26.6.15

கவிதை: பூஜியமும் ராஜியமும்

கவிதை: பூஜியமும் ராஜியமும்

என்ன தலைப்பு நெருடலாக உள்ளதா? பூஜியத்திற்கும் ராஜியத்திற்கும்
என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

கொடுத்துள்ள பாடலைப் படியுங்கள். பிடிபடும். அதாவது தெளிவாகும்.

பூஜ்யத்துக்குள்ளே ஒரு 
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்
அவனை தெரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனை தொடர்ந்து சென்றால்
அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
அந்த ஏழையின் பேர்
உலகில் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு 
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்
- இறைவனைப் பற்றிக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அசத்தலாகச் சொன்னது

திரைப் படம்: வளர்பிறை (1962)
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி
இயக்கம்: D யோகானந்த்
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
------------------------------------
என்ன பாடல் நன்றாக உள்ளதா?
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம் தேடி

    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர்
    ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

    உன்னையே நினைத்திருப்பான்
    உண்மையைத் தான் உரைப்பான்

    ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே அவன்
    ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே

    நஞ்சினை நெஞ்சில் வைத்து
    நாவினில் அன்பு வைத்து

    நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே அவன்
    நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே

    தொண்டுக் கென்றே அலைவான்
    கேலிக்கு ஆளாவான்

    கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே அவன்
    கடவுளiன் பாதியடி ஞானத் தங்கமே

    பிள்ளையைக் கில்லி விட்டு
    தொட்டிலை ஆட்டிவிட்டு

    தள்ளi நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே அவன்தான்
    தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே

    ReplyDelete
  2. ஆஹா!!! அற்புதம்.... வாத்தியாரும் வேப்பிலையாரும் கலக்குறீர்கள்....

    வாசிக்கும் உலகுக்கும்,
    படிக்கும் உள்ளத்துக்கும்
    அமைதியும் அறிவும் தருவார் ஞான தங்கமே!!!

    அவர்தான் எங்கள் வாத்தியாரடி ஞான தங்கமே!!!

    ReplyDelete
  3. /////Blogger வேப்பிலை said...
    இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர்
    ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே
    உன்னையே நினைத்திருப்பான்
    உண்மையைத் தான் உரைப்பான்
    ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே அவன்
    ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
    நஞ்சினை நெஞ்சில் வைத்து
    நாவினில் அன்பு வைத்து
    நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே அவன்
    நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
    தொண்டுக் கென்றே அலைவான்
    கேலிக்கு ஆளாவான்
    கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே அவன்
    கடவுளiன் பாதியடி ஞானத் தங்கமே
    பிள்ளையைக் கில்லி விட்டு
    தொட்டிலை ஆட்டிவிட்டு
    தள்ளi நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே அவன்தான்
    தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே////

    கில்லி அல்ல கிள்ளி என்று இருக்க வேண்டும். இறைவனைப் பற்றிய நல்ல பாடல்.
    நினைவு படுத்தியமைக்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  4. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    ஆஹா!!! அற்புதம்.... வாத்தியாரும் வேப்பிலையாரும் கலக்குறீர்கள்....
    வாசிக்கும் உலகுக்கும்,
    படிக்கும் உள்ளத்துக்கும்
    அமைதியும் அறிவும் தருவார் ஞான தங்கமே!!!
    அவர்தான் எங்கள் வாத்தியாரடி ஞான தங்கமே!!! /////

    வேப்பிலையார் கலக்குவார். சமயத்தில் வேப்பிலை அடித்துப் படுக்கவும் வைப்பார்.
    பாராட்டிற்கு எங்கள் இருவர் சார்பாகவும் நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  5. // Subbiah Veerappan said...கில்லி அல்ல கிள்ளி என்று இருக்க வேண்டும். ///

    சரி தான்...
    சரி செய்தமைக்கு நன்றிகள்

    I will kill u (அந்த பதிவு) என நம்
    லால்குடியார் லண்டன் பெயரன் சொன்ன தகவல்

    நினைவுக்கு வந்தது அது குழந்தை தானமாக இருக்கட்டுமே என
    நிறுத்திய பின் திருத்தாமல் விட்டு விட்டுவிட்டேன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com