்கள்.. ஒவ்வொரு வரியும் உன்மை.

    இந்த வுலகத்திற்கு ஏன வந்த்தேன் என்று பல காலமாக கவளையிலிருக்கிரேன். விடைபெறவும் முடியவில்லை. தினம் வாழ்வது போல் சாக வேண்டியுள்ளது.

    //படித்ததில் உணர்ந்தது: உன்மைதான் சார்.

    //உலகில் ஏதோ ஒன்றை தேடுகிறாய்...
    தேடிக் கொண்டிருக்கிறாய்
    ஆனால்,
    மேற்கூறியது மட்டுமே உண்மை!!!//

    ஆனால் சார், இருக்கும்னிலையை விட்டு, முன்னேற்ற படியில் கால் வைத்தாலே சிலர் விடமாட்டேங்கிராங்க... நீங்கதான் சொன்னீங்களே
    சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வர். உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com