28.12.18

Astrology: Quiz: புதிர்: வேலையா அல்லது வியாபாரமா, ஜாதகம் என்ன சொல்கிறது?

Astrology: Quiz: புதிர்: வேலையா அல்லது வியாபாரமா, ஜாதகம் என்ன சொல்கிறது?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ஜாதகர் பரணி நட்சத்திரக்காரர். ஜாதகர் வியாபாரம் செய்து பொருள் ஈட்ட ஆசைப் பட்டார். அவருடைய பெற்றோர் வேலைக்குச் செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபமும் வரும் நஷ்டமும் வரும் என்றார்கள். அதாவது  அவருடைய ஜாதகப்படி எது நல்லது? வேலையா அல்லது வியாபாரமா?

ஜாதகத்தை அலசி பதில் எழுதுங்கள்

சரியான விடை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. அவருடைய ஜாதகப்படி வியாபாரமே சிறந்தது .

    10க்கு உடையவன் 11இல் அமர்ந்து 5 இல் அமர்ந்த லக்கினாதிபதி சனியை பார்க்கிறான் . பாக்கியாதிபதி புதனும் உண்டான் அமர்ந்து லக்கினாதிபதியை பார்க்கிறார் . இவர் நிச்சயம் தொழிலில் பல மேன்மைகளை அடைந்திருப்பார்

    ReplyDelete
  2. வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்,
    வகுப்பறைக்கு வந்து போனாலும் பல்வேறு வேலைப்பளு காரணமாக எதிலும் கலந்து சிறப்பிக்க இயலவில்லை.இவ்வார புதிரின் எனது மேலோட்டமான கருத்து;

    ஜாதருக்கு மனம், செயல் காரகர்கள் மேலோங்கியும், 4, 10 வீடுக்கள் பலமாகவும், அவற்றின் அதிபதிகளும் முறையே தொழில் ஸ்தானம், லாபஸ்தானத்தில் பரிவர்தனையுடன் இருப்பது ஜாதகருக்கு வியாபார திறனையும் மேலும் அம்சத்தில் உச்சம் பெற்ற சூரியன் ஆளுமையினை அளிக்கின்றது. நிபுணத்துவ , சசிமங்கள யோகங்கள் கூடவே வியாபார சந்தைக்கு பக்கபலம்.
    தங்கள் விளக்கம் அறிய ஆவல்

    ReplyDelete

  3. வணக்கம்

    இந்த ஜாதகர் வேலை செய்வதை விட சுய தொழில் செய்வதே சிறந்தது .

    ஏன்னெனில் இந்த ஜாதகரின் 11 இம் இடது அதிபதி செவ்வாய் லக்கின கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் திரி கோணத்தில் 10 ஆம் இடத்தில அமர்த்து தொழில் செய்வதை சிறப்படைய செய்கிறது

    மேலும் 11 ஆம் இடத்தில லாப ஸ்தானத்தில் சுக்கிரனும் புதன் வுடன் கூட்டாக அமர்ந்து லாபத்தை அடைய செய்யும் கிரக அமைப்பாக உள்ளது .

    நவாம்ச கட்டத்திலும் லக்கின அதிபதி சனி 11 ஆம் இடத்தில அமர்ந்து தொழில் செய்வதை சிறப்பு அடைய செய்கிறது .

