15.3.19

Astrology: ஜோதிடப் புதிர்: கனவு நிறைவேறும் காலம்?


Astrology: ஜோதிடப் புதிர்: கனவு நிறைவேறும் காலம்?

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய 36வது வயதில் சொந்த வீடு கட்டும் ஆசை வந்தது. ஆசை அதிகமாகி அனுதினமும் வீட்டைப் பற்றிய கனவே அவரைச் சுற்றிவரத் துவங்கியது. தசா, புத்திகள் தானே பலனைத் தரும். சில ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் அதற்குரிய தசா, புத்தி (Major Dasa and Sub period) வந்த போது அவருடைய கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது.

அவருடைய ஜாதகத்தை அலசி அவருடைய எந்த வயதில் கனவு நிறைவேறியது  அல்லது எந்த தசா, புத்தியில் நிறைவேறியது என்பதைச் சொல்லுங்கள்

சரியான விடை 17-3-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. Around 41 years Guru dasa budan bhukthi or Sani bhukthi helped him to get the house.

    ReplyDelete
  2. ஐயா கேள்விக்கான பதில்
    1.பாக்கியாதிபதி சனியின் திசையில் சுக்ர புத்தியில் ஐம்பத்து இரண்டு வயது ஆறு மாதங்களில் வீடு கட்டி இருப்பார்
    ௨.சனியும் சுக்ரனும் நாலாவது இடத்தில நல்ல நிலையில் உள்ளனர்
    தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி

    ReplyDelete
  3. தங்கள் புதிருக்கான பதில்

    1 ஜாதகர் சொந்த வீடு கட்டி குடியேறும் நிகழ்வு அவருடைய நான்காம் வீட்டில் அமர்ந்து இருக்கும் சனியின் தசை யில் நடந்தது . ஏனென்றால் சனி அவருக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் ஆவார் .

    ஆகவே சனி தசையில் புதன் புக்தியில் அந்த கனவு நினைவானது

    நன்றி

    P.CHANDRASEKARA AZAD
    MOB. 8879885399

    ReplyDelete
  4. வணக்கம்.
    10 செப்டம்பர் மாதம் 1952, காலை 1.00 மணிக்கு, கிருத்திகை நட்சத்திரம் ரிஷப ராசி மிதுன லக்கினம் (இடம்: சென்னை) ஜாதகர் பிறந்தார்.

    36 வயதில் (1988) வீடு கட்ட உருவான ஆசை, குரு மகா தசையில் புதன் புக்தியில் (1992) 40 வயதில் அவருடைய ஆசை நிறைவேறியது. காரணம் ஜாதகத்தில் குருவின் 5ம் பார்வை 4ம் வீட்டு அதிபதி புதனின் மீது உள்ளது. அப்பொழுது கோள்சாரத்தித்தில் குரு கன்னி ராசியில் ஜாதகருடைய 4ம் வீட்டில் அமர்ந்து அவருடைய ஆசையை நிறைவேற்றினார்.

    4ம் வீடு சொத்து, சுகம், வீடு. லக்கினாதிபதி புதன், 4ம் வீட்டிற்கும் அவரே அதிபதி, 3ம் வீட்டில் சூரியனுடன் சேர்ந்து குருவின் 5ம் பார்வையில் உள்ளார் .
    தீய கிரங்கள் சூழ்ந்து இருந்தாலும் குருவின் பார்வையால் நிவர்த்தி அடைகிறார்.

    4ல் சுக்கிரன் நீசம், சனியும் சேர்ந்து 4ல் அமர்ந்து, சொத்து, சுகம், கல்வி, வீடு தடங்கல், தாமதம் ஏற்படுத்தி ஜாதகரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்.

    வீடு அமைவதற்கான கிரகம் செவ்வாய். செவ்வாயின் பார்வையோ, குருவின் பார்வையோ 4ம் வீட்டின் மீது இல்லை. மாறாக செவ்வாயின் பார்வை லக்கினத்தின் மீது உள்ளது. லக்கினம் (34 பரல்). குருவின் பார்வை 4ம் வீட்டு அதிபதி புதனின் மீது இருக்கிறது. இது போதும் அவருடைய ஆசை நிறைவேறுவதற்கு.

    ஜாதகருக்கு 71 வயதில் (2023) தான் லக்கினாதிபதி புதன் மகா தசை வருகிறது. அந்த வயதில் அவரால் என்ன செய்ய முடியும்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  5. ஜோதிடப் புதிர்: கனவு நிறைவேறும் காலம்?

    மேச‌ லக்கினம், விருசப ராசி ஜாதகர்.
    அவருடைய சொந்த வீடு கட்டும் ஆசை (அ) கனவு எந்த வயதில், எந்த தசா, புத்தியில் நிறைவேறியது?
    1) ஜாதகரின் 36ம் வயதில் சொந்த வீடு கட்டும் ஆசை அதிகரித்தது.அப்போது அவருக்கு குரு மகாதிசை தொடங்கியிருந்தது. குரு பகவான் 11ல் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.
    2) ஆனால் வீடு கட்டும் ஆசை உடனே நிறைவேறவில்லை. அதற்குக் காரணம் நிதி நிலைமை சரியில்லாததே. தனாதிபதி சந்திரன் 12ல் மறைவு மற்றும் அவரின் மேல் 6ம் அதிபதி செவ்வாயின் நேர் பார்வை.தனகாரகன் குருவும், தனாதிபதி சந்திரனும் 12,1 நிலைமையில் அமர்வு.
    3) சில ஆண்டுகள் கழித்து, குரு தசை, சுக்கிரன் புத்தியில் அவருடைய கனவு நிறைவேறியிருக்கும். ஆனால் வங்கி கடன் பெற்றே கஷ்டப்பட்டு வீட்டை கட்டி முடித்திருப்பார்.

    வாத்தியாரின் மேலான அலசலுக்கு காத்திருக்கும்,

    இரா.வெங்கடேஷ்.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,

    36 வயதில் குரு தசை தனது புக்தியில் வீடு காட்டும் எண்ணம் ஏற்பட்டது.

    39 / 40 வயதில் குரு தசை புதன் புக்தியில் வீடு காட்டியிருப்பார்.

    நன்றி

    ReplyDelete
  7. குரு மகாதசையில் வரும் புதன் புத்தியில் அவரது வீடு கட்டும் ஆசை நிறைவேறியது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com