27.6.16

Humour: நகைச்சுவை: வயிறு வலிக்க சிரிங்க மக்களே!


Humour: நகைச்சுவை: வயிறு வலிக்க சிரிங்க மக்களே!

<><><><><><><><><><><>

Lady : மே ஐ கமின் டாக்டர்

Dr : வந்துட்டீங்களே உட்காருங்க!

Lady : தேங்க் யூ!

Dr : சொல்லுங்க!

Lady : என்னது?

Dr : என்ன பிரச்னைன்னு சொல்ல சொன்னேன்!

Lady : ஓ! பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

Dr: பேர் என்னம்மா?

Lady : மஞ்சுளா!

Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

Lady : டாக்டர் அது என் பேரு!

Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!

Lady : குஞ்சு!

Dr: மொத்தமே அதுதான் பேரா?

Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

Lady : லூஸ் மோஷன்!

Dr : எப்படிப் போறான்?

Lady : மஞ்சளா!

Dr : அதான் மொதல்லயே சொல்லிட்டீங்களே பையனப் பத்தி சொல்லுங்கம்மா!
பையன் எப்படி வெளியே போறான்னு கேட்டேன்!

lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனேஓடிப்போயிடுவான்!

Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன்! இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

Dr : கடவுளே! அம்மா, பையன் ஆய், ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன்! புரிஞ்சுதா!

Lady : அதுதான் சொன்னேனே, மஞ்சளா!

Dr : ஐயோ, அது உங்க பேருன்னு சொன்னீங்க?

Lady : இல்ல டாக்டர், என் பேரு இல்ல, இவன் மஞ்சளாப் போறான்னு சொன்னேன்!

Dr : ஓ! சாரி! சாப்ட்டானா?

Lady : இல்லடாக்டர், நல்லவேளை, அதுக்குள்ளே கையைக் கழுவி விட்டுட்டேன்!

Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா!
இப்படிப் படுத்தறீங்களே!

Dr : உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

Lady : இல்லைங்க அவரு துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!

Dr: என்னம்மா இது பையனுக்கு ரெண்டு வயசு! அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்! எப்படி இது? ஸ்கைப்லயேவா !

lady : சீ! அவர் நடுவுல ஒரு ரெண்டுநாள் வந்திருந்தார்! ஒரு பிரச்னைக்கு!

Dr : வந்தபோது பிரச்னை பண்ணிட்டார் போல!
சரி, சொல்லுங்க, என்ன பிரச்னை!

Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்!

Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?
 நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்!

Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்!

Dr : ஓ சாரி!

Lady : அதுதான் சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?

Dr : ஐயோ ஆண்டவா! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்!

Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்!

Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னும் கொடுக்கறீங்களா?

Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி!

Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா ...

Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.

Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை!
பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

Dr : முருகா! ஏம்மா இப்படி! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம்கழிச்சுத்தான் வருவார்!

Dr : ம் ...கொடுத்து வெச்சவன்!
சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?

Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடலாமா?

Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?

Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது. புரிஞ்சுதா?

சரி, எத்தனை தடவை போனான்?

Lady : எங்க டாக்டர்?

Dr : ம்! என் தலை மேல!
லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ!

நாலுதடவை!

Dr : தண்ணி மாதிரி போனானா?

Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா!

Dr : அம்மா, மஞ்சுளா, உங்க சாம்பார் பத்தி நான் கேட்கலம்மா!

(சாம்பார் எப்படியிருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னு நெனைச்சாலே திக்குங்குது!)

Dr : இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்!

இந்த மாத்திரைய மூணு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க!

அப்புறம் இந்த பௌடர,

Lady : பூசிவிடவா டாக்டர்?

Dr : ம். ஆமாம், அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க!

சாவடிக்கறீங்களே! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?

சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா!

ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா, வந்து காட்டுங்க!

Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டுவரவா டாக்டர்?

Dr : அம்மா பரதேவதே,

Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்!

Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காமிங்க! புரிஞ்சுதா?

Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்ச...?

Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது! வெளியில ஹ்ரிதிக் ரோஷன்ன்னு கூப்பிடுவோம்!

Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க! எனக்கென்ன போச்சு!

Lady : டாக்டர், டயட் சொல்லலியே!

Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ!

Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி!

Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்!

Dr : தாயே, அது உங்களுக்கு! ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும்!

Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் சிக்கனை என்ன செய்ய?

Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

Lady : ஏன், அவங்க உங்க செட் அப்பா?

Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்!

Lady : டாக்டர் பீஸ்?

Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா!

Lady : அப்போ செட் அப்புதான்!
நான் வரேன் டாக்டர்!

Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!

(நர்ஸ்.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு..)
😄😬😀😀😀😀
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19 comments:

  1. உள்ளேன் ஐயா
    மிகவும் நன்றாக உள்ளது ஐயா

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,சிரித்து,சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது.நன்றி.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning...

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. அன்பு ஆசிரியரே, வணக்கம்,
    மிக நகைசுவையாக இருந்தது. திரைபடத்தில் வடிவேலு, எண்ணெய் வாங்க போய், அந்த வார்த்தை விளையாட்டைவிட உங்களுடைய நகைசுவை நல்ல உறையாடல் முறையில் பதிவிட்டு உள்ளீர்கள். இதை திடைபடத்தில் போட்டால் இன்னும் நகைச்சுவையாக இருக்கும்.
    உங்கள் உறையாடல் எழுத்திற்கு பாராட்டுகள்.!!
    நன்றி! பன்னீர்செல்வம்

    ReplyDelete
  5. tremendous. Could not control my laughter.

    Sir, sharing this with my friends with your permission please.

    ReplyDelete
  6. ஏதோ போல வசனம் வருது இல்லையா

    ReplyDelete
  7. ////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா
    மிகவும் நன்றாக உள்ளது ஐயா////

    நல்லது. நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  8. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,சிரித்து,சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது.நன்றி.////

    நல்லது நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  9. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning...
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    ha Ha ha ha ha ha !!!!!!////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. /////Blogger Selvam R said...
    அன்பு ஆசிரியரே, வணக்கம்,
    மிக நகைசுவையாக இருந்தது. திரைபடத்தில் வடிவேலு, எண்ணெய் வாங்க போய், அந்த வார்த்தை விளையாட்டைவிட உங்களுடைய நகைசுவை நல்ல உறையாடல் முறையில் பதிவிட்டு உள்ளீர்கள். இதை திடைபடத்தில் போட்டால் இன்னும் நகைச்சுவையாக இருக்கும்.
    உங்கள் உறையாடல் எழுத்திற்கு பாராட்டுகள்.!!
    நன்றி! பன்னீர்செல்வம்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பன்னீர் செல்வம்!

    ReplyDelete
  12. /////Blogger நன்மனம் said...
    tremendous. Could not control my laughter.
    Sir, sharing this with my friends with your permission please.//////

    அனுமதி தேவையில்லை. நீங்கள் பதிவிட்டுக் கொள்ளலாம்! நன்றி!

    ReplyDelete
  13. ////Blogger mohan said...
    Super comedy.////

    நல்லது. நன்றி மோகன்!

    ReplyDelete
  14. ////Blogger வேப்பிலை said...
    ஏதோ போல வசனம் வருது இல்லையா////

    அப்படியா? எனக்குத் தெரியவில்லை வேப்பிலையாரே!

    ReplyDelete
  15. Dear Vathiyar Ayya,


    Super super super....

    Regards,
    S.Kumanan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com