8.1.16

குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்



குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்

குழந்தை வேலாயுதசாமி கோயில் கோவைக்கு 36 கிலோ மீட்டர் தூரத்தில் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அற்புதமான முருகன் திருத்தலமாகும்!

கோயில் தகவல்கள்

மூலவர்: குழந்தை வேலாயுதசாமி
குழந்தை வேலாயுதசாமி கோயில், (Kurunthamalai Kulanthai Velayuthaswamy Temple) தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், காரமடைக்கருகில் அமைந்துள்ளது.. இக்கோயிலின் முதன்மைக் கடவுளான முருகன், குழந்தை வேலாயுதசாமி என அழைக்கப்படுகிறார். தோற்றத்தில் பழனி முருகனைப் போலவே காணப்படுகிறார். இந்து அறநிலையத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூன் 29, 2012 இல் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டம் செப்டம்பர் 11, 2011 முதல் இங்கும் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

அமைவிடம்

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மருதூர் எனும் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான குருந்தமலையில் இக் கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) காரமடை வரை சென்று அங்கிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம். மேட்டுப்பாளையத்திலிருந்தும் இக் கோயிலுக்குச் செல்லலாம்.

கோயில் அமைப்பு

குருந்தமலை அடிவாரத்தில் ஐந்துநிலை இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட படிக்கட்டுகள் தொடங்குகின்றன. படிக்கட்டுகளின் இருபுறமும் இராஜகம்பீர விநாயகர் சன்னிதி, கன்னிமார் சன்னிதி, நாகர் சன்னிதி, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னிதி, இடும்பன், கடம்பன், வீரவாகு-மூவரின் சன்னிதிகள் உள்ளன. அவற்றைத் தாண்டியதும் படிக்கட்டுகளின் ஒருபுறம் காசிவிசுவநாதர் சன்னிதி விசாலாட்சியம்மனுக்குத் தனி சன்னிதியுடனும் மறுபுறம் தீபத்தூண் மற்றும் இராஜநாகலிங்க சன்னிதியும் அமைந்துள்ளது. இவ்விருவர் சன்னிதிகளைச் சுற்றி சூரியன், பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கம் சன்னிதி, வள்ளி-தேவானை உடனுறை சண்முகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நவக்கிரக, காலபைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன.

காசிவிசுவநாதர் சன்னிதி தாண்டி மேலே குழந்தை வேலாயுதசாமி சன்னிதி இராஜகோபுரத்துடன் சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுதசாமி மேற்கு நோக்கியுள்ளார்.

வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை இக்கோயிலுக்குச் சென்று குழந்தை வேலாயுதசாமியை வணங்கி அவர் அருளைப் பெற்று வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. குடியரசு தின விடுமுறையில் வருகிறேன்
    குழந்தை வேலாயுதரையும் தரிசிக்கலாம்

    சென்று வந்த பின் தகவல்
    சொல்கிறேன்....

    ReplyDelete
  2. குருவே வந்தனம்.
    குமரக் கடவுளின் குழந்தை தரிசனமும் நன்றாகத்தானிருக்கும் என்பகு லேலவனின் அலங்கார அற்புதத்தில்
    தெரிகிறது!
    அவன் அழைத்தால் ஆனந்தத்துடன் செல்வேன்!
    பக்திமலர் பகிர்வுக்கு நன்றி, ஐயா!

    ReplyDelete
  3. I agree with your point of view of this article. This is a good article. Very timely given us so much useful information. Thank you!

    Vashikaran Mantra For Love Marriage
    Kamdev Mantra
    Astrologer
    Love Problem Specialist In USA
    Vashikaran Mantra

    ReplyDelete
  4. குருந்தமலை பற்றி அறியத்தந்தீர்கள் ஐயா...

    ReplyDelete
  5. /////Blogger வேப்பிலை said...
    குடியரசு தின விடுமுறையில் வருகிறேன்
    குழந்தை வேலாயுதரையும் தரிசிக்கலாம்
    சென்று வந்த பின் தகவல்
    சொல்கிறேன்..../////

    ஆஹா! அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    குருவே வந்தனம்.
    குமரக் கடவுளின் குழந்தை தரிசனமும் நன்றாகத்தானிருக்கும் என்பது லேலவனின் அலங்கார அற்புதத்தில்
    தெரிகிறது!
    அவன் அழைத்தால் ஆனந்தத்துடன் செல்வேன்!
    பக்திமலர் பகிர்வுக்கு நன்றி, ஐயா!/////

    கண்டிப்பாக அழைப்பார்! சென்று தரிசித்து மகிழுங்கள்1

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    Good introduction. Thank you Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. ///////Blogger பரிவை சே.குமார் said...
    குருந்தமலை பற்றி அறியத்தந்தீர்கள் ஐயா...//////

    நல்லது. நன்றி குமார்!

    ReplyDelete
  9. Vanakkam ayya bakthi malaril therivathargu nantri vazhga valamudan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com