    நன்றி
    ப. சந்திரசேகர ஆசாத்
    MOB. 8879885399

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,1)கர்மகாரகன் சனியே வியாபாரமாய் இருந்தாலும்,அது அடிமைத் தொழிலாக இருந்தாலும் அவரே காரகர்.2)புதனின் வலு,6ம்,11ம் இடம்,அதன் அதிபதிகள் இருப்பு,பார்வை சேர்க்கையே வியாபாரமா வேலையா என்று முடிவு தரும்.
    3)இங்கு 6ம் இடமே அதிக சுபமாய் உள்ளது.8ம்அதிபதி சூரியன்,12ம்அதிபதி குருவுடன் சேர்ந்து,குருவுடன் சேர்ந்ததால் ராகுவும் சுபமாகி 6ம்வீட்டை தன் பார்வையில் வைத்துள்ளனர்.4)11ம் வீட்டிற்க்கு,சுப வீட்டில்,திரிகோணம் ஏறிய சனி பார்வையுள்ளது.சரி அது வியாபாரத்திலா வேலையிலா என்று பார்தால் அங்கே 10ம் அதிபதி சுக்கிரன்,அடிமைத் தொழிலுக்கான 6ம் அதிபதி புதனுடன் அமர்ந்து அவரும் கர்மகாரகன் பார்வையை பெறுவதால் வேலையே என்று ஆயிற்று.லாபாதிபதி செவ்வாய் எங்கேயென்று பார்த்தால் அவரும் தன் வீட்டிற்க்கு 12ல் மறைவு.வியாபாரத்தில் லாபம் அதிகமாயிருந்தால்தான் கட்டுப்படியாகும்.5)ஆகவே வேலையே அதுவும் வெளி நாட்டில் வேலை.அது தலைப்பிற்க்கு,தேவை இல்லாததால் அது பற்றி விவாதிக்கவில்லை.நன்றி.



    ReplyDelete
  5. ஐயா தங்களின் கேள்விக்கான பதில்,
    1 .லக்கினாதிபதி திரிகோணத்தில்,
    2வியாபாரத்திற்கு அதிபதியான புதன் பதினொன்றில் பத்தாம் அதிபதி சுக்கிரனுடன் நிபுண யோகத்தில்
    3 .எட்டாம் அதிபதி சூரியன் பனிரெண்டாம் இடத்தில் அதன் அதிபதி குருவுடன் சேர்ந்து ராஜா யோக அமைப்பு
    4 பத்தாம் அதிபதி சுக்ரனும் பதினொன்றாம் அதிபதி ய்வாயுடன் பரிவர்த்தனையில் ஆகவே வியாபாரமே ஜாதகருக்கு பொருந்தும்
    நன்றி
    தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கும்
    மாணவர்

    ReplyDelete
  6. ஜாத‌கர் 17 டிசம்பர் 1972 அன்று காலை 10 மணி 9 நிமிடங்களுக்குப் பிறந்த‌வர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    சூரியன் 12ல் மறைந்து ராகு சம்பந்தம் ஏற்பட்டதால் அரசு வேலைக்கு வாய்ப்பில்லை.மூன்றாம் இடத்து அதிபன் குரு 12ல் மறைந்ததால் சுய தொழில் ,வியாபாரம் சரியாக வருமா என்ற கேள்வி வருகிறது.

    ஆனால் 10ம் அதிபதி 11லும்,11ம் அதிபதி 10லும் ஆக பரிவர்த்தனை. இது வியாபரத்திற்கு ஏற்றது. புதன் வியாபாரத்திற்கான கார‌கன் 11 லாபஸ்தானத்தில்!சனி வக்கிரம் அடைந்துள்ளார்.சனியும் செவ்வாயும் 6க்கு 8 என்ற நிலையில் நிற்பது ஆகியவை துணிந்து வியாபாரத்தில் இறங்கச் சொல்வதும் தயக்கமாக உள்ளது.

    எனவே இடங்களின் பலத்தை அஷ்டவர்க்கப்படி எடுத்துக் கொண்டு முடிவு சொல்லநினைத்தேன். வேலை ஸ்தானமான 10ம் இடம் 35 பரல் பெற்று முன்னணியில் நிற்கிறது. வியாபாரத்திற்குண்டான 3ம் இடம் 30 பரல்தான்.
    எனவே இவருக்கு தனியார் துறையில் மாதசம்பள் வேலையே சரியானது என்று எனக்குத் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. புதிர்: வேலையா அல்லது வியாபாரமா, ஜாதகம் என்ன சொல்கிறது?

    ஆசிரியருக்கு வணக்கம்.

    மகர லக்கினம், மேஷ ராசி ஜாதகர்.

    லக்கினாதிபதி, தனாதிபதி மற்றும் தொழில்காரகனுமான சனி 5மிடமான ரிஷப ராசியில் மாந்தியுடன் கூடி வக்கிரகதியில்.

