27.3.15

அன்பர்களுக்கு வேண்டிய நிலைப்பொருள் எது?


அன்பர்களுக்கு வேண்டிய நிலைப்பொருள் எது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல் ஒன்று நிறைக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------
தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான
......... பாடல் .........

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........
உம்பர் தரு ... விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம்
தேனுமணி ... காமதேனு, சிந்தாமணி
கசிவாகி ... (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து
ஒண்கடலிற் தேனமுது ... ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய
அமுதம்போன்ற உணர்வூறி ... உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும் ... இன்பச் சாற்றினை நான்
உண்ணும்படி பலமுறை
எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே ... என்னுயிரின் மீது
ஆதரவு வைத்து அருள்வாயாக
தம்பிதனக்காக ... தம்பியின் (முருகனின்) பொருட்டாக
வனத்(து) அணைவோனே ... தினைப்புனத்திற்கு வந்தடைவோனே
தந்தை வலத்தால் ... தந்தை சிவனை வலம் செய்ததால்
அருள்கைக் கனியோனே ... கையிலே அருளப்பெற்ற பழத்தை
உடையவனே
அன்பர்தமக் கான ... அன்பர்களுக்கு வேண்டிய
நிலைப் பொருளோனே ... நிலைத்து நிற்கும் பொருளாக
விளங்குபவனே
ஐந்து கரத்து ... ஐந்து கரங்களையும்
ஆனைமுகப் பெருமாளே. ... யானைமுகத்தையும் உடைய
பெருமானே.
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

  1. அருமையான திருப்புகழ் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    கேது தசாவில் அதிகமான ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டது. அப்போது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் அமிழ்தத்தை அதிகம் வாசித்து மகிழ்ந்தேன். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.

    ReplyDelete
  2. திருப்புகலை பாட வைத்த ஆசிரியருக்கு நன்றீ

    ReplyDelete
  3. Vinayaga Perumanin Thiruvadigal potri

    ReplyDelete
  4. ///kmr.krishnan said...
    கேது தசாவில் அதிகமான ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டது. திருப்புகழ் அமிழ்தத்தை அதிகம் வாசித்து மகிழ்ந்தேன்.///

    ஆக.. பிரச்சனை வந்தால் தான்
    ஆன்மிக ஈடுபாடு..

    இது சரியா?
    இப்படி சொல்லலாமா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com