9.5.14

மனதிற்கு எப்போது ஆறுதல் கிடைக்கும்?

 
மனதிற்கு எப்போது ஆறுதல் கிடைக்கும்?

பக்திமலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பாடலொன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து/பாராயணம் செய்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------
சுட்ட திருநீறெடுத்து ... தொட்டகையில் வேலெடுத்து
தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் ...
அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்த வடிவேலவனைக்
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்

(சுட்ட திருநீறெடுத்து ... )

ஆறெழுத்து மந்திரத்துள் ஆடும் ஒரு சுந்தரத்தை
அந்திப் பகல் சிந்தனை செய் நெஞ்சமே
அந்திப் பகல் சிந்தனை செய் நெஞ்சமே

அந்த ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும்
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே

(சுட்ட திருநீறெடுத்து ... )

கந்தனடியே நினைந்து சங்கத்தமிழ் மாலை கொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே (2)

பரங் குன்றுவளர் இந்ததொரு கன்றுவழங்கும் நமக்கு
நின்றுவளர் செல்வம் பதினாறுமே
நின்றுவளர் செல்வம் பதினாறுமே

(சுட்ட திருநீறெடுத்து ... )

அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைக்
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்.

- பாடியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. இந்த பாடலை பல முறை ஒலி வடிவில் கேட்டிருக்கிறேன். நல்லதொரு அருமையான கேட்க இனிமையான பாடல். இங்கு பகிர்ந்ததின் மூலம் மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள். நன்றி

    ReplyDelete
  2. இந்த அருமையான பாடலை இயற்றியவர் - திருமதி சௌந்தரா கைலாசம் அம்மையார் அல்லவா!..

    80-களில் இந்தப் பாடல் வெளியானது என்று நினைவு.

    இந்தப் பாடலை எப்போது சிந்தை செய்தாலும் கண்களில் நீர் வழியும் ஐயா!..

    இனிய காலையில் மனம் குளிர்ந்தது.

    ReplyDelete
  3. என்றும் புதியது
    பாடலென்றும் புதியது
    பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது

    ReplyDelete
  4. /////Blogger Kirupanandan A said...
    இந்த பாடலை பல முறை ஒலி வடிவில் கேட்டிருக்கிறேன். நல்லதொரு அருமையான கேட்க இனிமையான பாடல். இங்கு பகிர்ந்ததின் மூலம் மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள். நன்றி/////

    முருகன் பாடல்கள் எல்லாமுமே கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கும். நன்றி கிருபானந்தன்!

    ReplyDelete
  5. /////Blogger துரை செல்வராஜூ said...
    இந்த அருமையான பாடலை இயற்றியவர் - திருமதி சௌந்தரா கைலாசம் அம்மையார் அல்லவா!..
    80-களில் இந்தப் பாடல் வெளியானது என்று நினைவு.
    இந்தப் பாடலை எப்போது சிந்தை செய்தாலும் கண்களில் நீர் வழியும் ஐயா!..
    இனிய காலையில் மனம் குளிர்ந்தது.////

    ஆமாம். அந்த அம்மையார் எழுதிய பாடல்தான் அது. உங்களுடைய நெகிழ்ச்சியான பின்னூட்டத்த்ற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. /////Blogger venkatesh r said...
    என்றும் புதியது
    பாடலென்றும் புதியது
    பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
    முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது/////

    உங்களுடைய பின்னூட்டமும் புதியதுதான்! நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com