20.3.15

வல்லக் குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்றவன் அவன்!


வல்லக் குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்றவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய’,  'உள்ளமெனும் கோயிலிலே' என்னும் பாடல் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------
முருகா ... முருகா ... முருகா ...

உள்ளமெனும் கோயிலிலே, உறைகின்றாய் குமரா
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளியம்மைக் கணவா, வடிவேலா முருகா 
(உள்ளமெனும் கோயிலிலே)

தெள்ளமுதே தேனே ...
தெள்ளமுதே தேனே, திகட்டாத தீந்தமிழே 
சொல்லற்கரிய இன்பச் சுவையே 
சுப்ரமண்யனே
(உள்ளமெனும் கோயிலிலே)

வல்லக் குறிஞ்சி நிலம், வாழ்பவனே கந்தா
வளர் இமையோன் தந்த உமையவள் மைந்தா
அல்லும் பகலும் உன்னை எண்ணிடும் வரந்தா 
அடியனுக்கு உனது ஞானப் பதந்தா 

அடியார் தொழும் படியாய் ... இளம் வடிவத்தோடெழுந்து
வடியாக் கடலலைவாய் ... தனில் துடியாய் நிற்பவனே
அமைவாய் மிகு கனிவாய் ... முதிர் பழமாய் பழநியிலே
அருளாய் பெரும் பொருளாய் ... மன இருள் நீக்கிடும் முருகா
அறுமுகனே ... குருபரனே ... சரவணனே ... சண்முகனே
அனுதினமும் ... உனைதொழ ஓர் .... ஆலயமும் ... வேண்டிலனே
அகத்தினிலே மிகத்தெளிவாய் ... அமர்ந்துறையும் அன்பரசே
இகத்தினிலே இன்பமெல்லாம் ... என்னுயிரே நீயன்றோ

என்னுயிரே நீயன்றோ ...
என்னுயிரே நீயன்றோ ... .
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. சொல்லற்கரிய இன்ப சுவையே சுப்ரமண்யனே
    என்ணுயிரே நீயன்றோ...

    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:

    ReplyDelete
  2. நமது வகுப்பறை அன்பர் திரு.ஆனந்த் அவர்களை சிறுது நாட்களாக பார்க்க முடியவில்லையே? அவருக்கு என்ன ஆயிற்று?

    ReplyDelete
  3. நல்ல பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  4. என்னுயிறே முருகா,

    ReplyDelete
  5. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    சொல்லற்கரிய இன்ப சுவையே சுப்ரமண்யனே
    என்ணுயிரே நீயன்றோ...
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம://///

    ஓம் முருகா போற்றி
    ஓம் முத்தமிழே போற்றி
    ஓம் மூலப்பொருளே போற்றி!

    ReplyDelete
  6. /////Blogger C.Senthil said...
    நமது வகுப்பறை அன்பர் திரு.ஆனந்த் அவர்களை சிறிது நாட்களாக பார்க்க முடியவில்லையே? அவருக்கு என்ன ஆயிற்று?/////

    அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. நன்றாகத்தான் இருக்கிறாய். உங்கள் பார்வையில்தான் கோளாறு! அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். மேலும் புதிர்ப் பதிவுகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். அதை எல்லாம் நீங்கள் ஏன் கவனிக்கவில்லை?

    ReplyDelete
  7. /////Blogger kmr.krishnan said...
    நல்ல பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. //////Blogger gayathri devi said...
    என்னுயிரே முருகா,//////

    ஆமாம்......உங்களுக்கு மட்டுமா? அனைவருக்கும் அவன்தான் உயிர்!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    முருகா....
    முருகா....//////

    உருவாய்....
    அருவாய்....
    வருவாய்.....
    அருள்வாய்....
    குகனே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com