13.6.14

Devotional: அறிவுக் கண்ணத் திறப்பது எது?

 

Devotional: அறிவுக் கண்ணத் திறப்பது எது? 

பக்தி மலர் 

இன்றைய பக்திமலரை திருமதிகள் சூலமங்கலம் சகோதரிகள் பக்திப் பரவசத்துடன் பாடிய பாடலொன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா - அதை
தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா?  - முருகன்
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா

அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து - நல்ல
அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து
அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து - நல்ல
அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து

அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து - நல்ல
ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும் மருந்து

வேலன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

கன்னியரைக் கற்பு வழியில் நடத்தும் மருந்து
இளங் காளையரைக் காலமெல்லாம் காக்கும் மருந்து

மங்கையர்க்கு மழலைச்செல்வம் கொடுக்கும் மருந்து
திருமங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து

குமரன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

கற்பனையில் கவிதைப்பாட செய்யும் மருந்து
பெருங் கள்வரையும் திருந்தி வாழ செய்யும் மருந்து

முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து
நம் வாழ்வில் நல்ல செல்வமெல்லாம் சேர்க்கும் மருந்து

கந்தன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா?

முருகன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

  
- பாடியவர்கள்: 'சூலமங்கலம்' சகோதரிகள்

பாடலின் காணொளி வடிவம்:
our sincere thanks to the person who uploaded this song in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
------------------------------------------------------------------------------------------------------

14 comments:

  1. முருகா..
    முருகா..

    இன்று ஷஷ்டி
    இப்படி முருகனை சிந்திப்பதில்

    இதைவிட பேறு வேறென்ன
    இந்த பிறவியில் வேண்டும்?!

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
  3. நல்ல பசுவின் சாண வராட்டி (கவுரி பாத்திரம்) அளிக்கும் சாம்பலே மருந்தாக உதவும். இப்போது கிடைப்பதோ காகிதக் கழிவுகள் எரிக்கப்பட்டு வெள்ளை ஆவதற்கு ரசாயனம் சேர்க்கப்பட்ட திருநீரு தான். அது மருந்தாகாது.

    ஆனால் பாடல் நல்ல சுவை.நன்றி ஐயா!

    ReplyDelete
  4. இன்று குரு பெயர்ச்சி. இந்த நாளில் தந்தைக்கே குருவாகி ஓம் என்ற‌ மந்திரத்தை உபதேசித்த சுவாமி நாதனின் திருநீறு மருந்து என்னவெல்லாம் செய்யும் என்று சூலமங்கலம் சகோதரிகளின் குரல் வளத்தில் அருமையான பதிவு.மிதுனத்தில் இருந்து கடகத்திற்குஇ மாறும் குரு பகவான் அனைவருக்கும் நல்ல பலன்களை அள்ளித் தர அந்த முருகப் பெருமான் அருள் புரியட்டும். அது சரி! தெரியுமாவில் குறில் "ர"வா? அல்லது நெடில் "ற"வா?

    ReplyDelete
  5. ///////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..
    இன்று ஷஷ்டி
    இப்படி முருகனை சிந்திப்பதில்
    இதைவிட பேறு வேறென்ன
    இந்த பிறவியில் வேண்டும்?//////

    18.6.2014 புதன்கிழமையன்றுதான் சஷ்டி வேப்பிலையாரே! இன்று அல்ல!

    ReplyDelete
  6. /////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு!//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger kmr.krishnan said...
    நல்ல பசுவின் சாண வராட்டி (கவுரி பாத்திரம்) அளிக்கும் சாம்பலே மருந்தாக உதவும். இப்போது கிடைப்பதோ காகிதக் கழிவுகள் எரிக்கப்பட்டு வெள்ளை ஆவதற்கு ரசாயனம் சேர்க்கப்பட்ட திருநீரு தான். அது மருந்தாகாது.
    ஆனால் பாடல் நல்ல சுவை.நன்றி ஐயா!/////

    உண்மைதான். சாணவராட்டி விபூதி எல்லாம் இப்போது கிடைப்பதில்லை என்பதே உண்மை. கலப்படக்காரர்கள் விபூதியையும் விட்டுவைக்கவில்லை.

