11.4.14

Devotional: நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே!

 
 மேலே படத்தில் உள்ள முருகன் கோவில் - எந்த ஊரில் உள்ளது?
 
Devotional: நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

பக்தி மலர்

11.4.2014

கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும்
கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்

நீ ...
(கற்பனை என்றாலும் ... )

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அறுமறை தேடிடும் கருணையங் கடலே
(கற்பனை என்றாலும் ... )

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
(கற்பனை என்றாலும் ... )

கந்தனே உனை மறவேன் ...     


பாடலைப் பாடியவர் 'பத்மஸ்ரீ' T.M. செளந்தரராஜன்
பாடலாக்கம்: கவிஞர் வாலி (T.S. ரெங்கராஜன்)

=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. மலேசிய நாட்டில் சித்தியவான் பட்டணத்தில் உள்ள முருகர் ஆலயம் இது.

    நல்ல பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. திருமுருகன் அவதாரத்தின் போது கார்த்திகைப் பெண்களுக்கு தெரிவதற்கு முன்பாகவே சப்த ரிஷிகளின் பத்தினிகளுக்கு ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு
    அளிக்கப்பட்டதாம்.ரிஷிபத்தினிகள் அந்தக் குழந்தையின் மகத்துவம் அறியாமல் பொறுப்பினை ஏற்க மறுத்து விட்டார்களாம்.இதைப் பின்னர் அறிந்த சப்த ரிஷிகள்
    தங்கள் மனைவிமார்களைக் கோபித்துப் புறக்கணித்து விட்டார்களாம்.ரிஷி பத்தினிகள் முருகனிடமே போய் முறையிட்டார்களாம். முருகனும் ரிஷிகளை பூலோகத்திற்குச் சென்று தவம் செய்து திரும்பி வரப் பணித்துவிட்டாராம்.பல க்ஷேத்திரங்களையும் தரிசித்து திருவையாற்றில் லால்குடி செல்ல உத்தர‌வாகி
    லால்குடியில் வந்து தவம் செய்தனராம். தவத்தினை மெச்சி பரமசிவன் அக்னிப் பிழம்பாக வந்து எழுவரையும் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டாராம்.

    'பண்டெழுவர் தவத்துறை'என்பார் அப்பர் ஸ்வாமிகள்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!

    ஓவ்வொரு வெள்ளியன்றும் வெளிவரும் கந்தனின் பக்தி பாமாலை எனக்கு பிடித்த ஒன்று. அவற்றில் எனக்கு பிடித்த பாடல் இதோ!

    குரல்: TMS வரிகள்: MP Sivam

    கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
    குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்
    (கந்தன்)

    சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
    வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
    அந்தநேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
    சிந்தையைக் குளிரவைத்துச் சொந்தம் கொண்டாடிடுவாள்
    (கந்தன்)

    மணம்மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
    மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
    தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
    தீர்ந்திடும் துன்பமெல்லாம் தெய்வம்துணை தாருமடா
    (கந்தன்)

    ReplyDelete
  4. Ayya, Why no Padmashree for Vaali ?

    ReplyDelete
  5. கேட்கும் பொழுது மனதிற்கு பரவசம் தரும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று .பகிர்வுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  6. ////venkatesh r said...
    ஓவ்வொரு வெள்ளியன்றும் வெளிவரும் கந்தனின் பக்தி பாமாலை எனக்கு பிடித்த ஒன்று. ///

    சுக்குக்கு மிஞ்சிய மருதில்லை
    சுப்பிரமணிக்கு மிஞ்சிய

    தெய்வமில்லை என்பது
    தென்புலத்து சொல்லடை

    தினமும் ஒரு பாடல்
    அதிகாலையில் அனுப்புகிறேன்

    அந்த ஆறுமுகனுக்கும்
    இந்த சுப்பையாவுக்குமது தெரியும்

    ReplyDelete
  7. ஐயா,

    நான் http://www.galaxy2007.com
    வகுப்பில் சேர விரும்புகிறேன் தாங்கள் அதற்கான verification code ஐ
    பெருவது எப்படி என்பதை எனக்கு தேரிவிக்கவும் .
    நன்றி

    ReplyDelete
  8. ////Blogger Kirupanandan A said...
    மலேசிய நாட்டில் சித்தியவான் பட்டணத்தில் உள்ள முருகர் ஆலயம் இது.
    நல்ல பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி.////

    கரெக்ட்! சரியாகச் சொன்னீர்கள். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    திருமுருகன் அவதாரத்தின் போது கார்த்திகைப் பெண்களுக்கு தெரிவதற்கு முன்பாகவே சப்த ரிஷிகளின் பத்தினிகளுக்கு ஆறுமுகனை வளர்க்கும் பொறுப்பு
    அளிக்கப்பட்டதாம்.ரிஷிபத்தினிகள் அந்தக் குழந்தையின் மகத்துவம் அறியாமல் பொறுப்பினை ஏற்க மறுத்து விட்டார்களாம்.இதைப் பின்னர் அறிந்த சப்த ரிஷிகள்
    தங்கள் மனைவிமார்களைக் கோபித்துப் புறக்கணித்து விட்டார்களாம்.ரிஷி பத்தினிகள் முருகனிடமே போய் முறையிட்டார்களாம். முருகனும் ரிஷிகளை பூலோகத்திற்குச் சென்று தவம் செய்து திரும்பி வரப் பணித்துவிட்டாராம்.பல க்ஷேத்திரங்களையும் தரிசித்து திருவையாற்றில் லால்குடி செல்ல உத்தர‌வாகி லால்குடியில் வந்து தவம் செய்தனராம். தவத்தினை மெச்சி பரமசிவன் அக்னிப் பிழம்பாக வந்து எழுவரையும் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டாராம்.
    'பண்டெழுவர் தவத்துறை'என்பார் அப்பர் ஸ்வாமிகள்.////

    உங்களின் புதிய செய்திக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. ////Blogger venkatesh r said...
    வணக்கம் ஐயா!
    ஓவ்வொரு வெள்ளியன்றும் வெளிவரும் கந்தனின் பக்தி பாமாலை எனக்கு பிடித்த ஒன்று. அவற்றில் எனக்கு பிடித்த பாடல் இதோ!
    குரல்: TMS வரிகள்: MP Sivam
    கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
    குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்
    (கந்தன்)
    சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
    வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
    அந்தநேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
    சிந்தையைக் குளிரவைத்துச் சொந்தம் கொண்டாடிடுவாள்
    (கந்தன்)
    மணம்மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
    மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
    தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
    தீர்ந்திடும் துன்பமெல்லாம் தெய்வம்துணை தாருமடா
    (கந்தன்)//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் பாடல் வரிகளுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger Prabhu Navaneethakrishnan said...
    Ayya, Why no Padmashree for Vaali ?/////

    கொடுத்தார்களா? அல்லது கொடுக்கவில்லையா? தெரியவில்லையே சாமி!

    ReplyDelete
  12. /////Blogger M.R said...
    கேட்கும் பொழுது மனதிற்கு பரவசம் தரும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று .பகிர்வுக்கு நன்றி ஐயா////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger Kumar said...
    ஐயா,
    நான் http://www.galaxy2007.com
    வகுப்பில் சேர விரும்புகிறேன் தாங்கள் அதற்கான verification code ஐ
    பெருவது எப்படி என்பதை எனக்கு தேரிவிக்கவும் .
    நன்றி/////

    Please send a mail to my mail ID: classroom2007@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com