5.10.18

நீங்களும் நானும் குரு பெயர்ச்சியும்!!!


நீங்களும் நானும் குரு பெயர்ச்சியும்!!!

குரு பெயர்ச்சியைக் கண்டு ஆனந்தமா அல்லது அயர்ச்சியா ?

இரண்டுமே வேண்டாம்.

குரு பகவான் நம்பர் ஒன் சுபக்கிரகம். அவர் அனைவருக்குமே ஆனந்தம் தரக்கூடியவர்.

ஆனால் பெயர்ச்சிக்குப் பலன் எழுதுகிறவர்கள், அவரால் அதிகம் பயன் பெறப்போகிற ஐந்து நாசிக்காரகள் என்று ஐந்து ராசிகளை
மட்டும் குறிப்பிட்டு ஓஹோ என்று எழுதிவிட்டு மற்ற ராசிக்காரர்களுக்கு வயிற்றில் புளியைக் கறைக்கிறார்கள்.

குரு பகவான் வந்தமரும் ராசிக்கு நன்மைகளைச் செய்வதைப்போலவே, இருக்கும் ராசியில் இருந்து பார்க்கும் ராசிகளுக்கும் நன்மைகளைச் செய்வார். தன்னுடைய
5, 7 மற்றும் 9 பார்வையால் பல நன்மைகளைச் செய்வார்.

அதனால் ராசியில் 6, 8, 12ம் இடங்களில் அவர் அமர நேர்ந்தாலும், தன்னுடைய பார்வையால் அந்த ராசிக்காரர்களுக்கும் அனேக நன்மைகளைச் செய்வார்.

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும்.

திருமணத்தை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். வேலை கிடைக்காதவர்களுக்கு
வேலை கிடைக்கும். பதவி உயர்வை எதிர் பார்த்து இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணம் தேவைப்படுபவர்களுக்கு பணம் கிடைக்கும்.

ஆகவே யாருமே அயர்ச்சி அடைய வேண்டாம்.

நான் பெயர்ச்சிகளுக்கெல்லாம் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நடக்கின்ற மகா திசைகளும் உப திசைகளும்தான் (அவற்றின் நாயகர்களும்தான்)
ஜாதகர்களுக்கு பலனை வழங்குவர்கள் என்பதுதான் கண்ட உண்மை!

ஆகவே ஆனந்தமாக இருங்கள்!

குரு பகவான், வாக்கியப்பஞ்சாங்கப்படி,  இன்று இரவு துலாம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்கு வருகின்றார்.

இன்னும் ஒரு ஆண்டிற்கு இங்கேதான் இருப்பார். அவர் வரவு நல் வரவாகட்டும்.

சில வகுப்பறைக் கண்மணிகள் “அதை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் பெயர்ச்சியால் ஏற்படும்
நன்மை தீமைக்ளை மட்டும் சொல்லுங்கள்” என்பது என் காதில் விழுகிறது. அவர்களுக்காக அதை விரிவாக எழுதி வைத்திருக்கிறேன்.

தேவைப் படுபவர்கள் எழுதுங்கள் உங்களுக்கு PDF  கோப்பாக அதை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் எனக்கு எழுத வேண்டிய

முகவரி classroom2007@gmail.com ........Subject Boxல் மறைக்காமல் குரு பெயர்ச்சி 2018 என்று குறிப்பிடுங்கள்.
எத்தனை பேர்கள் அதில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இந்த ஏற்பாடு!!!!

அன்புடன்
வாத்தியார்
4-10-2018
8:00 PM
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. நான் புனர்பூசக் கடகன். எனக்கு நன்றாகவே சொல்லி இருக்கிறார்கள்.

    // மற்றவர்கள் வயிறில் புளியைக் கரைக்கிறார்கள் //

    நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்புகள் சிறப்பு.

    ReplyDelete
  2. ஐயா

    இவ்வளவு பாடங்கள் நீங்கள் நடத்தி முடித்து விட்டிர்கள். நாங்களும் அதை படித்து விட்டு ஒரு கைப்பிடி அளவாவது கற்றுக்கொண்டுவிட்டோம். அதனால் குரு பெயர்ச்சி பற்றி நன்கு
    புரிந்து கொண்டு விட்டதால் அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நமக்கு தெரிந்தவர்களுக்கு நம்மை அணுகி கேட்டால் பலன் சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டோம். நன்றியும் பாராட்டுதல்களும் உங்களுக்கு தான் ஐயா....

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy afternoon... Guru peyarchi will be excellent for every one.

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ////Blogger ஸ்ரீராம். said...
    நான் புனர்பூசக் கடகன். எனக்கு நன்றாகவே சொல்லி இருக்கிறார்கள்.
    // மற்றவர்கள் வயிறில் புளியைக் கரைக்கிறார்கள் //
    நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்புகள் சிறப்பு./////

    நல்லது உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஸ்ரீராம்!!!!!!

    ReplyDelete

  5. /////Blogger Narayanan V said...
    ஐயா இவ்வளவு பாடங்கள் நீங்கள் நடத்தி முடித்து விட்டிர்கள். நாங்களும் அதை படித்து விட்டு ஒரு கைப்பிடி அளவாவது கற்றுக்கொண்டுவிட்டோம். அதனால் குரு பெயர்ச்சி பற்றி நன்கு
    புரிந்து கொண்டு விட்டதால் அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நமக்கு தெரிந்தவர்களுக்கு நம்மை அணுகி கேட்டால் பலன் சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டோம். நன்றியும் பாராட்டுதல்களும் உங்களுக்கு தான் ஐயா..../////

    நல்லது உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!!

    ReplyDelete
  6. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy afternoon... Guru peyarchi will be excellent for every one.
    Have a great day.
    With regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  7. Vanakkam AYYA,

    Guru peyarchi palangal

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com