3.10.18

எது மாயை? எது நிஜம்?


எது மாயை? எது நிஜம்?

ஹலோ நீங்க என்னிக்கு வந்தீங்க ? ஜெட்லேக் எல்லாம் போயிடுத்தா?
போன வாரம்  வந்தேம்ப்பா. எனக்கெல்லாம் ஜெட்டும் கிடையாது லேக்கும் கிடையாது, மறுநாளே வாக்கிங் 
ஆரம்பிச்சிட்டேன். உங்க பக்கத்து வீட்டு சீனு வந்தாச்சா?.

அடடே சீனு, உன்னை தாம்ப்பா  விசாரிச்சுண்டு இருந்தேன், நீ எப்ப வந்தே?

நான் நேத்திக்கு விடிய காலம்பற வந்தேன். பிரிட்டிஷ்  ஏர்வேஸ், லண்டன்ல நாலுமணி நேரம் ஸ்டாப் ஓவர்..

நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல வந்தேன்..

என்ன  அங்கிள் எப்படி இருந்துச்சு உங்க முதல்  யு எஸ் ட்ரிப்?

ஊருக்கு என்னப்பா குறைச்சல். ரோடெல்லாம்  இழைச்சுருக்கான். எல்லா இடத்துக்கும் பொண்ணோ, மாப்பிள்ளையோ கூட்டிண்டு  போயிடறா..  கௌசல்யா, எவ்வளவு ஜோரா கார் ஓட்டறா தெரியுமோ? அவ ஒரு டொயோட்டா வேன் வச்சுருக்கா, 
மாப்பிள்ளை பி எம் டபுள்யூ எடுத்துண்டு போயிடுவார்.. சைல்ட் கேர்லெந்து பேரன் நாலு மணிக்கு  வந்துருவான், அப்புறம் அவனை பாத்துக்கறது தான் வேலை. ஷாப்பிங் காஸ்ட்கோ போவோம் வால்நட்,  திராட்சை, முந்திரி எல்லாம் கடையில சாம்பிள் காசே கொடுக்காம எடுத்து சாப்பிடலாம், யாரும்  ஒண்ணும் சொல்லமாட்டான். ஒரு சட்டை வாங்கினேன்னு வச்சுக்கோ ஒரு மாசம் போட்டுண்டு திருப்பி கொடுத்தாக் கூட கடைக்காரன் வாங்கிப்பான்.. நம்மூர் மாதிரி பொல்லாத்தனமும் போக்கிரித்தனமும்  கிடையாது, பீப்பிள் ட்ரஸ்ட் பீப்பிள்.. இங்க பண்ணுவானா, பென்ஷன் வாங்கறதுக்கு வருஷா வருஷம்  நான் உயிரோடுதான் இருக்கேன்னு நேர்ல  போய் சொல்லிட்டு வரணும்.. என்ன சிஸ்டமோ.. நம்மூர்  மாதிரி ஒவ்வொண்ணுலயும் கரப்ஷன் இல்லை, அதான் பொங்கி பொழிஞ்சிண்டு ஓஹோன்னு  இருக்கான்.         

சீனு நியூ ஜெர்சி எப்படி இருந்தது ? ஜெர்சி கவுஸ் நிறையா பாத்தேளா?

