28.8.15

குட்டிக்கதை: மாட்டைவைத்து மனைவியை அடக்கியவன்


குட்டிக்கதை: மாட்டைவைத்து மனைவியை அடக்கியவன்

ஒரு கிராமத்து கதை.

ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க
போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக்
கொண்டிருந்தாள்.

அந்த கன்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளைகள் இவளைக்
கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள்.

நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு
இந்த பெண்ணைப்பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம்
அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.

அவன் அம்மா ஏற்ககனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள்.

இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என
அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.

போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”

அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான். ஆனால் அவன்
அன்னை நொந்து போய்விட்டதோடு,,மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.

மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று
திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாள்.

திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்
கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்றுகொண்டு இருந்தது.
இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை
அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..

அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால்
அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில்
படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.

அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக்
கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின்
தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.

இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்துபோனதோடு, தான் போட்ட கன்டிசன்களை
எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.

இதுதான் மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை!
=================================================================
படித்ததில் பிடித்தது
-------------------------------------
ஜோதிடப் புத்தகத்தை, அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் முனைப்பாக இருப்பதால், புதிருக்குப் புதிதாக எதையும் எழுதிப் பதியமுடியவில்லை.
பொறுத்துக்கொள்ளுங்கள். செப்டம்பர் 4ம் தேதியில் இருந்து புதிர் பாடங்கள் மீண்டும் வெளியாகும்

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. வணக்கம் ஐயா
    கதை மிகவும் அறுமை ஐயா

    ReplyDelete
  2. ஐயா

    நன்று.இதுதானோ உளவியல் முறை என்பது!

    எம்.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  3. புதுப் பொண்டாட்டியிடம் அந்த சேவலை உடனடியாகக் குழம்பு வைக்கச்சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. ஐயா,
    அந்தக் கால சினிமா (ஆரவல்லி) பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete
  5. ஐயா,
    அந்தக் கால சினிமா (ஆரவல்லி) பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete
  6. //////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    கதை மிகவும் அருமை ஐயா/////

    நல்லது. நன்றி சிவா!

    ReplyDelete
  7. /////Blogger Thirumal Muthusamy said...
    ஐயா
    நன்று.இதுதானோ உளவியல் முறை என்பது!
    எம்.திருமால்
    பவளத்தானூர்//////

    ஆமாம். உளவியலாக போடு போட்டிருக்கிறார் அந்த அன்பர்!

    ReplyDelete
  8. //////Blogger பழனி. கந்தசாமி said...
    புதுப் பொண்டாட்டியிடம் அந்த சேவலை உடனடியாகக் குழம்பு வைக்கச்சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்./////

    அதானே, எங்கள் பழனி கந்தசாமி அண்ணனுக்குத் தோன்றியது, அவருக்குத் தோன்றவில்லை பாருங்கள். குழம்பு வைக்கச் சொல்லிவிடுவோம் அண்ணா!

    ReplyDelete
  9. //////Blogger bhagwan said...
    ஐயா,
    அந்தக் கால சினிமா (ஆரவல்லி) பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.//////

    ஆமாம். உண்மைதான்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger பரிவை சே.குமார் said...
    கதை அருமை ஐயா.../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ////Blogger Durai Selvan said...
    Supers inthathu kadhai sir/////

    நல்லது. உங்களின் விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com