15.3.18

Humour நகைச்சுவை: படித்துவிட்டு யாரும் சிரிக்கக் கூடாது


Humour நகைச்சுவை: படித்துவிட்டு யாரும் சிரிக்கக் கூடாது

நாடாளுமன்றத்தில் பேசும் போது பாஜக உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம்.

“ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம்.
ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்:அறை நிறையவில்லை.
அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான்: அறை நிறையவில்லை.
மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கிஅறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”...........
அந்த உறுப்பினர் பின் சொன்னாராம்”அந்தமூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர் மோடி,அவர் பொறுப்பேற்றதும் நாட்டில்
இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”....

பின் வரிசையிலிருந்துஒரு குரல் எழுந்தது "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...?
-------------------------------------------------------------------------------------
2
தன் சட்டைப் பையினுள் இருந்து அழகான புதிய செல் போனை எடுத்த அந்த இளைஞன் கடற்கரையில் அமர்ந்திருந்த காதலியிடம் நீட்டி சொன்னான்....

" அன்பே ! இந்த செல் போன் உனக்குத் தான் . வைத்துக் கொள். "

பளபளப்பான அந்த செல் போனை வைத்த கண் வாங்காமல் பார்த்த காதலி அவனை முத்தமிட்டு கேட்டாள்.

" இது எனக்குத் தானா? என் மீது இவ்வளவு அன்பா? விலை அதிகமாக இருக்குமே ! எங்கே வாங்கினீர்கள்? "

காதலன் சிரித்துக் கொண்டே பதிலளித்தான் " இது வாங்கியதில்லை. ஓட்டப் பந்தயத்தில் பரிசாகக் கிடைத்தது. "
தன் காதலன் ஓட்டப் பந்தய வீரன் என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் மீண்டும் முத்தமிட்டு கேட்டாள்.

" ஓட்டப்பந்தயத்தில் எத்தனை பேர் ஓடினீர்கள் டார்லிங்? "
காதலன் பெருமையாகச் சொன்னான்.

