3.5.18

அன்றாடம் எதை சோதித்துப் பார்க்க வேண்டும்?


அன்றாடம் எதை சோதித்துப் பார்க்க வேண்டும்?

நாம் இறைவனை நம்புவதும் நம்பாததும் அவரை எந்த விதத்திலும் பாதிக்காது. அவா் எல்லையற்றவா். ஒருவன் வாழ்வில்
உயர்வதும், தாழ்வதும் அவன் எண்ணத்தைப் பொறுத்ததே.

கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டும். பாவம் செய்ய பயப்பட வேண்டும் . இதுவே ஆன்மிக வாழ்வின்
அடிப்படை.

ஞானயோகம் கடினமானது; ஆரம்ப நிலையிலுள்ள சாதகா்களுக்கு தியானப் பாதையும் எளிதல்ல. எனவே ஜபம் செய்யுங்கள்.

ஆனால் எதைச் செய்தாலும் பக்தியுடன் செய்யுங்கள்.

பத்தியம் இருந்தால் வியாதி தீர்வது போல, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், தெய்வ நிலைக்கு உயரலாம். விலங்கையும், மனிதனையும் பிரித்துக் காட்டும் எல்லைக்கல்லே ஒழுக்கம். ஒழுக்கம் தவறி விட்டால் மனிதன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து விடுகிறான்.

பெண்ணாசையை விட்டு விடு என ராமாயணமும், மண்ணாசையை விட்டு விடு என மகாபாரதமும் நமக்கு வழிகாட்டுகின்றன. நீர், நிலம், ஆகாயம் போன்ற இயற்கை கூட ஒருநாள் அழிந்து போகும். ஆனால், செய்த தர்மத்திற்கு என்றும் அழிவில்லை.

புகழ்ச்சியைக் கண்டு மகிழ்வதும், இகழ்ச்சியைக் கண்டு துவள்வதும் கூடாது. போற்றுதலையும், தூற்றுதலையும் சமமாகக்
கருதுபவர்களின் உள்ளத்தில் அமைதி குடியிருக்கும்.

மனிதனுடைய உயர்வும் தாழ்வும் நாக்கைப் பொறுத்தே அமைகிறது. அதனால், நாவடக்கத்துடன் நயமாகப் பேசுவது நன்மை தரும்.

பிறருடைய குற்றங்களை அலசி ஆராய்வது கூடாது. நாம் செய்த குற்றத்தை மூடி மறைப்பது கூடாது. இரண்டையும் சமமாகக்
கருதினால், மனதில் அமைதி நிலைக்கும்.

பணிவு மனித வாழ்வின் உயிர்நாடி. அதனால், நம் வாழ்க்கைத் தரம் உயர்வு அடைகிறது. பணிவின்றி வாழ்பவன் வாழ்வில் வளர்ச்சி
பெற முடியாது.

மழை சுத்தமான நீராக இருந்தாலும், சேருமிடத்தைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது. அதுபோல, மனிதன் யாருடன்
சேர்கிறானோ அந்த குணத்தையே அடைகிறான். எனவே, நீங்கள் சேரும் கூட்டத்தில் கவனம் தேவை.

வியாபாரி அன்றாடம் லாபநஷ்டம் பார்ப்பது போல, இன்றைய பொழுதை எப்படி கழித்துக் கொண்டிருக்கிறோம் என்று அவ்வபோது நாமே நம்மை சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir very excellent post thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    குரங்கு போல் தாவி அலையும் மனித மனத்தை அடக்கி கடிவாளமிட்டு,தியானத்தின் மூலம்
    ஓர் நிலைப்படுத்தி,அதன் மூலம்
    நல்வழி அறிந்து,அன்றாடம் நம்மை
    நாமே தூய்மைப் படுத்துதல் மிக எளிய காரியமல்ல எனினும் தொடர் முயற்சி வெற்றி தரும் என்பதில்
    ஐயமேயில்லையெனலாம்!
    இன்றைய பதிவுக்கு ஒரு பலே! ஐயா!!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning.... Wonderful post...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent post thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. ////Blogger Subathra Suba said...
    Very good information good morning////

    நல்லது. நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    Best advice Sir!!/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    குரங்கு போல் தாவி அலையும் மனித மனத்தை அடக்கி கடிவாளமிட்டு,தியானத்தின் மூலம்
    ஓர் நிலைப்படுத்தி,அதன் மூலம்
    நல்வழி அறிந்து,அன்றாடம் நம்மை
    நாமே தூய்மைப் படுத்துதல் மிக எளிய காரியமல்ல எனினும் தொடர் முயற்சி வெற்றி தரும் என்பதில்
    ஐயமேயில்லையெனலாம்!
    இன்றைய பதிவுக்கு ஒரு பலே! ஐயா!!////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  8. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning.... Wonderful post...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  9. வணக்கம் குருவே
    மிக அருமையான பதிவு. இதை பின்பற்றுவோர மன அமைதி பெறுவர் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்

    ReplyDelete
  10. ///Blogger Rajam Anand said...
    வணக்கம் குருவே
    மிக அருமையான பதிவு. இதை பின்பற்றுவோர மன அமைதி பெறுவர் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com