25.11.14

மனதைத் தட்டும் மருத்துவக் கவிதை!


மனதைத் தட்டும் மருத்துவக் கவிதை...

 மருத்துவமுறையை மாற்றுங்கள்...டாக்டர்...

வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி வாய்திறப்போம்!

நாக்கைநீட்டு என்பீர்கள்!
கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்!

முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்!
அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்!

அவ்வளவுதான்!
அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்!

வாசிக்கமுடியாத கையெழுத்தில்
வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்!

மூன்றுவேளை... என்னும் தேசியகீதத்தை
இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள்!

போதாது டாக்டர்!
எங்கள்தேவை இதில்லை டாக்டர்!

நோயாளி, பாமரன்! சொல்லிக்கொடுங்கள்!
நோயாளி, மாணவன்! கற்றுக்கொடுங்கள்!

வாய்வழி சுவாசிக்காதே!
காற்றை வடிகட்டும் ஏற்பாடு
வாயிலில்லையென்று சொல்லுங்கள்!


சுவாசிக்கவும்
எத்துணை பாமரர் இஃதறிவார்?
சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின் தரைதொடவேண்டும்!
தரையெங்கேதொடுகிறது?
தலைதானேதொடுகிறது!
சொல்லிக்கொடுங்கள்!

சாராயம் என்னும் திரவத்தீயைத்தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!
கல்லீரல் என்பது கழுதை!
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது!
பயமுறுத்துங்கள்!

ஒருகால்வீக்கம்?
உடனேகவனி!
யானைக்காலின் அறிகுறி!
இருகால்வீக்கம்?
இப்போதேகவனி!
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்!

வாயிலென்ன ஆறாதப்புண்ணா?
மார்பகப்பரப்பில் கரையாதக்கட்டியா?

ஐம்பதுதொட்டதும் பசியேயில்லையா?
சோதிக்கச்சொல்லுங்கள்!

அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னாவெழுதியிருக்கலாம்!

நோயாளியை துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்!

நோயொன்றும் துக்கமல்ல!
அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது!

சர்க்கரையென்பது வியாதியல்ல!
குறைபாடென்று கூறுங்கள்!

செரிக்காதவுணவும்
எரிக்காதசக்தியும்
சுடுகாட்டுத்தேரின்
சக்கரங்களென்று
சொல்லுங்கள் டாக்டர்!

ஊமை ஜனங்களிவர்
உள்ளொளியற்றவர்!
பிணிவந்து இறப்பினும்
முனிவந்து இறந்ததாய் முணங்குவர்!


சொல்லிக்கொடுங்கள்!
யோகம் என்பது வியாதி தீர்க்கும்
வித்தையென்று சொல்லுங்கள்!

உயிர்த்தீயை உருட்டியுருட்டி
நெற்றிப்பொட்டில் நிறுத்தச்சொல்லுங்கள்!

உணவுமுறை திருத்துங்கள்!
தட்டில்மிச்சம் வைக்காதே!
வயிற்றில்மிச்சம்வை!

பசியோடு உட்கார்!
பசியோடு எழுந்திரு!
சொல்லுங்கள் டாக்டர்!

அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்!
பச்சையுணவுக்கு
பாடம் நடத்துங்கள்!

மருந்தையுணவாக்காதே!
உணவை மருந்தாக்கு!

மாத்திரைச்சிறைவிட்டு
மனிதனே வெளியேவா!

கோணாத ஒருவன்
கூனனானான்! ஏனாம்?
அவன் டப்பாவுணவுகளையே
உட்கொண்டதுதானாம்!

ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை! ஏனாம்?
அவன் உப்பில்லாவுணவுகளையே
உட்கொண்டதுதானாம்!

ஆரோக்கிய மனிதனுக்குத்தேவை
அரைகிராம் உப்புதானே!

மனிதா...
உப்பைக் கொட்டிக்கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே!

செடிகொடியா நீ?
சிந்திக்கச்சொல்லுங்கள்!

உண்மை இதுதான்!

மனிதனைத்தேடி மரணம்வருவதில்லை!
மரணத்தைத்தேடியே மனிதன் போகிறான்!

டாக்டர்...
எல்லாமனிதரையும்
இருகேள்விகேளுங்கள்!
"பொழுது மலச்சிக்கலில்லாமல் விடிகிறதா?
மனச்சிக்கலில்லாமல் முடிகிறதா?"
-கவிஞர் வைரமுத்து

#இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல
இணையத்தில் படித்தது.
நன்றாக இருந்ததால் நீங்கள் அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. சார் டெஸ்டு இல்லையா ஒரு ஜாதகத்தை கொடுத்து இதிலிருக்கிறா யோகத்தை சொல்லுங்க என்று கேளுங்க்ள் நம்ப வகுப்பறை கண்மணிகள்நிறைய சொல்லுவங்க நான் அது எல்லாத்தையும் படிச்சிகொள்ளுவேன் சார்

    ReplyDelete
  2. மருத்துவர் சொல்லியே கேட்கவில்லை
    மதிப்பு மிகு கவிஞர் சொல்லியா...?