*" மூன்று பேர்.  நான்,  செல்போன் கடைக்காரன், ஒரு போலீஸ்..."*
-----------------------------------------------------------------------------
3
தமிழ் மொழியில் மட்டுமே இது போன்ற வார்த்தை ஜாலங்கள் சாத்தியம்
அதிகாலை வேலை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.
காவலர் : ஹலோ V 7 காவல் நிலையம், சொல்லுங்க.
எதிர் முனை : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்.
காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?
எதிர் முனை : தெரியும் சார்.
காவலர் : யார் சுட்டது?
எதிர் முனை : சுடலை சார்.
காவலர் : யோவ் சுட்டங்களா இல்லையா?
எதிர் முனை : சுட்டாங்க சார்.
காவலர் : யார் சுட்டது?
எதிர் முனை : சுடலை சார்.
காவலர் : உங்கள் பேர் என்ன?
எதிர் முனை : சாரதி சார்.
காவலர் : கோபத்துடன் எந்த எடத்துல இருக்கீங்க
கொலை நடந்த இடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றனர் காவல் துறையினர்.
அந்த இடத்தில இருவர் மூவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
காவலர் : இங்க கொலையா பார்த்த சாரதி யாரு?
அங்கே இருந்த இருவர் கையை தூக்கி நான் தான் என்று கூறினார்.
ஒருவரைப் பார்த்து காவலர் : சொல்லுங்க என்ன பார்த்தீங்க?
பார்த்த சாரதி : நான் ஒன்னும் பார்க்கல சார் நான் இப்பத்தான் வந்தேன்.
காவலர் : யோவ் பிறகு எதுக்கு யா கையைத்தூக்குன.
பார்த்த சாரதி : என் பேர் பார்த்த சாரதி அதான் கையத் தூக்கினேன்.
இன்னொருவரைப் பார்த்து காவலர் : அப்பா நீ யாருயா?
சாரதி (போனில் பேசியவர்):  நான் தான் பார்த்த சாரதி.
கடுங்கோபத்தில் காவலர் : யோவ் உன் பேரு பார்த்த சாரதி யா?
சாரதி : இல்ல சார்.
காவலர் : நீ தான் யா சொன்ன பார்த்த சாரதினு.
சாரதி : ஆமா சார்.
காவலர் : அப்ப ஏன் இல்லனு சொன்ன?
சாரதி : என் பெரு பார்த்த சாரதி இல்லேனு சொன்னேன் சார் .
காவலர் : அப்ப உன் பேரு என்ன?
சாரதி : சாரதி சார்.
காவலர் : சுட்டதை பார்த்தது நீங்கள் தானா?
சாரதி : ஆமாம் சார்.
பார்த்த சாரதியப் பார்த்து
காவலர்  : அப்ப நீங்க
பார்த்த சாரதி : கொலையைப் பார்க்காத பார்த்தசாரதி சார்.
சாரதியைப் பார்த்து
காவலர் : போன் செய்தது நீ தானா?
சாரதி : ஆமாம் சார்.
காவலர் : சுட்டது யார்?
சாரதி : "மூன்றாம் நபரைக்  காட்டி" இவர் தான் சார்.
மூன்றாம் நபரைப்  பார்த்து
காவலர் : நீ யாரு?
3ம் நபர் : நான் சுடலை சார்.
சாரதியைப் பார்த்து காவலர் : யோவ் அவரு சுடலைனு சொல்லுறாரு.
சாரதி :  ஆமாம் சார் அவர் சுடலை.
காவலர் : அப்ப சுட்டது யாரு?
சுடலையைக் காண்பித்து சாரதி : இவர் தான் சார்.
காவலர் இப்பொழுது கீழ்ப்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கிறார்.
ரசிக்கத் தக்கது.   ரசித்தேன்
ரசித்துச் சிரித்தேன்...
--------------------------------------------------------
4
ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைக் காண அவளது தோழன் வருகிறான்.
உடனே அந்த பெண் அவனிடம்," நீ பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள்.
உடனே அவன் அந்த பெண்ணிடம்,"இல்லை நான் ஹும்ம்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்" என்கிறான்.
உடனே அந்த பெண்,"என்னிடம் அந்த புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள.. கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை பெற்று கொள்" என்கிறாள்.
உடனே அவன் அந்த பெண்ணிடம், நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா என்கிறான்.
உடனே அந்த பெண் அவனிடம், பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும் உனக்கு கொண்டு வருகிறேன் என்கிறாள்.
உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம், "இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?" என்று கேட்கிறார்.
உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்" என்று கூறுகிறாள்.
உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..," நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய "வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை" என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு என்கிறார்.
நீதி : அடேய்.. நீ LKG படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா.....
=========================================================
5
கல்லாபெட்டி சிங்காரத்தின் நகைச்சுவை!


இந்த 5ல் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. Good morning sir all are very humerous thank sir vazhga valamudan

    ReplyDelete
  2. அனைத்தையும் மீண்டும் ரசித்தேன்.

    5

    ReplyDelete
  3. ஒவ்வொன்றும் ஒரு மணிஐயா!பிறரைப் புண்படுத்தாமல் நகைச்சுவை அமைப்பது எப்படி என்பதற்கான இலக்கணம் ஐயா!

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    அட்டகாசமான நான்காம் நகைச்சுவைக்கு அடுத்தது ஐந்தாவதாக உள்ள வீடியோ. ஆக இந்த இரண்டும் நல்ல கலகலப்பு!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,நான்குமே சிறப்பு.மேலும் புதிது.வாய்விட்டு சிரித்தோம்.நன்றி.

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir all are very humerous thank sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  7. /////Blogger ஸ்ரீராம். said...
    அனைத்தையும் மீண்டும் ரசித்தேன்.////

    நல்லது. நன்றி ஸ்ரீராம்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    ஒவ்வொன்றும் ஒரு மணிஐயா!பிறரைப் புண்படுத்தாமல் நகைச்சுவை அமைப்பது எப்படி என்பதற்கான இலக்கணம் ஐயா!//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அட்டகாசமான நான்காம் நகைச்சுவைக்கு அடுத்தது ஐந்தாவதாக உள்ள வீடியோ. ஆக இந்த இரண்டும் நல்ல கலகலப்பு!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  10. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நான்குமே சிறப்பு.மேலும் புதிது.வாய்விட்டு சிரித்தோம்.நன்றி.////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com