24.10.14

எனக்கும் இடம் உண்டு

எனக்கும் இடம் உண்டு

பக்திப் பாடல்

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் பாடிய
முருகப் பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------
பாடலின் தலைப்பு: எனக்கும் இடம் உண்டு

எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்கு பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் 

தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்
(எனக்கும் ... )

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் 

வரும் காற்றில் அணையா சுடர்போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்
(எனக்கும் ... )

ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் 

நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்
(எனக்கும் ... ).

பாடியவர் - பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் 
===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. நல்ல பாடல் ஐயா!பகிர்ந்தமைக்கு நன்றி. பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை.

    புல்லாக இறைவனின் காலடிபடும் இடத்தில் பிறப்பது ஒரு லட்சியக் கனவாகவே அடியார்களுக்கு இருந்திருக்கிறது.அதைப்போலவே தன்னை நாயினும் கடையனாகப் பாவிப்பதும், தன்னைப் பாவி என்று கூறுதலும் சற்று மிகையாகவே உள்ளது.

    எனக்கென்னமோ மீண்டும் பிறவி வந்தாலும் மனிதனாகவே பிறந்திட வேண்டும் என்று தோன்றுகிறது.அப்போதுதான் இது போன்ற இனிமையான கவிதை நயத்துடன் கூடிய பாடல்களை ரசிக்கவும் முடியும்; இறைச் சிந்தனையுடன் இருக்கவும் முடியும்.

    ஆனால் இப்பிறவியில் நாம் செய்த செயல்களே அடுத்த பிற‌வியை நிர்ணயிக்கின்றனவாம். இப்பிறவியில் சொகுசாக குறைந்த வேலை நிறைந்த சம்பளம் வாங்கி பெஞ்சு தேய்த்தவர்களுக்கெல்லாம் பொதி சுமக்கும் கழுதையாக அடுத்த பிறவி வருமாம். அப்போது 'காள் காள்' என்ற கழுதையின் கர்ண கொடூரம்தான் காதில் விழுமே தவிர, இனிமையான பாடலா விழும்?

    ReplyDelete
  2. முருகா! முருகா!

    உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா
    உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
    பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
    உன்னையும் மறப்பதுண்டோ?

    ReplyDelete
  3. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    வடிவேலா
    வருவாய்
    அருள் தருவாய்!

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    நல்ல பாடல் ஐயா!பகிர்ந்தமைக்கு நன்றி. பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை.
    புல்லாக இறைவனின் காலடிபடும் இடத்தில் பிறப்பது ஒரு லட்சியக் கனவாகவே அடியார்களுக்கு இருந்திருக்கிறது.அதைப்போலவே தன்னை நாயினும் கடையனாகப் பாவிப்பதும், தன்னைப் பாவி என்று கூறுதலும் சற்று மிகையாகவே உள்ளது.
    எனக்கென்னமோ மீண்டும் பிறவி வந்தாலும் மனிதனாகவே பிறந்திட வேண்டும் என்று தோன்றுகிறது.அப்போதுதான் இது போன்ற இனிமையான கவிதை நயத்துடன் கூடிய பாடல்களை ரசிக்கவும் முடியும்; இறைச் சிந்தனையுடன் இருக்கவும் முடியும்.
    ஆனால் இப்பிறவியில் நாம் செய்த செயல்களே அடுத்த பிற‌வியை நிர்ணயிக்கின்றனவாம். இப்பிறவியில் சொகுசாக குறைந்த வேலை நிறைந்த சம்பளம் வாங்கி பெஞ்சு தேய்த்தவர்களுக்கெல்லாம் பொதி சுமக்கும் கழுதையாக அடுத்த பிறவி வருமாம். அப்போது 'காள் காள்' என்ற கழுதையின் கர்ண கொடூரம்தான் காதில் விழுமே தவிர, இனிமையான பாடலா விழும்?////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. ////Blogger venkatesh r said...
    முருகா! முருகா!
    உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ? முருகா
    உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால் உள்ளத்தில் அமைதி உண்டோ?
    பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ மறந்தால் மலரும் மணமும் உண்டோ? முருகா நான்
    உன்னையும் மறப்பதுண்டோ?////

    நல்ல வரிகள் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. OM = MURUGA
    OM = AVAILABLE IN EVERYWHERE
    EVEN IN ATOM , OM AVAILABLE.

    OM SARAVANA BHAVA.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com