11.12.14

கவியரசரும், காண வந்த வெள்ளி நிலவும்!


கவியரசரும், காண வந்த வெள்ளி நிலவும்!

கவியரசர் கண்ணதாசன் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.
நிலவைக் கன்னிப் பெண்ணாக்கி, கதாநாயகியின் முன் கொண்டு
வந்து நிறுத்தி விடுகிறார். நிலவைப் பார்த்து நாயகி கேட்கும்
கேள்விகள் அற்புதமாக ஒரு பாடலாய் அமைந்து விட்டது.
பாடல் வரிகளைப் பாருங்கள். பிறகு பாடலின்
காணொளியையும் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
"காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே"

காதலனுடன் இருக்கும் நாயகி, காண வந்த காட்சியென்ன என்று
நிலவைப் பார்த்துக் கேட்டதோடு, "கண்டுவிட்ட கோலம் என்ன என்று தொடர்ந்து கேட்கிறாள். அத்துடன் விட்டாளா? என்ன வேகமாய்
ஓடிவந்தாயடி நீ - அவ்வாறு வந்தவள்  ஓரிடத்தில் ஏன் திகைத்து
நின்று விட்டாய்?" என்றும் கேட்கிறாள்.

"நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ"

என்ன நினைத்தாய்? என்ன சொல்ல வந்தாய்? காதல் எங்களுக்கு உரியது என்று உனக்குத் தெரியாதா? கன்னிப் பெண்ணான உனக்கு நாணம் இல்லையா? வாசல் நிலையை மறந்து விட்டு, மேகத்திலே மறைந்து கொள்ளடி" என்றும் கண்டித்தும் சொல்கிறாள்

காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா
உன் வாசல் நிலையும் மறந்து விடு வெள்ளி நிலாவே
அந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளி நிலாவே

இது போன்று எதை வேண்டுமென்றாலும் உருவகப் படுத்திப் பாட்டு
எழுத அவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது!

கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா" என்ற வரிதான்
பாடலின் முத்தாய்ப்பான வரியாகும்
=======================================================
படம்: பாக்கியலெட்சுமி (1961ம் ஆண்டு)
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
========================================================
பாடலின் காணொளிக் காட்சி:


Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. நிலவை பாடாத கவிஞன் இல்லை
    நிலாவை பாடாதவன் கவிஞனுமில்லே

    அது சரி இன்னிக்கு என்ன
    அந்த நிலாவை தானே கையில் பிடிச்சு

    ....????

    ReplyDelete
  2. அதில் நடிக்கும் நடிகை இ வி சரோஜாதானே?

    நல்ல இனிய பாடல்.

    ReplyDelete
  3. ஆசானுக்கு வணக்கம்.

    ReplyDelete
  4. /////Blogger வேப்பிலை said...
    நிலவை பாடாத கவிஞன் இல்லை
    நிலாவை பாடாதவன் கவிஞனுமில்லே
    அது சரி இன்னிக்கு என்ன
    அந்த நிலாவை தானே கையில் பிடிச்சு
    ....????////

    கையில் பிடிப்பதற்குக் காரணம் சொல்ல முடியுமா? உங்களுக்கே தெரிய வேண்டாமா? அதுதான்! நன்றி!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    அதில் நடிக்கும் நடிகை இ வி சரோஜாதானே?
    நல்ல இனிய பாடல்.////

    ஆமாம் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ////Blogger Maaya kanna said...
    ஆசானுக்கு வணக்கம்./////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  7. ////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
    அருமையான பாடல்
    நன்றி ஐயா////

    உங்களின் ரசனை உணர்விற்குப் பாராட்டுக்கள்! நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com