18.8.15

குன்றெல்லாம் ஆள்பவன் அவன்!


குன்றெல்லாம் ஆள்பவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன.
அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------
அழகெல்லாம் முருகனே

அழகெல்லாம் முருகனே ... 
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... 
தெய்வமும் முருகனே
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே ... 
பழநிக்கு வந்தவன் 
பழமுதிர்ச்சோலையிலே ... 
பசியாறி நின்றவன் 
... பசியாறி நின்றவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் ... 
குகனாக வாழ்பவன் 
குறவள்ளிக் காந்தனவன் ... 
குறிஞ்சிக்கு வேந்தனவன் 
பூவாறு முகங்களிலே ... 
பேரருள் ஒளிவீசும் 
நாவாறப் பாடுகையில் ... 
நலம்பாடும் வேலனவன் 
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. I always hum this song Sir. Thank you, Sir

    ReplyDelete
  2. அரோகரா...
    அரோகரா...

    அரோகரா...
    அரோகரா...

    ReplyDelete
  3. வணக்கம் ஆசானே !

    அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையனின் :-)) திருக்கோவிலை பார்த்து பார்த்து பரவசம் பட செய்த தங்களுக்கு கோடி புண்ணியம் உண்டு .

    மங்களம் உண்டாகட்டும் எல்லோருக்கும் .

    நன்றி ! சுபம்! சாந்தி !

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com