    ReplyDelete
  8. /////Blogger venkatesh r said...
    இன்று குரு பெயர்ச்சி. இந்த நாளில் தந்தைக்கே குருவாகி ஓம் என்ற‌ மந்திரத்தை உபதேசித்த சுவாமி நாதனின் திருநீறு மருந்து என்னவெல்லாம் செய்யும் என்று சூலமங்கலம் சகோதரிகளின் குரல் வளத்தில் அருமையான பதிவு.மிதுனத்தில் இருந்து கடகத்திற்குஇ மாறும் குரு பகவான் அனைவருக்கும் நல்ல பலன்களை அள்ளித் தர அந்த முருகப் பெருமான் அருள் புரியட்டும். அது சரி! தெரியுமாவில் குறில் "ர"வா? அல்லது நெடில் "ற"வா?////

    முருகனருள் முன்னிற்கும்! தெரியுமாவிற்குக் குறில் "ர" தான். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி நண்பரே!பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்!

    ReplyDelete
  9. ///18.6.2014 புதன்கிழமையன்றுதான் சஷ்டி வேப்பிலையாரே! இன்று அல்ல!//

    முருகனை நினைக்கும் ஒவ்வொரு
    முழு பொழுதும் சஷ்டி தான்

    ReplyDelete
  10. ///kmr.krishnan said...
    காகிதக் கழிவுகள் எரிக்கப்பட்டு வெள்ளை ஆவதற்கு ரசாயனம் சேர்க்கப்பட்ட திருநீரு தான். அது மருந்தாகாது.///

    இது தொடர்பாக
    இரண்டு செய்திகள் தோழரே

    ஒன்று...

    ஐந்தெழுத்து சொல்லித்தரும் எதுவும்
    ஐயமின்றி சொல்வோம் மருந்தென

    இரண்டு...

    நீங்கள் சொன்னபடி திருநீறு
    தயாரிப்பவர் உண்டு ஆனால்

    விலை அதிகம்.. காத்திருக்கனும்
    விவரம் வேண்டின் தருகிறோம்

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    ///18.6.2014 புதன்கிழமையன்றுதான் சஷ்டி வேப்பிலையாரே! இன்று அல்ல!//
    முருகனை நினைக்கும் ஒவ்வொரு
    முழுப் பொழுதும் சஷ்டி தான்////

    உண்மைதான். நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  12. ////Blogger வேப்பிலை said...
    ///kmr.krishnan said...
    காகிதக் கழிவுகள் எரிக்கப்பட்டு வெள்ளை ஆவதற்கு ரசாயனம் சேர்க்கப்பட்ட திருநீரு தான். அது மருந்தாகாது.///
    இது தொடர்பாக
    இரண்டு செய்திகள் தோழரே
    ஒன்று...
    ஐந்தெழுத்து சொல்லித்தரும் எதுவும்
    ஐயமின்றி சொல்வோம் மருந்தென
    இரண்டு...
    நீங்கள் சொன்னபடி திருநீறு
    தயாரிப்பவர் உண்டு ஆனால்
    விலை அதிகம்.. காத்திருக்கனும்
    விவரம் வேண்டின் தருகிறோம்/////

    தருகிறோம் என்று எதற்காக கொக்கி? தாருங்கள். வாங்கிப் பயனடைகிறோம்!

    ReplyDelete
  13. ///Subbiah Veerappan said...
    தருகிறோம் என்று எதற்காக கொக்கி? தாருங்கள். வாங்கிப் பயனடைகிறோம்!///

    thirumoolar vibhuthi, 56/45A Mew Agrajara, Palani Road, Dindigul 624001. email:thirumoolarvibhuthi@gmail.com

    alternatively (if stationed out of Tamilnadu)
    GOVINDAN GOSHALA,GUDALUR VILLAGE,
    MADURANTAKAM,Tel : 98400-41151 email:rk@goseva.net

    ReplyDelete
  14. ////Blogger வேப்பிலை said...
    ///Subbiah Veerappan said...
    தருகிறோம் என்று எதற்காக கொக்கி? தாருங்கள். வாங்கிப் பயனடைகிறோம்!///
    thirumoolar vibhuthi, 56/45A Mew Agrajara, Palani Road, Dindigul 624001. email:thirumoolarvibhuthi@gmail.com

    alternatively (if stationed out of Tamilnadu)
    GOVINDAN GOSHALA,GUDALUR VILLAGE,
    MADURANTAKAM,Tel : 98400-41151 email:rk@goseva.net
    Monday, June 16, 2014 9:07:00 AM/////
    -------------------------------------------------

    தகவலுக்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com