    லக்கினத்திற்கு பத்தாம் இடமே வியாரத்திற்குரிய பலனை தெரிந்து கொள்ளும் இடமாகும். ஜீவன ஸ்தானம் 6 , 8 , 12 ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவது மிகுந்த தீமையான பலன்களையே வாரி வழங்கும். ஒரு வேளை களத்திர பாவம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் கூட்டு தொழில் செய்யலாம் , களத்திர பாவமும் பாதிக்க பட்டிருந்தால் ஜாதகர் ஓரிடத்தில் அடிமை தொழில் செய்வதே சால சிறந்தது .
    4,11க்கு அதிபதி செவ்வாய் 10ல் பலமுடன் அமர்ந்துள்ளார். 7ம் அதிபதியான வளர்பிறை சந்திரன் 4ல் அமர்ந்து சந்திர மங்கள யோகத்தை கொடுக்கிறார்.
    வியாபாரத்தில் கொடிகட்டி பறக்க வேண்டுமானால் பத்தாமிட‌ம் பலம் பெறுவதோடு வித்தைக்குரியோனாகிய புதன் கிரகம் சிறப்பாக இருத்தல் வேண்டும். ஆனால் யோககாரகனும், 10க்கு அதிபதியுமான சுக்கிரன் 11ல் புதனுடன் அமர்ந்திருந்தாலும், பாபகர்த்தாரியின் பிடியிலுள்ளனர்.
    இதைத்தவிர பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானம்மும் பலம் பெற்றிருக்க வேண்டும் . அப்படி இருந்தால்தான் தொழில் வித்தகர், தொழில் மேதை, தொழிலதிபர் என்று பெயரும் புகழும் பெறுவதோடு , வியாபாரத்தில் வெற்றி பெற முடியும்.
    10மிடமும், 11மிடமும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. 10ம் அதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார்.பத்துக்கு அதிபதி நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ அதன்படிதான் தொழில் அமையும் யோகம் அமைகிறது.

    மேற்கண்ட கிரக நிலைகள், 4,7,10மிடங்கள் மற்றும் நடப்பு தசா புத்திகளை கொண்டு ஆராய்ந்ததில் ஜாதகர் வியாபாரம் செய்வதை விட அடிமைத் தொழில் செய்வதே நல்லது.
    ஆனால் சொந்தத் தொழில் செய்வதானால் கூட்டுத் தொழில் செய்வது ஓரளவு நன்மை பயக்கும்.
    வாத்தியாரின் மேலான கணிப்பை எதிர் நோக்கும்,

    இரா.வெங்கடேஷ்.

    ReplyDelete
  8. பிறந்த தேதி : 17 - Dec 1972
    மகர லக்கினம்- 30 பரல்கள் . சனி ஐந்தில் வக்கிரம் பெற்று பதினொன்றாமிடத்தை பார்க்கிறார்.

    10 மிடத்தில் செவ்வாய் திக் பலம் பெற்று லக்கினத்தையும் லக்கினாதிபதியையும் பார்க்கிறார். செவ்வாய் - சுக்கிரன் பரிவர்த்தனையோடு 35 பரல்கள் பெற்று 10 மிடம் வலுவாக உள்ளது. ஜாதகர் யாருக்கும் அடிமையாய் இருப்பதை விட சொந்த காலில் நிற்கவே விரும்புவார்.

    11 மிடத்தில் புதனும் சுக்ரனும் சேர்க்கை. 6 ,9 குடைய புதன் 8 பரல் பெற்று 11 மிடத்தில் வலுவாக உள்ளதால், வேலைக்கு செல்வதை விட வியாபாரமே லாபம் தரும் என தெரிகிறது.

    7 மதிபதி சந்திரன் 10 மிதத்தை பார்ப்பதும் 7 மிடத்தை சனி பார்ப்பதும் 7 மிடம் 31 பரல் பெற்றதும் , கூட்டு வியாபாரமும் ஜாதகருக்கு கை கொடுக்கும் என்பதை காட்டுகிறது.

    விபரீத ராஜ யோகம் கூட பின்னாளில் ஜாதருக்கு திடீர் உயர்வை தரலாம்.

    ஆக வேலைக்கு செல்வதை விட வியாபாரமே மேலானதாக தெரிகிறது.

