16.6.15

அந்த நாயகன் எப்போது கூட வந்தான்?

அந்த நாயகன் எப்போது கூட வந்தான்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை திருமதி பி.சுசீலா அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
====================================
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விதம் இவர் தந்த இன்ப நிலை கண்டு எவ்விதம் நான் கண்டேன் மாறுதலை

ஓஹோஹோஹோ...ஹோஹோஹோ. ஓஹோஹோஹோ
ஓஹோஹோஹோ...ஹோஹோஹோ. ஓஹோஹோஹோ

சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

பாடல்: சரவணப் பொய்கையில் நீராடி
திரைப்படம்: இது சத்தியம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1963
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. சரணம் சரணம் சரவண பவவோம்
    சரணம் சரணம் ஷண்முகா சரணம்

    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:

    ReplyDelete
  2. அஞ்சுதல்,ஆறுதல் என்பதை அழகாகக் கையாண்ட கவிஞர் வாழ்க!

    ReplyDelete
  3. முருகா முருகா...

    ReplyDelete
  4. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    சரணம் சரணம் சரவண பவவோம்
    சரணம் சரணம் ஷண்முகா சரணம்
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம://////

    கந்தா போற்றி
    கடம்பா போற்றி
    கதிர்வேலா போற்றி!

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    அஞ்சுதல்,ஆறுதல் என்பதை அழகாகக் கையாண்ட கவிஞர் வாழ்க!/////

    ஆமாம் சொல்லாட்சி மிக்க கவிஞர் அவர்.

    ReplyDelete
  6. /////Blogger SELVARAJ said...
    முருகா முருகா.../////

    வருவாய் குகனே
    அருள்வாய் குகனே!

    ReplyDelete
  7. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    அப்பா போற்றி
    ஆறுமுகா போற்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com