7.3.14

வேலுண்டு மயிலுண்டு வினை என்ன செய்யும்?

 

வேலுண்டு மயிலுண்டு வினை என்ன செய்யும்?

பக்திமலர்

வேல் வந்து வினை தீர்க்கும்!

வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி

பால் கொண்டு நீராடி பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி
பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில்
கந்தன் எனை கண்டானடி எந்தன் சிந்தையில் நின்றானடி

வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி
அந்த காட்சி என்றும் இனிக்குமடி 
(வேல்)

----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. செந்துர் முருகனை
    சிந்தையில் பதிக்க

    வந்தபாடலுக்கும்
    வடிவேல் அழகனுக்கும்

    நன்றி..
    நன்றி..

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்.

    பழனி மலை மீதிலே
    குழந்தை வடிவாகவே
    படைவீடு கொண்ட முருகா

    பால் பழம் தேனோடு,
    பஞ்சாமிர்தம் தந்து,
    பக்தரைக் காக்கும் முருகா!

    ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! - சக்தி
    வடிவுண்டு, மயிலுண்டு, கொடியுண்டு! வேல் வேல்!
    ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்!

    (பழனி மலைத் தங்க ரதக் காட்சிகள்...)

    வடம் இட்ட பசும் தங்கத் தேரு
    எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு
    இடைத் தொட்ட கைக்கொண்ட பிள்ளை - எங்கள்
    இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை!

    வேல் வேல்!
    சக்தி வேல் வேல்!
    வெற்றி வேல் வேல்!
    ஞான வேல் வேல்!
    *********************************

    என் கண்ணாளா முருகா....
    கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது?
    குழந்தையின் வடிவிலே யார் வந்தது?
    நீறிட்ட நெற்றியுடன் யார் வந்தது?
    நெஞ்சம் துடிக்குதே யார் வந்தது?
    யார் வந்தது? யார் வந்தது?......

    படம்: துணைவன்
    குரல்: கே.பி.சுந்தராம்பாள்
    இசை: கே.வி.மகாதேவன்

    ReplyDelete
  3. "வேல் வந்து வினை தீர்க்க
    மயில் வந்து வழி காட்ட" என்ற
    பாடலை வரவேற்கிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com