1.8.14

Devotional: திருக்கைவேல் போற்றி! போற்றி!

 
Devotional:  திருக்கைவேல் போற்றி! போற்றி!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை கச்சியப்ப சிவாச்சாரியின் பழம் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------------------------
மூவிரு முகங்கள் போற்றி!
    முகம்பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
    ஈராறுதோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள்
    மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
    திருக்கைவேல் போற்றி! போற்றி!

           - கச்சியப்ப சிவாச்சாரியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7 comments:

  1. இந்த முறை பாடல் மிகவும் சுருக்கமாக அமைந்து விட்டது. அந்த காலத்திய பாடலாக இருந்தாலும் சுலபமாக விளங்கிக் கொள்ளும்படியாக இருக்கிறது. அது என்ன மாவடி என்று யோசித்தேன். அதற்கும் விடை கிடைத்தது.

    "காஞ்சி மாவடி’ என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலின் இன்னொரு பெயர், இந்தக் கோயிலில் உள்ள விநாயகர், முருகரைப் பாடிதான் கந்த புராணத்தைத் தொடங்குகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்" என்று தகவல் கிடைத்தது.

    ஏவரும் என்பது யாவரும் என்றுதான் அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. இப்பாடலில் ஏவரும் என்பதற்குப் பொருள் என்னவாக இருக்கும் ஐயா?

    நல்ல துதிப்பாடல். நன்றிஐயா!

    ReplyDelete
  3. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா.../////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  4. ////Blogger Kirupanandan A said...
    இந்த முறை பாடல் மிகவும் சுருக்கமாக அமைந்து விட்டது. அந்த காலத்திய பாடலாக இருந்தாலும் சுலபமாக விளங்கிக் கொள்ளும்படியாக இருக்கிறது. அது என்ன மாவடி என்று யோசித்தேன். அதற்கும் விடை கிடைத்தது.
    "காஞ்சி மாவடி’ என்பது காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலின் இன்னொரு பெயர், இந்தக் கோயிலில் உள்ள விநாயகர், முருகரைப் பாடிதான் கந்த புராணத்தைத் தொடங்குகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்" என்று தகவல் கிடைத்தது.
    ஏவரும் என்பது யாவரும் என்றுதான் அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது./////

    இணையத்தை நீங்கள்தான் முறையாகப் பயன் படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    இப்பாடலில் ஏவரும் என்பதற்குப் பொருள் என்னவாக இருக்கும் ஐயா?
    நல்ல துதிப்பாடல். நன்றிஐயா!/////

    நம் மலேசிய ஆனந்த் அவர்கள் எழுதியுள்ளார் பாருங்கள். அதுதான் பொருள்!
    ஏவரும் = யாவரும்!

    ReplyDelete
  6. /////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com