23.8.18

நீங்களும் நானும் சனீஷ்வரனும்!!!!


சனீஷ்வரன்
---------------------------------------
நீங்களும் நானும் சனீஷ்வரனும்!!!!

           “அப்பா சாமி! எனக்கு ஏழரைச் சனி. படாத பாடு படுத்துகிறது. ஏனென்று தெரியவில்லை? என்னை மட்டும் ஏன் இந்தப் பாடு படுத்துகிறது?” என்று சிலர் புலம்புவதை பார்த்திருக்கிறேன்.

சனீஷ்வரன் அப்படி எல்லாம் படுத்த மாட்டார். ஜாதகப்படி என்ன கஷ்ட, நஷ்டத்தைக் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் கொடுப்பார். அதிகப் படியானதெல்லாம் ஒன்றும் இருக்காது என்று சொல்வேன்

          “இல்லை சாமி. நானும் மகர ராசிக்காரன்தான் என் நெருங்கிய நண்பனும் மகர ராசிக்காரன்தான். அவனுக்கு ஒன்றும் நேரவில்லை. சந்தோஷமாக இருக்கிறான். நான்தான் அவதிப்படுகிறேன். அது ஏன்? விளக்கம் சொல்லுங்கள்”

அஷ்டகவர்க்கத்தை வைத்துப் பார்த்தால் பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்! ஏழரைச் சனி என்றில்லை எட்டாம் இடத்துச் சனி, பத்தாம் இடத்துச் சனி என்று எல்லா விதமான சனி அமைப்புக்களுக்கும் விடை கிடைக்கும்!!!!

337 வகுத்தல் 12 வீடுகள் சராசரி ஒரு வீட்டிற்கு 28 பரல்கள். கோச்சாரச் சனி தான் பயணிக்கும் இடங்களில் 30 பரல்களும், அதற்கு மேலும் உள்ள வீடுகளில் நன்மைகளைத்தான் செய்வார். கஷ்டங்கள் இருக்காது. ஜாதகத்தைப் பார்த்தால், அதாவது சர்வாஷ்டகவர்க்கத்தைப் பார்த்தால் அது தெரியவரும்.

அதே போல வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களும் தெரிய வரும். சனி முன்பு இருந்த வீட்டை விட பெயர்ச்சியில் மாறி அமரும் வீட்டில் அதிக பரல்கள் இருக்கும் வீடுகளில் தான் பயணிக்கும் இரண்டரை ஆண்டு காலமும் ஏற்றத்தைத்தான் கொடுப்பார்,
ஒரு வேளை பரல்கள் குறைந்திருந்தால் இறக்கமான காலம் என்பதை உணர்ந்து அடக்கி வாசிக்க வேண்டும்

அதே போல தசா புத்திக் காலங்களுக்கும் உரிய பலன்களும் அஷ்டக வர்க்கம் மூலம். தெரியவரும்

மொத்தத்தில் அஷ்டகவர்கத்தை வைத்து சனீஷ்வரன் என்று மட்டுமில்லை மற்ற கிரகங்களையும் - அதனதன் சுய வர்க்கத்தை வைத்து கிண்டி கிழங்கெடுத்து விடலாம்

எப்படி என்கிறீர்களா?

எழுதுங்கள். உங்கள் ஜாதகத்திற்கான அஷ்டகவர்க்கப் பலனை அலசிச் சொல்கிறேன். Subject Boxல் அஷ்டகவர்க்கப் பலன் என்று மறக்காமல் குறிப்பிடுங்கள்!!!!

அதற்கான மின்னஞ்சல் முகவரி:  spvrsubbiah@gmail.com

அன்புடன்
வாத்தியார்

=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com