22.3.18

சிற்றின்பமும் பேரின்பமும்!

சிற்றின்பமும் பேரின்பமும்!

*சித்தர் வாக்கு.....*

*இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!*

*படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.*

*படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.*

*படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.*

*படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.*

*படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.*

*படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.*

*என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.*

*இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.*

*நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.*

*நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.*

*அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.*

*அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.*

*செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.*

*செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.*

*செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.*

*செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.*

*புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.*

*அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.*

*இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.*

*வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.*

*நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.*

*நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.*

*உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.*

*உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.*

*இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.*

*துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.*

*எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.*

*எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.*

*பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.*

*மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.*

*பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.*

*பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.*

*சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.*

*எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.*

*பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.*

*தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.*

*அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.*

*அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.*

*அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.*

*அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.*

*அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.*

*அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.*

*பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.*

*பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.*

*முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.*

*முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.*

*இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.*

*கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.*

*உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.*

*உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.*

*புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.*

*புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.*

*மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.*

*மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.*

*மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.*

*மரணத்தையும் வெல்வது பேரின்பம்.*

*மனமாய் இருந்தால் சிற்றின்பம்.*

*மனதைக் கடந்தால் பேரின்பம்.*

*வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.*

*எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.*

*பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.*

*மொத்தமாய் கண்டால் பேரின்பம்.*

*அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.*

*அகங்காரம் துறந்தால் பேரின்பம்.*

*தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.*

*அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.*

*ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.*

*ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.*

*துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.*

*துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.*

*ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.*

*இறைவனால் தரப்படுவது பேரின்பம்.*

*உலகைப் பற்றினால் சிற்றின்பம்.*

*இறைவனைப் பற்றினால் பேரின்பம்.*

*பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.*

*தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.*

*இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.*

*இன்பமான இன்பமே பேரின்பம்.*

*அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.*

*ஞானம் விரும்புவது பேரின்பம்*

*பெற்று மகிழ்வது சிற்றின்பம்.*

*கொடுத்து மகிழ்வது பேரின்பம்.*

*சக்தியை இழப்பது சிற்றின்பம்.*

*சக்தியாய் மாறுவது பேரின்பம்.*

*பற்றுக் கொள்வது சிற்றின்பம்.*

*பற்றற்று இருப்பது பேரின்பம்.*

*மாறுவது, தாவுவது சிற்றின்பம்.*

*மாறாதது நிலைத்தது பேரின்பம்.*

*நிலையற்றது சிற்றின்பம்.*

*நிரந்தரமானது பேரின்பம்.*

---------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. அடேங்கப்பா.... அருமை.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    கவிஞர் மற்றும் ஏபிஎன் ஆகியோரின் விளையாடும் வார்த்தைகள்! எத்தனை எத்தனை தத்துவங்கள் தாளமிடுகின்றன!
    சிற்றின்ப, பேரின்பங்கள் என்னவென்பதை அழகாகக் கூறியுள்ளார், முடிவில் அவற்றை நிலையற்றது மற்றும், நிரந்தரமானதும் என்று பிரிப்பது நல்ல அழகு!

    ReplyDelete
  3. அய்யா வணக்கம்.

    அருமையான பதிவு சிற்றின்ப, பேரின்ப விளக்கம். இதைப் படித்தவுடன் எனக்கு இந்த கதை நினைவிற்கு வந்தது.

    ஒரு காவல்காரன், வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''மகா ஜனங்களே ஜாக்கிரதை'' என்று கத்திக்கொண்டே போவான்....ராஜா கால வழக்கம்.
    ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் மகனிடம் செய்ய சொல்லி சென்று விட்டான்....
    அவன் மகனோ முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த_பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது...

    இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு "ஜாக்கிரதை" சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான்....
    அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்....
    அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான்.
    ''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், பையன் பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ..... அவனுக்கு கொடும் தண்டனையை கொடுத்து விடுவானோ?''
    என்று காவல் காரன் நடுங்கினான்.....
    ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?
    முதல் நாள் இரவு பையன் '' ஜாக்கிரதை. ஜாக்கிரதை'' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை....

    அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் மாறு வேடத்தில் இரவு வலம் வந்த‌ ராஜாவை மயக்கியது.
    அந்த நீதி வாக்யங்கள் இவைதான்.......

    #ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில........

    (1) “மாதா நாஸ்தி பிதா நாஸ்தி
    நாஸ்தி பந்து ஸஹோதரா
    அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி
    தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

    அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பனும் நிரந்தரமில்லை, பெற்ற தாயும் நிரந்தரமில்லை, அண்ணன், தம்பியும் நிரந்தரமில்லை,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,.

    (2) “ஜன்மதுக்கம் ஜராதுக்கம்
    ஜாயாதுக்கம் புந;புந:
    சம்ஸார ஸாகரதுக்கம்
    தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

    பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும் துன்பங்கள் மனத்தை மயக்கி இந்த சம்சாரக் கடலில் தள்ளி விடும், வாழ்வே சோகம்,மாயம்,ஆகையால் விழித்துக்கொள் ஜாக்ரதை....

    (3) “காம; குரோதஸ்ச லோபஸ்ச
    தேஹே திஷ்டந்தி தஸ்கரா;
    ஞான ரத்நாப ஹாராய
    தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

    ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் உன் உடம்பினுள்ளேயே குடியிருக்கும் கொள்ளைக்காரர்களப்பா1....உனதுள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை...

