11.7.14

சீர் அகம் தா செந்தூர் வடிவேலா!

 

சீர் அகம் தா செந்தூர் வடிவேலா!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சின்னக்குயில் சித்ரா அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்றின் பாடல் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------
சீரகம்தா செந்தூர் வடிவேலா

ஆறகத்திலே உறையும் உமைபாலா
  யாரகத்தில் நான் உரைப்பேன் கரம் தொழுது
    ஏழைக்கென்று முருகா மனம் இளகு
(சீரகம்தா செந்தூர் வடிவேலா ... வடிவேலா)

கடல் ஆடிடும் கண்ணின் கரை ஓரம்
மனம் அலைபாயுதே கந்தன் அருள் தேடியே
  பழம் வேண்டியே குன்றில் சினந்து நின்றாய்
    அந்தக் கனல் தீர்ந்ததோ
      செந்தூர்க் கரை ஆள்கிறாய்

திருவிழி காலம் யாவும்
  வளமும் ... நலம் தரும் ... அதிமதுர
(சீரகம்தா ... )

கொடிச்சேவலே அந்தச் சூரபத்மன்
  உந்தன் மயில் வாகனம் என்னும் வடிவானதோ
    விழிச் சூரியன் கொண்ட முகம் ஆறு
      பகை துயர் தீர்க்குமே உந்தன் திருநீறு

துணை வரும் வேலும் மயிலும்
  அருளும் ... அநுதினம் ... ரசமிகு
சீரகம்தா செந்தூர் வடிவேலா

ஆறகத்திலே உறையும் உமைபாலா
  யாரகத்தில் நான் உரைப்பேன் கரம்தொழுது
    ஏழைக்கென்று முருகா மனம் இளகு
(சீரகம்தா ... ).


பாடியவர்: 'பத்மஸ்ரீ' K.S. சித்ரா - 'சீரகம்தா'
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. சிறந்த இசைப்பாடல் பகிர்வு

    ReplyDelete
  2. வெற்றி வடிவேலனே! சக்தி உமை பாலனே!
    வீரம் விளைத்த குகனே!
    உற்றதொரு பகை வெல்ல தோளிலும் நெஞ்சிலும்
    ஓங்கிடும் வலிமை அருள்வாய்! அருள்வாய்!

    மனம் கனிந்தருள் வேல் முருகா! புள்ளி
    மயிலேறும் மால் மருகா! முருகா!
    (மனம்)

    குறத்தி மணாளா! குணசீலா! ஞான
    குருபரனே! செந்தில் வடிவேலா!
    செந்தமிழ்த் தேவா! சந்ததம் நீ காவாய்!

    வேதனே - ஞான போதனே - சுவாமி நாதனே - எமது வேதனை தீர
    (மனம்)

    தோகை வள்ளி தனை - நாடி வேங்கை மர - மாகி நின்றாயடா!
    வேலெடுத்து விளை - யாடி மாமலையைத் - தூளடித்த முருகா!
    சூரபத்மன் இரு - கூறு பட்டொழிய - போர் முடித்த குமரா!

    படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
    இசை: ஜி. ராமனாதன் (எ) ஜிரா
    குரல்: எஸ். வரலட்சுமி
    வரி: கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம்

    ReplyDelete
  3. om muruga saranam !
    om saravana bhava !
    om kandha saranam !
    om kathirvela saranam !
    om shanmuga saranam !
    om kadamba saranam !
    om palaniappa saranam !
    om senthilvela saranam !
    om shanmuga natha saranam !
    om subbiah saranam !
    om subramaniya saranam !

    ReplyDelete
  4. ////Blogger வேப்பிலை said...
    முருகா...
    முருகா...//////

    உருவாய்...
    அருவாய்......
    வருவாய்......
    அருள்வாய்....
    குகனே!

    ReplyDelete
  5. /////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த இசைப்பாடல் பகிர்வு/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  6. //////Blogger venkatesh r said...
    வெற்றி வடிவேலனே! சக்தி உமை பாலனே!
    வீரம் விளைத்த குகனே!
    உற்றதொரு பகை வெல்ல தோளிலும் நெஞ்சிலும்
    ஓங்கிடும் வலிமை அருள்வாய்! அருள்வாய்!
    மனம் கனிந்தருள் வேல் முருகா! புள்ளி
    மயிலேறும் மால் மருகா! முருகா!
    (மனம்)
    குறத்தி மணாளா! குணசீலா! ஞான
    குருபரனே! செந்தில் வடிவேலா!
    செந்தமிழ்த் தேவா! சந்ததம் நீ காவாய்!
    வேதனே - ஞான போதனே - சுவாமி நாதனே - எமது வேதனை தீர
    (மனம்)
    தோகை வள்ளி தனை - நாடி வேங்கை மர - மாகி நின்றாயடா!
    வேலெடுத்து விளை - யாடி மாமலையைத் - தூளடித்த முருகா!
    சூரபத்மன் இரு - கூறு பட்டொழிய - போர் முடித்த குமரா!

    படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
    இசை: ஜி. ராமனாதன் (எ) ஜிரா
    குரல்: எஸ். வரலட்சுமி
    வரி: கவிஞர். கு.மா.பாலசுப்பிரமணியம்/////

    ந்ல்ல பாடல். அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. //////Blogger murali krishna g said...
    om muruga saranam !
    om saravana bhava !
    om kandha saranam !
    om kathirvela saranam !
    om shanmuga saranam !
    om kadamba saranam !
    om palaniappa saranam !
    om senthilvela saranam !
    om shanmuga natha saranam !
    om subbiah saranam !
    om subramaniya saranam !//////

    ஓம் சரவணா போற்றி!!
    ஓம் சண்முகா போற்றி!!

    ReplyDelete
  8. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா////

    வணக்கம் சகோதரி. நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger சே. குமார் said...
    முருகா... எம்பெருமானே.../////

    ஒளியாய்...
    கதிராய்....
    கருவாய்.....
    வருவாய்....
    அருள்வாய்!
    முருகா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com