19.4.18

Cinema நெஞ்சைத் தொட்ட பாடல்!


நெஞசைத் தொட்ட பாடல்!

*"பொட்டு வைத்த முகமோ....." பெண்ணின் முகத்திற்கு இன்னும் வசீகரத்தை கொடுப்பது பொட்டு என்று சொல்லாமல்
சொல்கிறார் கவிஞர்!

கவிஞர் கண்ணதாசன் இயற்றி, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில்  எஸ்.பி.பாலு & பி.வசந்தா  பாடிய  ஒரு
அருமையான பாடல்.  ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த இப்பாடல் மலை பிரதேசத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது*

*பாடலில் சிவாஜிக்கு எஸ்.பி.பி. பாட, ஜெயலலிதாவிற்கு வசந்தா ஹம்மிங் பாடினார். சிறுவயது முதலே பரதம் முதலிய நடனப்
பாணிகளைப் பயிற்சி செய்திருந்த ஜெயலலிதா, பாரம்பரிய நடனம் பரிமளித்த இந்த பாடலில் உயர்ந்து நின்றார். படத்தில் ‘பொட்டு
வைத்த முகமோ’ பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப தன் நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப்
பார்த்து வியந்தார் பாலு. அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்பிபிக்குக் கிட்டியது.* 

*நடிகர் திலகத்திற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல் .இந்தப் பாடலில் பி.வசந்தாவின் ஹம்மிங் குரல் அற்புதமாக
இழைந்தது...ஹம்மிங் ராணி’யாகப் பயன்படுத்தும் ஒரு போக்கை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஆரம்பித்து அதையே
வசந்தாவின் முத்திரையாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.  இந்தப் பாடலில் தனக்கு பி.வசந்தா பின்னணிப் பாடினார்

என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அவருக்குப் பின்னாளில் கலைமாமணி விருதை வழங்கினார் ஜெயலலிதா...மிகப் பெரிய
நட்சத்திரப் பாடகியாக பரிணமிக்கவிட்டாலும்,  இந்த ஆந்திர குயில் பல மொழிகளில் பல நல்ல பாடல்களைப் பாடி,  நிறைவான
குடும்பத்தலைவியாக இருப்பவர.*

*இயற்கையை வர்ணிக்கும்போது பெண் போல் இருப்பதாக சொல்கிறார்....  கண்ணதாசன் கற்பனையில் மாலை நேரத்து அழகை...  பெண்ணை போல்  என்று வர்ணிக்கிறார்...  இந்த பாடல் ஒலிப்பதிவு செய்த அன்றே இரவில் அகில இந்திய வானொலியில் சுடச்சுட ஒலிப்பரப்பினார்களாம். "தரையோடு வானம் விளையாடும் கோலம் ... இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன் " போன்ற வரிகளில் ஆன்மாவின் காதலை கசியவிட்டிருப்பார் கண்ணதாசன். கேட்டு ரசியுங்கள். இதோ உங்களுக்காக!*

*கருவூட்டம்: சுந்தர சீனிவாசன்*

 ┈━❀••🌿🍁🌺🍁🌿
*பாடல் வரிகள்:*
பொட்டு வைத்தமுகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ... கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்
புன்னகைப் புரிந்தாள்,,,,,

(பொட்டு வைத்த..)

ஆஆஆஆஆஆஆ.....
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
லலாலலாலலாலலா
என்னுடன் கலந்தாள் லலாலலாலலாலலா

ஆஆஆஆஆஆஆஆ. ஹொஹொஹொஹோ

மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா
நிழல் போல் மறைந்தாள். லலாலலாலலாலலா

பொட்டு வைத்த முகமோ ஓஓஓஓஓ.
கட்டி வைத்த குழலோ ஓஓஓஒ…..
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ லலாலலாலலாலலா
அந்தி மஞ்சள் நிறமோ லலாலலாலலாலலா

┈┉❀••🌿🍁🌺🍁🌿
🎬 :சுமதி என் சுந்தரி-1971
🎻 : எம்.எஸ்.வி
🖌:   கண்ணதாசன்
🎤 :SPB& பி.வசந்தா
👥 : சிவாஜி & ஜெயலலிதா
 ┈━❀••🌿🌺🌿••┉┈
ஆக்கம்: இசைப் பாயணத்தில் சுந்தர சீனிவாசன்
----------------------------------------------------------
கேட்டதில் பிடித்தது!

அன்புடன்
வாத்தியார்
===========================
பாடலின் காணொளி வடிவம்:



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. வணக்கம் குருவே!
    நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இந்தப் பாடலைக் கேட்கச்
    செய்தமைக்கும்,பாட்டின் பிண்ணனி பற்றித் தெரியப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி ஐயா!
    நன்றாக ரசித்தோம்!

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    Nice melody Sir////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  3. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இந்தப் பாடலைக் கேட்கச்
    செய்தமைக்கும்,பாட்டின் பிண்ணனி பற்றித் தெரியப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி ஐயா!
    நன்றாக ரசித்தோம்!//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!

    ReplyDelete
  4. நான் சுந்தர சீனிவாசன்..... இந்த blog பார்த்தவுடன் வியந்து தான் போய்விட்டேன்,என் அனுமதி இல்லாமல் என்னுடைய கருவூட்டம் இங்கே பதிவாகிறது

    ReplyDelete
  5. //Blogger Seenu S said...
    நான் சுந்தர சீனிவாசன்..... இந்த blog பார்த்தவுடன் வியந்து தான் போய்விட்டேன்,என் அனுமதி இல்லாமல் என்னுடைய கருவூட்டம் இங்கே பதிவாகிறது/////

    உங்கள் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே! கரூவூட்டம் சுந்தர சீனிவாசன் என்று உங்கள் பெயரைக் குறிப்பிட்டுத்தானே பதிவில் வலை ஏற்றியுள்ளேன். அதைக் கவனித்தீர்களா அன்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com