9.7.15

பக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு!

பக்தி என்ற ஏணியின் முதல் படிக்கட்டு!

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே
பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன்.

அர்ஜுனனும் ஆம் என்றான்.

இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.

ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.

மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை...
என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான்,
கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன்.

என்னடா நீ! நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!
அது என்ன பறவை என தெளிவாகச் சொல்,  என்ற கண்ணனிடம்,
கண்ணா! என்பார்வையை விட உன்வார்த்தையில் எனக்கு
நம்பிக்கைஅதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று
அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட,
உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில்
அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே...
 நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற
ஏணியின், முதல் படிக்கட்டில் கூட நாம் காலை வைக்க முடியாது.

அதை உணர்ந்து கொள்ளுங்கள்
===============================================
பதிவு 2

எதெதில் என்னென்ன இருக்கிறது?

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும்
""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்
""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்
""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்
""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும்
"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க
"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""துளசி.""

16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு
""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும்
""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும்
"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""

25) முகம் அழகுபெற
""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும்
"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும்
“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..

அன்புடன்,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. பக்தியின் இலக்கணமும், ஆரோக்கியத்தின் ஆதாரங்களும் அருமை ஐயா! மிக்க நன்றி!

    ReplyDelete
  2. அத்தனையும் ஒரே நாளளில் சாப்பிடனுமா?

    ReplyDelete
  3. பக்தி பற்றிய கருத்து அருமை.... நன்றி....

    ReplyDelete
  4. ----நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட,
    உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

    பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில்
    அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே...
    நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற
    ஏணியின், முதல் படிக்கட்டில் கூட நாம் காலை வைக்க முடியாது.

    அதை உணர்ந்து கொள்ளுங்கள்----

    அடடா என்ன ஒரு அற்புதமான விளக்கம்! ”என் நெஞ்சத்தை தொட்டு விட்டீர்கள்!” என்றுதான் சொல்ல வேண்டும் குருஜி அவர்களே. வார்த்தைகள் இல்லை. தாங்கள் அனுபவம் எத்தன்மையது என்பது புரிகிறது. மிக்க நன்றி குருஜி அவர்களே..

    ReplyDelete
  5. ///Blogger kmr.krishnan said...
    பக்தியின் இலக்கணமும், ஆரோக்கியத்தின் ஆதாரங்களும் அருமை ஐயா! மிக்க நன்றி!/////

    உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////Blogger Visu Iyer said...
    அத்தனையும் ஒரே நாளில் சாப்பிடனுமா?//////

    ஆஹா...என்ன கேள்வி ? முடிந்தால் சாப்பிடுங்கள் வேப்பிலையாரே!
    அப்படியே இரண்டு அவுன்ஸ் வேப்பிலைக் கஷாயமும் சாப்பிடுவது நல்லது!

    ReplyDelete
  7. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    பக்தி பற்றிய கருத்து அருமை.... நன்றி..../////

    நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  8. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    பக்தி பற்றிய கருத்து அருமை.... நன்றி..../////

    நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  9. //////Blogger C.P. Venkat said...
    ----நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட,
    உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.
    பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில்
    அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே...
    நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற
    ஏணியின், முதல் படிக்கட்டில் கூட நாம் காலை வைக்க முடியாது.
    அதை உணர்ந்து கொள்ளுங்கள்----
    அடடா என்ன ஒரு அற்புதமான விளக்கம்! ”என் நெஞ்சத்தை தொட்டு விட்டீர்கள்!” என்றுதான் சொல்ல வேண்டும் குருஜி அவர்களே. வார்த்தைகள் இல்லை. தாங்கள் அனுபவம் எத்தன்மையது என்பது புரிகிறது. மிக்க நன்றி குருஜி அவர்களே..//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger SELVARAJ said...
    Superji////

    Thanksji!

    ReplyDelete
  11. //////Blogger C.P. Venkat said...
    ----நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட,
    உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.
    பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில்
    அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே...
    நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற
    ஏணியின், முதல் படிக்கட்டில் கூட நாம் காலை வைக்க முடியாது.
    அதை உணர்ந்து கொள்ளுங்கள்----
    அடடா என்ன ஒரு அற்புதமான விளக்கம்! ”என் நெஞ்சத்தை தொட்டு விட்டீர்கள்!” என்றுதான் சொல்ல வேண்டும் குருஜி அவர்களே. வார்த்தைகள் இல்லை. தாங்கள் அனுபவம் எத்தன்மையது என்பது புரிகிறது. மிக்க நன்றி குருஜி அவர்களே..//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com