    (4) “ஆசாயா பத்யதே லோகே :
    கர்மணா பஹு சிந்தயா:
    ஆயுக்ஷீணம் ந ஜாநாதி
    தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

    ஆசையெல்லாம் தோசை தான் மனிதா, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமாக கொண்டு அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிக்காதே, இதனால் உனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை நீ அறிய மாட்டாய். விழித்துக் கொள்ளவேண்டாமா?

    (5) ஸம்பத: ஸ்வப்ன சங்காஷ:
    யவ்வனம் குசுமோபம்!
    வித்ய்த்சாஞ்சலம் ஆயுஷ்யம்,
    தஸ்மாத் ஜாக்ரதா! ஜாக்ரதா!

    “நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள் போலத்தானடா! , இளமை வயதோ நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறியும் பூவைப் போல உதிர்ந்து விடும். மின்னல் போல தோன்றீ மறையும் இந்த வாழ்க்கை, ஆகையால் விழித்துக் கொள்.

    படித்ததில் பிடித்தது. நன்றி.

    ReplyDelete
  4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  5. ////Blogger ஸ்ரீராம். said...
    அடேங்கப்பா.... அருமை.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    Very good Sir./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete

  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கவிஞர் மற்றும் ஏபிஎன் ஆகியோரின் விளையாடும் வார்த்தைகள்! எத்தனை எத்தனை தத்துவங்கள் தாளமிடுகின்றன!
    சிற்றின்ப, பேரின்பங்கள் என்னவென்பதை அழகாகக் கூறியுள்ளார், முடிவில் அவற்றை நிலையற்றது மற்றும், நிரந்தரமானதும் என்று பிரிப்பது நல்ல அழகு!//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  8. //////Blogger venkatesh r said...
    அய்யா வணக்கம்.
    அருமையான பதிவு சிற்றின்ப, பேரின்ப விளக்கம். இதைப் படித்தவுடன் எனக்கு இந்த கதை நினைவிற்கு வந்தது.
    ஒரு காவல்காரன், வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''மகா ஜனங்களே ஜாக்கிரதை'' என்று கத்திக்கொண்டே போவான்....ராஜா கால வழக்கம்.
    ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் மகனிடம் செய்ய சொல்லி சென்று விட்டான்....
    அவன் மகனோ முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த_பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது...
    இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு "ஜாக்கிரதை" சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான்....
    அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றான்....
    அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தான்.
    ''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், பையன் பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ..... அவனுக்கு கொடும் தண்டனையை கொடுத்து விடுவானோ?''
    என்று காவல் காரன் நடுங்கினான்.....
    ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தான்? எதற்காக?
    முதல் நாள் இரவு பையன் '' ஜாக்கிரதை. ஜாக்கிரதை'' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை....
    அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் மாறு வேடத்தில் இரவு வலம் வந்த‌ ராஜாவை மயக்கியது.
    அந்த நீதி வாக்யங்கள் இவைதான்.......
    #ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில........
    (1) “மாதா நாஸ்தி பிதா நாஸ்தி
    நாஸ்தி பந்து ஸஹோதரா
    அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி
    தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”
    அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பனும் நிரந்தரமில்லை, பெற்ற தாயும் நிரந்தரமில்லை, அண்ணன், தம்பியும் நிரந்தரமில்லை,காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,.
    (2) “ஜன்மதுக்கம் ஜராதுக்கம்
    ஜாயாதுக்கம் புந;புந:
    சம்ஸார ஸாகரதுக்கம்
    தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”
    பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும் துன்பங்கள் மனத்தை மயக்கி இந்த சம்சாரக் கடலில் தள்ளி விடும், வாழ்வே சோகம்,மாயம்,ஆகையால் விழித்துக்கொள் ஜாக்ரதை....
    (3) “காம; குரோதஸ்ச லோபஸ்ச
    தேஹே திஷ்டந்தி தஸ்கரா;
    ஞான ரத்நாப ஹாராய
    தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”
    ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் உன் உடம்பினுள்ளேயே குடியிருக்கும் கொள்ளைக்காரர்களப்பா1....உனதுள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை...
    (4) “ஆசாயா பத்யதே லோகே :
    கர்மணா பஹு சிந்தயா:
    ஆயுக்ஷீணம் ந ஜாநாதி
    தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”
    ஆசையெல்லாம் தோசை தான் மனிதா, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமாக கொண்டு அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிக்காதே, இதனால் உனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை நீ அறிய மாட்டாய். விழித்துக் கொள்ளவேண்டாமா?
    (5) ஸம்பத: ஸ்வப்ன சங்காஷ:
    யவ்வனம் குசுமோபம்!
    வித்ய்த்சாஞ்சலம் ஆயுஷ்யம்,
    தஸ்மாத் ஜாக்ரதா! ஜாக்ரதா!
    “நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள் போலத்தானடா! , இளமை வயதோ நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறியும் பூவைப் போல உதிர்ந்து விடும். மின்னல் போல தோன்றீ மறையும் இந்த வாழ்க்கை, ஆகையால் விழித்துக் கொள்.
    படித்ததில் பிடித்தது. நன்றி./////

    அருமை! அருமை! அருமை!
    நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. Dear Sir,

    Please check your e-mail I have transferred Rs.1000/- in your account on 19/02/2018

    R.Arumuga Nainar

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com