14.3.14

Film Songs அன்றும் இன்றும்


Film Songs அன்றும் இன்றும்

வாரம் முழுவதும் ஜோதிடத்தையே புரட்டிக்கொண்டு இருக்காமல், இன்று சற்று மனம் மாற்றத்திற்காக திரையிசைப் பாடல்களைப் பார்ப்போம்.
1958ஆம் ஆண்டில் வெளிவந்த படப் பாடல் ஒன்றையும், சமீபத்தில் வெளிவந்த படப் பாடல் ஒன்றையும் கொடுத்திருக்கிறேன்.

தொழில் நுட்ப வளர்ச்சியால் இப்போது வரும் திரையிசைப் பாடல்களும் தனித் தன்மை பெறுவது காலத்தின் கட்டாயமாகிறது.

இரசனை என்பது தனி மனித உணர்வு. தனி மனித சம்பந்தமானது. இரண்டு பாடல்களுமே உங்கள் மனதைத் தொடுமானால் எனக்கு மகிழ்ச்சியே!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------
முதலில் அன்று வந்த பழைய பாடல்:

படம்: நாடோடி மன்னன் (1958)
பாடியவர்கள்: டி.எம்.செளந்தரராஜன் & ஜிக்கி
பாடலாக்கம்: கவிஞர் சுரதா
நடிப்பு: புரட்சித்தலைவர் & சரோஜாதேவி

--------------------------------------------------
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
நீல வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி யேதும் இல்லை
அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி
அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே
உன்னை உன்னை தேடுதே ....
கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)


பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this song in the net

)
=============================================================
2. இன்றையப் பாடல்

படம்: டிஷ்யும் (2006)
நடிப்பு: ஜீவா & சந்தியா
பாடலாக்கம்: கவிஞர் வைரமுத்து
இசை: விஜய்ஆன்ட்டனி
பாடியவர்கள்: காயத்ரி,விஜய்ஆன்ட்டனி

----------------------------------------
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்


பாடலின் காணொளி வடிவம்
)

Our sincere thanks to the person who uploaded this song in the net

------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

12 comments:

  1. எதை எதனோடு ஒப்பிடுவது
    என ஒரு முறை உண்டு தானே

    நாடோடி மன்னனை
    நாம் டிஷ்யும் போட வைத்தால்

    மாசி பங்குனியில்
    மழை வந்தால் அது கோடை மழை

    மழை காலத்தில் வெய்யில்
    மலர்ந்தால் அது இள வெயில்..

    வெயில் காலத்தில்
    வெளியே வராமல் ஏசியிலும்

    குளிர் காலத்தில் ஹீட்டரினருகே
    குந்திக்கிட்டு இருப்பதும்

    நம்மை ஏமாற்றிக்கொள்ளும்
    நம்முடன் உள்ள மூட பழக்கமே

    ReplyDelete
  2. வெள்ளிக்கிழமை தானே இன்று..
    வெறுமை தரும் சினிமா பாடலா..

    இறையிசை யின்றி
    திரையிசை வருவதும்

    காலத்தின்
    கோலமோ..

    ReplyDelete
  3. ஐயா வணக்கம்.

    ஜோதிட பாடத்திற்கு இன்று விடுமுறை விட்டு பழைய மற்றும் புது பாடலை சுழல விட்டுள்ளீர்!. நன்று. பொழுது போக்கிற்கு அப்பப்ப கதையும் விட வேண்டியதுதானே! அதான் ஐயா "விடுகதை".

    உதாரணத்திற்கு ஒன்று,இதோ!

    //வெட்டினதால் தப்பி விட்டேன்,
    வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!

    செத்ததனால் தப்பிவிட்டேன்
    சாகாவிட்டால் செத்திருப்பேன்!

    வந்ததனால் வரவில்லை
    வராவிட்டால் வந்திருப்பேன்!

