5.9.14

எப்போதெல்லாம் திருநாள்?


எப்போதெல்லாம் திருநாள்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம்' சகோதரிகள்  பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------
முருகனுக் கொருநாள் திருநாள் - அந்த 
முதல்வனின் வைபவப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

கடம்பனுக் கொருநாள் திருநாள் - நல்ல 
கார்த்திகைப் பெருநாள் ஓருநாள் 
(முருகனுக் கொருநாள் ... )

வைகாசி விசாகத் திருநாள் - அந்த 
வண்ணக் கதிர்வேலன் பெருநாள் 
வடிவேல் குமரனின் திருநாள் 
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்

கந்த சஷ்டிக்கொருத் திருநாள் 
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

சரவணன் பிறந்தத் திருநாள் - அருள் 
சந்தனம் வழங்கிடும் பெருநாள் 
செந்தூர் வாசலில் ஒருநாள் 
கந்தன் காவடி ஆடிடும் பெருநாள்

வள்ளிக் குமரனின் மண நாள் - நம் 
வாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்
(முருகனுக் கொருநாள்.....)

பாடியவர்கள்: 'சூலமங்கலம்' சகோதரிகள் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================

22 comments:

  1. சூலமங்லம் சகோதரிகளின் பாடல் அருமை. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:

    ReplyDelete
  3. நல்லதொரு பாடலுடன் இனியபதிவு..

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete

  4. இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  5. SIR IN CLASSROOM2007 WEBSITE WHY ARE U NOT BLOGGED??HOW CAN I JOIN GALAXY2007 WEBSITE BLOG

    ReplyDelete
  6. நல்லதொரு இனிமையான பாடல். இந்தப் பாடலை சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் எததனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். சலிக்காது.

    ReplyDelete
  7. Sir,

    Happy teacher day for u sir.

    You are my Good vathiyaar. Always i am drinking 337 tonic

    ReplyDelete
  8. வணக்கம் சார்...
    சூலமங்கலம் சகோதரிகள்!!!
    நாவில் சரஸ்வதி அனுக்ரகம் !
    தெய்வீககுரல்.......
    K.சக்திவேல்

    ReplyDelete
  9. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  10. //////Blogger kmr.krishnan said...
    சூலமங்லம் சகோதரிகளின் பாடல் அருமை. பகிர்வுக்கு நன்றி ஐயா!//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம://///

    மன அமைதிக்கு உரிய மந்திரம் இது. தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் 3 முறை சொல்லுங்கள். எல்லா நலன்களும் கிடைக்கப் பெறுவீர்கள். நன்றி!

    ReplyDelete
  12. ///Blogger sundari said...
    good morning sir//////

    உங்களின் காலை வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. //////Blogger துரை செல்வராஜூ said...
    நல்லதொரு பாடலுடன் இனியபதிவு..
    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. //////Blogger இராஜராஜேஸ்வரி said...
    இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. /////Blogger nirmala Gopal said...
    SIR IN CLASSROOM2007 WEBSITE WHY ARE U NOT BLOGGED??HOW CAN I JOIN GALAXY2007 WEBSITE BLOG/////

    Please write to my mail ID: classroom2007@gmail.com

    ReplyDelete
  16. //////Blogger Kirupanandan A said...
    நல்லதொரு இனிமையான பாடல். இந்தப் பாடலை சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் எததனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். சலிக்காது./////

    உண்மைதான். அது இறையருளால் கிடைத்ததாகும்! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  17. //////Blogger sundari said...
    Sir,
    Happy teacher day for u sir.
    You are my Good vathiyaar. Always i am drinking 337 tonic////

    அப்படியா? செலவே இல்லாத அருமையான டானிக் அது. வேண்டிய மட்டும் அருந்துங்கள். மன நலத்திற்கு அதுதான் சிறந்த டானிக்!

    ReplyDelete
  18. /////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்...
    சூலமங்கலம் சகோதரிகள்!!!
    நாவில் சரஸ்வதி அனுக்ரகம் !
    தெய்வீககுரல்.......
    K.சக்திவேல்/////

    உண்மைதான். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    உருவாய்
    அருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  20. //////Blogger lrk said...
    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா /////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com