12.12.13

செஞ்ச்சுரி அடித்த வீடுகள்!


செஞ்ச்சுரி அடித்த வீடுகள்!

மனிதர்கள்தான் செஞ்ச்சுரி அடிப்பார்களா? செட்டி நாட்டுப் பகுதியில் பல வீடுகளும் செஞ்சுரி அடித்துள்ளன. காரைக்குடி, தேவகோட்டை,ஆத்தங்குடி,  வலையபட்டி, கண்டனூர், கானாடுகாத்தான் என்று மொத்தம் 75 ஊர்கள் உள்ளன. அவற்றில் மொத்தம் 6,000ற்கும் மேற்பட்ட வீடுகள்உள்ளன. எல்லா வீடுகளுமே நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்றவை. பொக்லைன், ஜே;பிசி இயந்திரங்கள், ஹைடெக் சிமெண்ட், கட்டுமானப்பொருட்கள், ஆர்க்கிடெக்ட்டுகள், மற்றும் பொறியாளர்கள் என்று எந்த வசதியும் இல்லாத காலத்தில் பர்மா தேக்குமரங்களைப் பிரதானமாக(அதாவது உத்திரங் களாகவும் தூண்களாகவும்) வைத்துக் கட்டப்பெற்ற வீடுகள் அவைகள். அதை மனதில் வையுங்கள்.

தற்சமயம் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள், சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. பல வீடுகள் நன்கு பராமரிக்கப்பெற்று வருகின்றன.

எங்கள் வீடு கட்டப்பெற்று 118 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் நல்ல நிலைமையில் உள்ளது. ஊருக்குச் சென்றால் அங்கேதான் தங்குகிறோம்.

எல்லா வீடுகளூமே சராசரியாக 33 செண்ட் நிலத்தில் முழுப்பரப்பளவில் கட்டப்பெற்றவை. கட்டங்கள் 24, 000 சதுர அடிகள் முதல் 40,000 சதுர
அடிகள் வரை பரப்பளவு உள்ளவை.

அவைகள் கட்டப்பெற்ற காலத்தில் ஒரு பவுனின் விலை 13 ரூபாய் மட்டுமே. கொத்தனார் சம்பளம் (தினக்கூலி) 4 அணா. அதாவது 25 பைசாக்கள்.
சித்தாள் எனும் எடுபிடி ஆளின் சம்பளம் அதில் பாதிதான். அதாவது இரண்டனா மட்டுமே!

உங்கள் பார்வைக்காக அந்த வீடுகளில் இரண்டை இன்றையப் பதிவில் கொடுத்துள்ளேன்.

சன் டிவியில், நாதஸ்வரம் சீரியல் பார்க்கிறீர்கள் அல்லவா? அதில் வரும் பெரிய வீடுகள் இரண்டும் செட்டிநாட்டில் உள்ளவைதான்!

அன்புடன்
வாத்தியார்.

====================================================
செட்டிநாட்டு வீடுகள்
Our sincere thanks to the persons who uploaded these video clippings in the net




2 ஆத்தங்குடியில் உள்ள ஒரு வீடு - உங்கள் பார்வைக்கு



====================================================
   “வாத்தி (யார்), முகப்பில் ரஜினியின் படம் எதற்கு?”

   “இன்று அவருக்குப் பிறந்த நாள் சாமிகளா? வாழ்த்துச் சொல்வதற்காகத்தான்!ஒரு வாழ்த்தைச் சொல்லி விடுவோம்!”
Many more Happy return of the day Rajini Kanth!

===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. என்னுடைய அமெரிக்க நண்பரிடம் நேற்று 11-12-13 (பாரதியார் பிறந்த நாள் மற்றும் 11, 12, 13 என்று ஏறுமுகமாக இருப்பது. வருடத்தில் ஒரு நாள் இப்படி வரும்) ஒரு தனித்தன்மை கொண்டது என்றேன்.

    அவர், அமெரிக்கர்களுக்கு அது போன மாதமே வந்து விட்டது என்று பெருமையுடன் சொன்னார். (அவர்கள் நவம்பர் 12ஆம் தேதியை 11-12-13 என்று எழுதுவார்கள்).

    உடனே நான் சொன்னேன், 'ஆனால் சூப்பர் ஸ்டார் பிறக்கும் போதே, தன்னுடைய பிறந்த நாள் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஒரே நாளில் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே 12-12 அன்று பிறந்தார் என்றேன். அவர் கப்சிப்பாகி விட்டார்.

    திரு.ரஜினி காந்தை வாழ்த்த வயதில்லை. ஆண்டவன் அருளால் அவர் நெடுநாட்கள் வாழ்வாராக!

    ReplyDelete
  2. காலம் கடந்து நிற்கும் வீடுகள்
    காணொளியாக தந்தமைக்கு நன்றி

    ரஜினிக் போட சொன்ன வாழ்த்து
    ரம்மியமானது.. பாராட்டுக்குரியது

    புரியாத உலகத்தில்
    தெரியாத மனிதராய்...