    நான் யாரு?//

    ReplyDelete
  4. அன்றைய பாடல்களில் கருத்து இருந்தது. இனிமையான இசையால் அனைவரையும் வசமாக்கியது.

    இன்றைய பாடல்களில் கருத்து என்பதும் இல்லை... அழகான தமிழும் இல்லை... இரைச்சலான இசையோடு பயணித்தாலும் இளையராஜாவின் தாலாட்டு போல் இசை என்றும் இல்லை....

    ReplyDelete
  5. இரசனை ஒவ்வொருவருக்கு மாறுபடுகிறது. எனக்கு பழைய புதிய பாடல்கள் என்ற பேதம் இல்லை. எம்.எஸ்.வி, கே.வி.எம் காலத்து இசையையும் இரசித்தோம், இளையராஜாவின் இசையையும் இரசித்தோம், இன்று ஏ.ஆர்.இரஹ்மான் இசையையும் இரசிக்கிறோம். இன்றைய இசை இரைச்சலாக உள்ளது என்றும் நல்ல தமிழ் இல்லை என்றும் சிலர் குறை கூறியிருக்கின்றனர். அதில் முழுதும் உண்மை இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அந்த காலத்து பாடல்களிலும் சில சமயம் நல்ல தமிழ் இருந்ததில்லை. "எலந்த பழம்" என்ற பாடல் அன்று பெரிய ஹிட்டானது. எனக்கு அந்த பாடலை கேட்டாலே முகம் தானாக சுழிக்கும். இளையராஜா இசையில் "நேத்து இராத்திரி யம்மா" என்ற பாடலில் என்ன தமிழ் வளம் இருந்தது? அதுவும் ஜானகியம்மா பாடலில் செய்யும் முக்கலும் முனகலும் கொடுமையாக எனக்கு பட்டது. ஆனால் பலருக்கு பிடித்திருந்தது. இந்த பாடல்கள் எப்படி அந்த இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு விலாசமாக அமையாதோ அது போலவே இரைச்சலான சில பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கு விலாசமாக அமையாது. இரஹ்மானின் இசையில் "கோச்சடையான்" படத்தில் வெளிவந்திருக்கும் "மணப்பெண்ணின் சத்தியம்" பாடல் சிறிதும் இரைச்சலில்லாமல் பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இசை அடக்கி வாசிக்கப் பட்டிருக்கிறது. இது போல் எண்ணற்ற பாடல்கள் உள்ளன. இன்றைய இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் எந்த விதத்திலும் நேற்றையவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.

    ReplyDelete
  6. பயன்தரும் பகிர்வு
    தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  7. ////Blogger வேப்பிலை said...
    எதை எதனோடு ஒப்பிடுவது
    என ஒரு முறை உண்டு தானே
    நாடோடி மன்னனை
    நாம் டிஷ்யும் போட வைத்தால்
    மாசி பங்குனியில்
    மழை வந்தால் அது கோடை மழை
    மழை காலத்தில் வெய்யில்
    மலர்ந்தால் அது இள வெயில்..
    வெயில் காலத்தில்
    வெளியே வராமல் ஏசியிலும்
    குளிர் காலத்தில் ஹீட்டரினருகே
    குந்திக்கிட்டு இருப்பதும்
    நம்மை ஏமாற்றிக்கொள்ளும்
    நம்முடன் உள்ள மூட பழக்கமே////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  8. /////Blogger வேப்பிலை said...
    வெள்ளிக்கிழமை தானே இன்று..
    வெறுமை தரும் சினிமா பாடலா..
    இறையிசை யின்றி
    திரையிசை வருவதும்
    காலத்தின்
    கோலமோ..////