நான் கிளம்பும்போதே நல்ல குளிர் வந்துடுத்து..  நிறைய குஜராத்திஸ் தான். மெட்றாஸ்ல என்ன  கிடைக்கறதோ, அத்தனையும் 'படேல்ஸ்'ல வாங்கிடலாம். இந்த வருஷம் கொலுப்படியே வந்துடுத்தே..  நியூ யார்க் டைம்ஸ் ஸ்குயர் பார்த்துண்டே இருக்கலாம்.. அந்த நியூ யார்க் சென்ட்ரல் இருக்கு பார் ,  எவ்வளவு பெரிசுப்பா, பிரமிப்பு தான். நான் எல்லாத்துக்கும் என் பொண்ணு மாப்பிள்ளையை எதிர்பார்க்க  மாட்டேன், பஸ்ஸ பிடிப்பேன் மெட்ரோபார்க் வந்து ட்ரைன் பிடிச்சு எல்லா இடத்துக்கும் போயிட்டு  வந்துருவேன்..சனி, ஞாயிறு பொண்ணும், மாப்பிள்ளையும் எங்க கூட்டிண்டு போறாளோ போவோம். கனடா போயி நயாகரா பாத்தோம், அப்பப்பா.. பிரிட்ஜ் வாட்டர் கோயில் பார்க்கணுமே, பிட்ஸ்பர்க்ல  பெருமாள் கோவில் அப்படியே திருப்பதிதான், எல்லாருக்கும் ஃபர்ஸ்ட்  க்ளாஸ் சாப்பாடு ஃப்ரீ. கல்ச்சர்னா  அங்க தான். இங்கயும் இருக்காளே!!   என் பேத்தி எப்படி பாடறா தெரியுமோ. பியானோ வேற  வாசிக்கறா.தியாகராஜ  உத்சவம் பிரமாதமா நடத்தறா.. உன் பொண்ணும் கத்துண்டு இருந்தாளே,  வர்ணம் வந்துட்டாளா?

இல்லை அங்கிள் , கீதம் தான் வந்திருக்கா..
 
இன்னும் அவன்ட்ட தான் போறாளா ? அந்த மனுஷன் படு ஓ.பி ஆச்சே... அமெரிக்காவுல ரொம்ப சின்ஸியர்ப்பா இருபது டாலரை 
வாங்கிண்டாலும், சிரத்தையா சொல்லி கொடுக்கறா. சாஸ்திரிகள் கூட கிரஹப்பிரவேசம் எவ்வளவு  ஸ்ரத்தையா பண்ணி வைக்கிறாங்கற.. இங்க மாதிரியா, மஹாளய பக்ஷத்துக்கு ஐநூறு வாங்கிண்டு பாதி  நேரம் போன் பேசிண்டே இருக்கா?..

சீனு, உங்க பொண்ணு வாங்கியிருக்கிறது சிங்கிள் ஃபேமிலியா?

இல்ல சார், ரோ ஹவுஸ் தான்..

கௌசல்யாவுது சிங்கிள் ஃபேமிலி.. என் மாப்பிள்ளை ஐ ஐ டி தெரியுமோல்யோ ?. அங்க போய் வேற யேல் யூனிவர்சிட்டில மேல படிச்சார்..

ஆமாம், முன்னமே  சொல்லியிருக்கேள்.     

உங்க போன் தான் அடிக்கறதுன்னு நினைக்கிறேன்..

அட ஆமாம்..  கொஞ்சம்  இருங்கோ வந்துடறேன்..

(அவர் வீட்டு மாப்பிள்ளை வெறும் பி காம் தான், கம்ப்யூட்டர் டிப்ளமா அது  இதுன்னு படிச்சு அங்கே போய் செட்டில் ஆயிட்டார்..எங்காத்து மாப்பிள்ளைக்கு ஒரு கோடிக்கும் மேலே 
சம்பளம்..நம்மூர் ரூபாயில் சொன்னேன். மெரிட்டுக்கு அந்த ஊர்ல மதிப்பு கொடுக்கறாம்ப்பா,) 

ஐந்து  வருடம் கழித்து
----------------------------------
என்ன அங்கிள் திருச்சிக்கு போற மாதிரி பொசுக்கு  பொசுக்குன்னு அமேரிக்கா போயிட்டு வந்திட்டு இருக்கீங்களே, எப்படி இருந்தது ட்ரிப்பு ?

ஊர்  நல்லாத்தான் இருக்கு. இருபது மணி நேரம் பிளேன் பிரயாணம் உட்கார முடியலப்பா. கால் முழுக்க வீங்கிடுத்து.. அவா இரண்டு பேரும் ஆபீசுக்கு போயிடறாளா. வீட்டுக்குள்ள ஜெயில் தான்.. என்  மூஞ்சியை இவ பாத்துண்டு அவ மூஞ்சிய நான் பார்த்துண்டு எவ்வளவு நேரம் தான் சன் டி வியை பாத்துண்டு இருக்கறது?  திருப்பி திருப்பி அதே மால், திருப்பி அதே குப்பைகளை வாங்கிண்டு பேஸ்மெண்ட் கராஜுல எல்லா குப்பையையும் பிரிச்சு. போட்டுண்டு .ஆச்சுடியம்மா  நான்  சொல்லிடப்போறேன்..  உன்  குழந்தையை ஓரளவு பார்த்துண்டாச்சு .

