13.2.18

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)


Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக்கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித்தந்திருக்கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்வோம்.

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. Good morning sir, absolutely correct sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, absolutely correct sir thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  3. Is there any relation with Jupiter and astrology?

    I thought intuition plays a major role as the astro rules alone can't make one to become a predictor of future. For intuition, the 5th and 9th house to be related or strong.

    I could be wrong, but i read it in past and it made logical sense

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    நானும் ஜோதிடம் படிக்கிறேன் என்று நினைத்தால் மட்டும் போதாது.அத்துடன் அவரது ஜாதகத்தில் எப்படிப்பட்ட அமைப்பு
    இருக்கவேண்டும் என்பது மிகவும்
    முக்கியம என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள்! இந்நேரம் நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் ஜாதகத்தை வைத்துப் பார்த்து விட்டோம் ஐயா..
    வாத்தியாருக்கு நன்றி!!

    ReplyDelete
  5. ////Blogger selvaspk said...
    Is there any relation with Jupiter and astrology?
    I thought intuition plays a major role as the astro rules alone can't make one to become a predictor of future. For intuition, the 5th and 9th house to be related or strong.
    I could be wrong, but i read it in past and it made logical sense/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா!!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நானும் ஜோதிடம் படிக்கிறேன் என்று நினைத்தால் மட்டும் போதாது.அத்துடன் அவரது ஜாதகத்தில் எப்படிப்பட்ட அமைப்பு
    இருக்கவேண்டும் என்பது மிகவும்
    முக்கியம என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள்! இந்நேரம் நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் ஜாதகத்தை வைத்துப் பார்த்து விட்டோம் ஐயா..
    வாத்தியாருக்கு நன்றி!!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com