9.6.15

உலகத்தைவிட்டுக் கிளம்பும்போது நல்லகதி வேண்டாமா?


உலகத்தைவிட்டுக் கிளம்பும்போது நல்லகதி வேண்டாமா?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை மகாநதி ஷோபனா அவர்கள் பாடிய முருகப் பெருமானின் பாடல் வரிகள் நிறைக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------
கந்தரலங்காரம் ... கண்டு மயிலாடும்
நந்தவனந்தானே ... தென்பழநித் தோட்டம்
(கந்தரலங்காரம் ... )

பன்னீர் வாசம் ... பரிமள வாசம் 
தேரோடும் வீதியிலே ... தெய்வமனம் பேசிவரும்
(கந்தரலங்காரம் ... )

ஆண்டி மலையாண்டி தண்டம் அது ஊன்றி
பழம்போல் அசைகின்றதே
வேண்டி பழம்வேண்டிப் போகும் கிளிக்கூட்டம்
அதனை மொய்க்கின்றதே

துள்ளிவந்த வேலோ ... கிளிக்கூட்டமோட்ட
தெள்ளுத்தமிழ்ப் பாடல் ... இதைப்பேசுதே
இந்த ஊனப்பழம் பழுத்து
உலகத்தக் விட்டுக்கிளம்பு முன்னே
கந்த ஞானப்பழத்த தின்னு
நல்ல கதி வாங்கிட வேணுமின்னு

முருகா முருகா என அடியார் அலைய
அதனால் தினமும் பழநி மலையும் குலுங்க
(கந்தரலங்காரம் ... )

நீறு திருநீறு ஏறும் மலை மீது
எங்கும் மணக்கின்றதே
நீரு கண்ணீரு கந்தன் அடியாரின்
கண்ணீரது துடைக்கின்றதே

தங்கரதம் ஒன்று ... தரைமீது ஓட
வைரமணி ஒன்று ... அதில் போகுதே
அந்த பாலன் முகத்தக் கண்டு
உச்சியிலே சூரியன் நாணுதம்மா

என்னப் புண்ணியம் செய்தமுன்னு
அடியவர் உள்ளம் உருகுதம்மா
குமரா குமரா என கண்கள் உருக
குன்றம் முழுதும் ஷண்முக நதியே புரள
(கந்தரலங்காரம் ... ) 

பன்னீர் வாசம் ... பரிமள வாசம்
தேரோடும் வீதியிலே ... தெய்வமனம் பேசிவரும்
(கந்தரலங்காரம் ... ) 
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3 comments:

  1. தினமும் நல்ல கதி வேண்டாமா ?

    அருணகிரிநாதர் திருப்புகழில் கூறி உள்ளார் ....

    ஒருபொழுது இருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
    உனது பழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே

    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com