எட்டு வருடம் கழித்து
--------------------------------
மறுபடியும் மறுபடியும் வான்னா பக்கத்துலயா இருக்கு.. அவங்களை வேணா  இந்தியாவுக்கு வர சொல்லுங்கோ. திருப்பி திருப்பி அதே வால்மார்ட்டும், காஸ்ட்கோவும், காருக்குள்ளயும், வீட்டுக்குள்ளயும்  அடைஞ்சு கிடந்தது, குளிரோடையும் ஐஸோடையும் ஷூவை  போட்டுண்டு போராடி போறும்ப்பா..என்னால வர முடியாது. கஷ்டமோ கிஷ்டமோ ஒரு வத்த குழம்போ, மிளகுரஸமோ நம்மால  முடிஞ்சதை சமைச்சு அக்கம் பக்கம் நாலு பேரிடம் பேசிண்டு , கோயிலுக்கு  காலாற நடந்து போயிட்டு வந்தா தான் எனக்கு நிம்மதி. அரசியலோ, கரப்ஷனோ, கரெண்ட் கட்டோ  என்னவேணா இருந்துட்டு போகட்டும். எங்க இருந்தாலும் நல்லா இருங்க சாமிகளா!!

நன்றி: ஆர்  ஸ்வாமிநாதன்
---------------------------------------
படித்ததில் உணர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. ஹா... ஹா... ஹா... படிப்படியாய்...

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,அனுபவ பாடம்.போதும் என்ற மனமிருந்தால்,இருக்கும் இடமே சொர்கம்.நன்றி.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Thanks for sharing...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    பதிவு விறு விறுப்பாக இருந்தது!
    ஒரளவு நியாயமான வார்த்தைகள்!
    ஆனால்,
    பேரக் குழந்தைகளைப் பார்க்கவேண்டும, அவர்களைக்
    கொஞ்ச வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இத்தகைய
    சலிப்பு வராது; புதிய நாடு, ஊர்
    சுற்றுவதில் மட்டுமே நாட்டம் உடையவர்கள், நிச்சயம் இதுபோன்ற மனநிலைக்குத்
    தள்ளப்படுவார்கள் என்பது என்
    நிலைப்பாடு!

    ReplyDelete
  5. /////Blogger ஸ்ரீராம். said...
    ஹா... ஹா... ஹா... படிப்படியாய்.../////

    நல்லது. நன்றி ஸ்ரீராம்!!!

    ReplyDelete
  6. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அனுபவ பாடம்.போதும் என்ற மனமிருந்தால்,இருக்கும் இடமே சொர்கம்.நன்றி./////

    உண்மைதான்.உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  8. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    பதிவு விறு விறுப்பாக இருந்தது!
    ஒரளவு நியாயமான வார்த்தைகள்!
    ஆனால்,
    பேரக் குழந்தைகளைப் பார்க்கவேண்டும, அவர்களைக்
    கொஞ்ச வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இத்தகைய
    சலிப்பு வராது; புதிய நாடு, ஊர்
    சுற்றுவதில் மட்டுமே நாட்டம் உடையவர்கள், நிச்சயம் இதுபோன்ற மனநிலைக்குத்
    தள்ளப்படுவார்கள் என்பது என்
    நிலைப்பாடு!//////

    உண்மைதான்.உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  9. ///Blogger kmr.krishnan said...
    True description/////

    உண்மைதான்.உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  10. இரண்டாம்படியில் இப்போது.இன்னும் இரண்டுமுறை போனால் மூன்றாம்படி நிச்சயம் எனத்தான் படுகிறது.சொல்லிச் சென்றவிதம் அருமை

    ReplyDelete
  11. ////Blogger Ramani S said...
    இரண்டாம்படியில் இப்போது.இன்னும் இரண்டுமுறை போனால் மூன்றாம்படி நிச்சயம் எனத்தான் படுகிறது.சொல்லிச் சென்றவிதம் அருமை/////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com