4.5.17

கவிதை: கவியரசரின் அசாத்திய திறமை!!!!


கவிதை: கவியரசரின் அசாத்திய திறமை!!!!

அது  ஒரு  பிப்ரவரி  மாதம்.  M.S. விஸ்வநாதன் , கவிஞருக்கு  போன் செய்து பேசினார்:

கவிஞரே  Sivaji படம் .  *மே*  மாதம்  சிங்கப்பூரில சூட்டிங்.    ஒரு  பிளவர்  ஷோ வுக்கு  தகுந்த  மாதிரி  ஒரு  பாட்டு  எழுதி  கொடுங்க....

ஒரு  பத்து  நாள்  கழித்து  அடுத்த  போன்.    என்ன  கவிஞரே இன்னும்  பாட்டு  வந்து  சேரலையே .

ஆனா  நம்ம  கவிஞர்  கண்ணதாசனோ  ஒரு  மஜாவுலே எதுக்கும்  அசரல.  இன்னொரு பத்து  நாள்  கழித்து  அடுத்த  போன்.

 என்ன  கவிஞரே இப்படி லேட்  பண்றீங்க. ... நான்  டியூன்  போட்டு , Sivaji   கிட்ட  சம்மதம்  வாங்கி , ரெக்கார்டிங்  பண்ணி , அப்புறம்  *மே*  முதல்  வாரத்தில்  சூட்டிங். .. இப்புடி  லேட்  பண்ணுனா  ...ரொம்ப  பிரச்சனை  ஆயிடும். ...

இன்னொரு பத்து  நாள். ... ஒன்னும்  ஆகலை. ...

 அடுத்த  போன்.... சற்று  ஓங்கிய  குரலில். .. என்ன  கவிஞரே.... எல்லோரும்  ரொம்ப  கோபமா இருக்காங்க. ... *மே*. .

மாத *மே*  முடிஞ்சுடும்  போலிருக்கு.....எனக்கும்  சரி  பட்டு  வருமானு  தெரியல..... .. சற்று  கடின  வார்த்தைகளில். ....

கவிஞருக்கோ  தன் மீது  பரிதாப   கோபம்....

எப்பவுமே  அன்பாக இருக்கும் தம்பி  MSV யே   இப்படி  கடின  வார்த்தைகளை  உபயோகித்து  பேசியது  மனதில்  ஒரு  நெருடல். . ...

அடுத்த  நாள்  MSV  கையில்  பாட்டு. ....

அன்பு  நடமாடும்  கலைக்கூட *மே*.....
ஆசை மலை  மேக   *மே*...  
கண்ணில்   விளையாடும்  எழில்  வண்ண  *மே* ...
கண்ணித் தமிழ்  வண்ண *மே*......

MSV  கண்களில்  கண்ணீர். ...

எல்லா வரிகளுமே மே என்று முடியும் படி இருந்தது. அதுதான் கவியரசரின் திறமை!!!

பாடலின் முழு வரிகள்:

திரைப்படம்: அவன் தான் மனிதன் (1975)
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத்தோட்ட மணியாரமே பாடும் புது ராகமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் தவமே சென்னல் குலமன்னனே
இன்று கவிபாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே உலகம் நமதாகுமே
அன்று கவிவேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
======================================================

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. கவி உலகின் பிதாமகர் ...

    ReplyDelete
  2. அறியாத தகவல். எனக்கு பிடிச்ச பாடல்

    ReplyDelete
  3. அழகு...ஆனந்தம்...இனிமை...

    ReplyDelete
  4. ////Blogger SELVARAJ said...
    கவி உலகின் பிதாமகர் ...////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  5. ////Blogger ராஜி said...
    அறியாத தகவல். எனக்கு பிடிச்ச பாடல்////

    நல்லது. நன்றி சகோதரி!!!

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    Beautiful Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. ////Blogger J Murugan said...
    அழகு...ஆனந்தம்...இனிமை...////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,அவர் பிறவிக் கலைஞர் ஆயிற்றே.அவருக்கு கோபத்திலும் பாட்டு வரும்.வருத்தத்திலும் பாட்டு வரும்.நன்றி.

    ReplyDelete
  9. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அவர் பிறவிக் கலைஞர் ஆயிற்றே.அவருக்கு கோபத்திலும் பாட்டு வரும்.வருத்தத்திலும் பாட்டு வரும்.நன்றி./////

    ஆமாம் உண்மைதான். அவருக்கு எந்த சூழ்நிலையிலும், எந்த மனநிலையிலும் பாட்டு வரும். வந்தது. நன்றி!!!!!

    ReplyDelete
  10. He is a BORN POET. NO substitute till date.

    ReplyDelete
  11. //////Blogger Jayakaanthan Devisigamony said...
    He is a BORN POET. NO substitute till date./////

    உண்மைதான். இன்றுவரை அவருக்கு நிகரான ஒரு சிறந்த பாடலாசிரியர் நமக்குக் கிடைக்கவில்லை! நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com