    புள்ளியும் இல்லை. கோலமும் இல்லை. 100ற்கும் மேற்பட்ட முருகன் பாமாலைப் பாடல்களை இதுவரை வலை ஏற்றியுள்ளேன். சற்று இடைவெளி விடலாம் என்றுதான் நான்கைந்து வாரங்களாகப் பாடல்களை வலை ஏற்றவில்லை! அடுத்த வெள்ளி முதல் மீண்டும் பாமாலைகள் தொடரும். நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  9. //////Blogger venkatesh r said...
    ஐயா வணக்கம்.
    ஜோதிட பாடத்திற்கு இன்று விடுமுறை விட்டு பழைய மற்றும் புது பாடலை சுழல விட்டுள்ளீர்!. நன்று. பொழுது போக்கிற்கு அப்பப்ப கதையும் விட வேண்டியதுதானே! அதான் ஐயா "விடுகதை".
    உதாரணத்திற்கு ஒன்று,இதோ!
    //வெட்டினதால் தப்பி விட்டேன்,
    வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!
    செத்ததனால் தப்பிவிட்டேன்
    சாகாவிட்டால் செத்திருப்பேன்!
    வந்ததனால் வரவில்லை
    வராவிட்டால் வந்திருப்பேன்!
    நான் யாரு?//

    உங்களின் யோசனைக்கு நன்றி. பார்க்கலாம்!

    ReplyDelete
  10. ////Blogger சே. குமார் said...
    அன்றைய பாடல்களில் கருத்து இருந்தது. இனிமையான இசையால் அனைவரையும் வசமாக்கியது.
    இன்றைய பாடல்களில் கருத்து என்பதும் இல்லை... அழகான தமிழும் இல்லை... இரைச்சலான இசையோடு பயணித்தாலும் இளையராஜாவின் தாலாட்டு போல் இசை என்றும் இல்லை....//////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  11. /////Blogger thozhar pandian said...
    இரசனை ஒவ்வொருவருக்கு மாறுபடுகிறது. எனக்கு பழைய புதிய பாடல்கள் என்ற பேதம் இல்லை. எம்.எஸ்.வி, கே.வி.எம் காலத்து இசையையும் இரசித்தோம், இளையராஜாவின் இசையையும் இரசித்தோம், இன்று ஏ.ஆர்.இரஹ்மான் இசையையும் இரசிக்கிறோம். இன்றைய இசை இரைச்சலாக உள்ளது என்றும் நல்ல தமிழ் இல்லை என்றும் சிலர் குறை கூறியிருக்கின்றனர். அதில் முழுதும் உண்மை இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அந்த காலத்து பாடல்களிலும் சில சமயம் நல்ல தமிழ் இருந்ததில்லை. "எலந்த பழம்" என்ற பாடல் அன்று பெரிய ஹிட்டானது. எனக்கு அந்த பாடலை கேட்டாலே முகம் தானாக சுழிக்கும். இளையராஜா இசையில் "நேத்து இராத்திரி யம்மா" என்ற பாடலில் என்ன தமிழ் வளம் இருந்தது? அதுவும் ஜானகியம்மா பாடலில் செய்யும் முக்கலும் முனகலும் கொடுமையாக எனக்கு பட்டது. ஆனால் பலருக்கு பிடித்திருந்தது. இந்த பாடல்கள் எப்படி அந்த இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு விலாசமாக அமையாதோ அது போலவே இரைச்சலான சில பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கு விலாசமாக அமையாது. இரஹ்மானின் இசையில் "கோச்சடையான்" படத்தில் வெளிவந்திருக்கும் "மணப்பெண்ணின் சத்தியம்" பாடல் சிறிதும் இரைச்சலில்லாமல் பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இசை அடக்கி வாசிக்கப் பட்டிருக்கிறது. இது போல் எண்ணற்ற பாடல்கள் உள்ளன. இன்றைய இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் எந்த விதத்திலும் நேற்றையவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல.////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி பாண்டியரே!!

    ReplyDelete
  12. /////Blogger Jeevalingam Kasirajalingam said...
    பயன்தரும் பகிர்வு
    தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com