    ReplyDelete
  9. இவர் மகர லக்கினம் பத்தில் செவ்வாய், சந்திரனின் பார்வையுடன் உள்ளது. இவர் சமையல் கலையில் வல்லவராக இருக்க வாய்ப்பு உண்டு.பத்தாம் அதிபதி (தொழில் ஸ்தானாதிபதி ) சுக்ரன் 11 ல் புதனுடன் உள்ளது. வியாபாரத்திற்கு புதனின் ஆசி வேண்டும்.ஆனால் இங்கு புதனும் சுக்ரனும் மாந்தியுடன் சேர்ந்த சனியின் பார்வையில் உள்ளது.லக்கின பாவரான செவ்வாய் 10 ல், மற்றோரு லக்கின பாவரான சந்திரனின் பார்வையில் உள்ளது. கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும்.கேட்டரிங்(நீர்-சந்திரன்,நெருப்பு-செவ்வாய் ),ராணுவம், பாய்லர் companies சம்பந்தப்பட்ட வேலை அமையும். ஏனெனில் செவ்வாய் ராசி சக்கரத்தில் பத்தாம் பாவத்தோடு தொடர்புடையது, நவாம்சத்திலும் 10 ல் உள்ளது. சூரியனோ செவ்வாயோ பத்தாம் பாவத்தோடு தொடரபுகொண்டால் அரசு வேலை கிடைக்க ஒரு வாய்ப்பு உண்டு. - என்னுடைய opinion .

    ReplyDelete
  10. ஐயா,
    28-12-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகம் மகர லக்ன ஜாதகம். 6, 9 க்குடைய புதன் 11ல். அதுவும் கூட 10 க்குரிய சுக்கிரன் சேர்க்கை. தர்மகர்மாதிபதி யோகம். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை. எந்த தொழில் செய்தாலும் பெருத்த லாபம் கிட்டும். ஏழாம் பாவத்தை லக்னாதிபதியான சனி பார்வை செய்கிறார். இதுவும் தொழிலில் லாபம் ஏற்படுவதை குறிக்கும் அமைப்பாகும். ஆறாம் பாவமும் குரு பார்வையுடன் நன்றாக உள்ளது. ஆனால், அஷ்டவர்கத்தில் ஆறாம் பாவத்தைவிட ஏழாம் பாவமே அதிக பரல்கள் (27,31) பெறுவதால் சொந்த தொழில் செய்வதே சிறந்தது.
    அ.நடராஜன்,
    சிதம்பரம்.

    ReplyDelete
  11. அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள்
    புதிரிற்கான விடை
    1. லக்னாதிபதியும் குடும்பாதிபதியுமான சனி 5ம் வீட்டில் (கேந்திரத்தில் மாந்தியுடன்)
    2. 10ம் அதிபதியும் 11ம் அதிபதியும் பரிவர்த்தனை.
    3. விரயாதிபதி குருவுடன் அட்டமாதிபதியும், ராகுவும் சேர்ந்து இருக்கின்றனர்கள்
    4. 9ம் அதிபதி புதன் 11ம் வீட்டில்
    5. 10ம் வீட்டை வளர்பிறை சந்திரன் 7ம் பார்வையாக பார்க்கின்றார்
    ஜாதகர் சொந்த தொழில் செய்வாரா அல்லது ஆபிஸில் வேலை செய்வாரா – காரணம்
    • தசா புத்தி – அட்டமாதிபதி சூரியனின் தசை 22 வயது வரை, அதையடுத்து சந்திர தசையில் 7.5 ஆண்டுகள் சனியின் பிடியிலிருந்தார் (4/1998 தொடக்கம் 7/ 2002 வரை). விரயாதிபதி பதனின் தசை, அதையடுத்து செவ்வாய் தசை
    • அதன் பிறகு வந்த செவ்வாய் தசையில்தான் அவரிற்கு விடிவுகாலம் தொடங்கியது.
    • அதன் பிறகு வந்த ராகு தசை அடுத்து குரு தசை (7.5 ஆண்டுகள் சனியின் பிடியிலிருந்தார்).
    • ஆகவே அவரிற்கு தன் தொழில் செய்வதிற்கு நேரமும் காலமும் சரியில்லை.
    • பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன் கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான். ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்
    மேற் சொன்ன காரணங்களிற்காக, ஜாதகரிற்கு சொந்த தொழில் செய்வதிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com