    ReplyDelete
  3. நூற்றாண்டினைக் கடந்த வீடுகளைப் போலவே -

    அந்த காலத்தில் தங்கம் விற்ற விலையும் மனதில் நிற்கின்றது.

    ReplyDelete
  4. செஞ்ச்சுரி அடித்த வீடுகள்!"
    கருத்தைக்கவர்ந்தன ..

    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. செஞ்சுரி அடிச்ச வீடுங்களப் பாக்கிறப்போ பொறாமையா இருக்கு!///வாத்தின்னா சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொல்லப்பிடாதா,என்ன?

    ReplyDelete
  6. /////Blogger Srinivasa Rajulu.M said...
    என்னுடைய அமெரிக்க நண்பரிடம் நேற்று 11-12-13 (பாரதியார் பிறந்த நாள் மற்றும் 11, 12, 13 என்று ஏறுமுகமாக இருப்பது. வருடத்தில் ஒரு நாள் இப்படி வரும்) ஒரு தனித்தன்மை கொண்டது என்றேன்.
    அவர், அமெரிக்கர்களுக்கு அது போன மாதமே வந்து விட்டது என்று பெருமையுடன் சொன்னார். (அவர்கள் நவம்பர் 12ஆம் தேதியை 11-12-13 என்று எழுதுவார்கள்).
    உடனே நான் சொன்னேன், 'ஆனால் சூப்பர் ஸ்டார் பிறக்கும் போதே, தன்னுடைய பிறந்த நாள் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஒரே நாளில் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே 12-12 அன்று பிறந்தார் என்றேன். அவர் கப்சிப்பாகி விட்டார்.
    திரு.ரஜினி காந்தை வாழ்த்த வயதில்லை. ஆண்டவன் அருளால் அவர் நெடுநாட்கள் வாழ்வாராக!/////

    எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது அவருடைய இறையுணர்வும் இறை பக்தியும்தான்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    காலம் கடந்து நிற்கும் வீடுகள்
    காணொளியாக தந்தமைக்கு நன்றி
    ரஜினிக் போட சொன்ன வாழ்த்து
    ரம்மியமானது.. பாராட்டுக்குரியது
    புரியாத உலகத்தில்
    தெரியாத மனிதராய்...//////

    நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  8. //////Blogger துரை செல்வராஜூ said...
    நூற்றாண்டினைக் கடந்த வீடுகளைப் போலவே -
    அந்த காலத்தில் தங்கம் விற்ற விலையும் மனதில் நிற்கின்றது./////

    அந்தக் காலத்தில் 75 கிலோ அரிசி மூட்டையின் விலை இரண்டு ரூபாய்தான் இருந்திருக்கிறது. சென்னையில் இருந்து ரங்கூனிற்கு (பர்மா) கப்பல் கட்டணம் (முதல் வகுப்பு) 96 ரூபாய்கள் தான் இருந்திருக்கிறது. மூன்றாம் வகுப்புக் கட்டணம். அதில் 3ல் ஒரு பங்குதான். பயண நேரம் ஆறு நாட்கள். நம்ப முடிகிறதா உங்களால்?

    ReplyDelete
  9. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    செஞ்ச்சுரி அடித்த வீடுகள்!"
    கருத்தைக்கவர்ந்தன ..
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. /////Blogger Subramaniam Yogarasa said...
    செஞ்சுரி அடிச்ச வீடுங்களப் பாக்கிறப்போ பொறாமையா இருக்கு!//////

    தற்சமயம், பல வீடுகள், மத்திய அரசின் உதவியுடன் நாட்டின் பாரம்பரியச் சின்னங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன, ஆகவே பெருமைப்படுவோம்!

    ReplyDelete
  11. Bharathiku valthu solla marantha kavinar(vathiyar)
    Rajiniku sollivitar."kavinar" enpathal
    bharathiyai maranthu erukalam.

    ReplyDelete
  12. Bharathiyai maranthalum
    Rajiniku valthu sollivitir ayya.kaviinar
    (vathiyar) enpathal bharathiyai maranthir pol.

    ReplyDelete
  13. /////Blogger Vetrivelan Sathi said...
    Bharathiku valthu solla marantha kavinar(vathiyar)
    Rajiniku sollivitar."kavinar" enpathal
    bharathiyai maranthu erukalam.//////
    ///////Blogger Vetrivelan Sathi said...
    Bharathiyai maranthalum
    Rajiniku valthu sollivitir ayya.kaviinar
    (vathiyar) enpathal bharathiyai maranthir pol.//////

    பாரதியை எப்படி மறக்க முடியும்? தூங்கிக்கொண்டிருந்த தமிழனைத் தட்டி எழுப்பியவர் ஆயிற்றே? நேரமின்மையால் குறிப்பிட விட்டுப் போய் விட்டது. தவறுதான். வருந்துகிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com