30.8.16

மனவளம்: வாழ்வென்பது எது வரை?

மனவளம்: வாழ்வென்பது எது வரை?

சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......!!!

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே,

உயிர் பிரிய-வாழ்வு......

சுற்றம்,நட்பு,செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை,ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
 பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
 இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்
 உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக்கொள்ளலாம்-பொறு
 உரிமை அறிவர்,கடமை அறியார்

 அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி-அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......

எல்லாவற்றையும் தந்துவிட்டு,பின் கை
 ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
 வைத்திருந்தால்,

எப்போது சாவாய் என-எதிர்பார்த்து
 காத்திருப்பர்.

மாற்ற முடியாத தை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
 வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு
 பாராட்டு-நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

இறை பக்தி கொண்டு......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
 மனநிறைவோடு வாழ்-இன்னும்......

இருபது,முப்பது,நாற்பது ஆண்டுகள்.
சுலபமாக ஓடிவிடும்......!!!

அதற்கு தயாராகு......!!!

படித்ததில் பிடித்தது......!!!
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. Respected Sir,

    Happy morning.. Superb post.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    உள்ளேன், ஐயா!

    ReplyDelete
  3. வணக்கம் அய்யா!
    சீன அறிஞர் சொன்னது நன்று. நம்மாட்களும் நல்லாத்தான் சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

    "அன்பாயிரு, ஆனால் அடிமையாகாதே.
    இரக்கங்காட்டு,ஆனால் ஏமாந்து போகாதே.
    கொடையாளியாயிரு, ஆனால்
    ஓட்டாண்டியாயிராதே.
    சிக்கனமாயிரு,ஆனால் கருமியாயிராதே
    வீரனாயிரு,ஆனால் போக்கிரியாயிராதே
    நல்லோரை நாடு,ஆனால் அல்லோரை
    வெறுக்காதே.
    சுறுசுறுப்பாய் இரு. ஆனால் படபடப்பாயிராதே. மொத்தத்தில்
    பற்றற்றிரு, ஆனால் காட்டுக்குப் போய்விடாதே!"
    இது போன்ற மனவளக் கட்டுரைகளை அடிக்கடி படித்தால் மன அமைதி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    நன்றி!


    ReplyDelete
  4. யதார்த்தமான கவிதை அய்யா

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,நல்ல கருத்துகள்.படித்து பார்த்தாலே மகிழ்வாக உள்ளது.பழகிப்பார்த்தால்!.நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம். மிகநல்ல கருத்துகள். பகிர்ந்து கொள்கிறேன் ஐயா.

    ReplyDelete
  7. //////Blogger kmr.krishnan said...
    Very very nice. Thank you Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning.. Superb post.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  9. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    உள்ளேன், ஐயா!////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  10. /////Blogger venkatesh r said...
    வணக்கம் அய்யா!
    சீன அறிஞர் சொன்னது நன்று. நம்மாட்களும் நல்லாத்தான் சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.
    "அன்பாயிரு, ஆனால் அடிமையாகாதே.
    இரக்கங்காட்டு,ஆனால் ஏமாந்து போகாதே.
    கொடையாளியாயிரு, ஆனால்
    ஓட்டாண்டியாயிராதே.
    சிக்கனமாயிரு,ஆனால் கருமியாயிராதே
    வீரனாயிரு,ஆனால் போக்கிரியாயிராதே
    நல்லோரை நாடு,ஆனால் அல்லோரை
    வெறுக்காதே.
    சுறுசுறுப்பாய் இரு. ஆனால் படபடப்பாயிராதே. மொத்தத்தில்
    பற்றற்றிரு, ஆனால் காட்டுக்குப் போய்விடாதே!"
    இது போன்ற மனவளக் கட்டுரைகளை அடிக்கடி படித்தால் மன அமைதி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    நன்றி!//////

    ஆமாம். நம் முன்னோர்களும், நம் நாட்டு மகான்களும் சொல்லாத கருத்துக்களா!! நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger Sivakumar Selvaraj said...
    யதார்த்தமான கவிதை அய்யா////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நல்ல கருத்துகள்.படித்து பார்த்தாலே மகிழ்வாக உள்ளது.பழகிப்பார்த்தால்!.நன்றி./////

    நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  13. //////Blogger Subathra Suba said...
    All nice words sir/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. /////Blogger Kamala said...
    வணக்கம். மிகநல்ல கருத்துகள். பகிர்ந்து கொள்கிறேன் ஐயா./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com