    கவிதைக்கு பொய்யழகு என்றதால்
    காற்றில் இதை பறக்க விடுவார்கள்

    கவிஞர் தானே இவர் எப்படி
    கருத்து சொல்லும் மருத்துவரானார்

    பகுத்தறிவு இயக்கத்தில் இருந்தாலும்
    பாமரனுக்கு சொல்வது போல்

    ஆன்மிகத்தின்
    அடிப்படைகளை தொட்டு காட்டி

    தண்ணி போடாத கவிதை இது
    தன்னை உயர்த்த எண்ணி உள்ளார்

    ReplyDelete
  3. அருமையான கவிதை. முன்பும் 'சொல்லுங்கள் டாகடர்' என்று இதுபோல ஒன்று எழுதினார்.

    நம் பாரம்பரிய நாட்டு மருத்துவத்திலேயே பல நல்ல மூலிகைகள் எளிமையாகவும் விரைவாகவும் செயல்பட்டு சொஸ்தம் அளிக்கின்றன.சமீபத்தில் எனக்கு அப்படி ஒரு நிவாரணம் கிடைத்தது.ஐயாவும் சக மாணவர்களூம் விரும்பினால் கட்டுரையாகத் தருகிறேன்.

    ReplyDelete
  4. நல்ல கேள்விகள் வாத்தியாரே!!!

    உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல டாக்டர்கள் இங்கு உண்டோ!!!

    ReplyDelete
  5. வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.

    சைவ உணவு வகைகளுக்கு மாறிபாருங்கள் அப்பொழுது தங்களுக்கு வந்து இருக்கின்ற நோய்கள் தானாகவே தங்களை விட்டு விலகுவது புரியும்.

    இப்படிக்கு சைவ உணவு விரும்பிகள் சங்கம் வாத்தியாரின் வகுப்பறை .

    தோற்றம் 26 / 11 / 2014 18:56 PM

    ReplyDelete
  6. ////Blogger sundari said...
    சார் டெஸ்டு இல்லையா ஒரு ஜாதகத்தை கொடுத்து இதிலிருக்கிறா யோகத்தை சொல்லுங்க என்று கேளுங்கள் நம்ப வகுப்பறை கண்மணிகள்நிறைய சொல்லுவங்க நான் அது எல்லாத்தையும் படிச்சிகொள்ளுவேன் சார்/////

    பார்க்கலாம். 300ற்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. அதைக் கண்டு பிடிக்க வேறு வழிகள் உள்ளன. பொறுத்திருங்கள். ஒரு நாள் அதை ஒரு பாடமாகத் தருகிறேன் சகோதரி!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    மருத்துவர் சொல்லியே கேட்கவில்லை
    மதிப்பு மிகு கவிஞர் சொல்லியா...?
    கவிதைக்கு பொய்யழகு என்றதால்
    காற்றில் இதை பறக்க விடுவார்கள்
    கவிஞர் தானே இவர் எப்படி
    கருத்து சொல்லும் மருத்துவரானார்
    பகுத்தறிவு இயக்கத்தில் இருந்தாலும்
    பாமரனுக்கு சொல்வது போல்
    ஆன்மிகத்தின்
    அடிப்படைகளை தொட்டு காட்டி
    தண்ணி போடாத கவிதை இது
    தன்னை உயர்த்த எண்ணி உள்ளார்////

    தன்னை உயர்த்த வேண்டிய நிலையில் அவர் இல்லை. அதைத் தெரிந்து கொள்ளுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...
    அருமையான கவிதை. முன்பும் 'சொல்லுங்கள் டாகடர்' என்று இதுபோல ஒன்று எழுதினார்.
    நம் பாரம்பரிய நாட்டு மருத்துவத்திலேயே பல நல்ல மூலிகைகள் எளிமையாகவும் விரைவாகவும் செயல்பட்டு சொஸ்தம் அளிக்கின்றன.சமீபத்தில் எனக்கு அப்படி ஒரு நிவாரணம் கிடைத்தது.ஐயாவும் சக மாணவர்களூம் விரும்பினால் கட்டுரையாகத் தருகிறேன்./////

    சரி சுருக்கமாகத் தாருங்கள். பதிவின் மேல் பகுதியில் உள்ள Display cardல் அதைப் பதிவிடுகிறேன். நன்றி!

    ReplyDelete
  10. Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    நல்ல கேள்விகள் வாத்தியாரே!!!
    உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல டாக்டர்கள் இங்கு உண்டோ!!!

    நமக்குப் பதில் வேண்டும் என்றால் நமது மருத்துவரை அணுகி நாம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்!


    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. /////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.
    சைவ உணவு வகைகளுக்கு மாறிப்பாருங்கள் அப்பொழுது தங்களுக்கு வந்து இருக்கின்ற நோய்கள் தானாகவே தங்களை விட்டு விலகுவது புரியும்.
    இப்படிக்கு சைவ உணவு விரும்பிகள் சங்கம் வாத்தியாரின் வகுப்பறை ./////

    ஒட்டகத்தை சாப்பிடும் ஊரில் இருந்து கொண்டு நீங்கள் பேசுகிற பேச்சா இது கண்ணா!
    நான் சைவம். அத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்!

    ReplyDelete
  13. தன்னை உயர்த்திக்கொள்ள என சொன்னது
    தன் கவித்திறனை சொன்னதல்ல

    தன்னையும் ஒரு ஆன்மிக வாதியாக காட்ட
    “தண்ணி” போடாத கவிதை என்றது

    வைரமுத்து ரசிகர்கள் இதனை புரிந்து கொள்ள
    வைக்கின்றேன் இதை அவர்கள் சிந்தனைக்கு

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com